Arulvaan Review: அருள்வான் படம் எப்படி இருக்கு? வந்து நொந்த கதையை எடுக்கலாமா? ப்ளூ சட்டை மாறன் ஓபன் ரிவ்யூ
சென்னை: நடிகர் அருள்நிதி நடித்த படம் என்றாலே வித்தியாசமான கதைக்களம் இருக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் இருக்கிறது. அந்த வரிசையில் கணேஷ் விநாயக் இயக்கத்தில், ரம்யா பாண்டியன், ஆரவ், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள அருள்வான் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் வெளியாவதற்கு முன்பே பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த ப்ளூ சட்டை மாறன் கொடுத்த விமர்சனம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
பழங்குடியின மக்களின் வாழ்க்கை பெண் கல்வியின் அவசியம், மழைவால் மக்களின் உரிமை போன்ற பல கருத்துக்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம் குறித்து படத்தைப் பார்த்த பலரும் பாராட்டி வருகின்றனர். ஒரு சிலர் இது பெரிய அளவில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தவில்லை என்று சொல்கிறார்கள்.

அருள்வான் பட கதை
இந்த நிலையில் தான் ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய ரிவ்யூவில், ஒரு மலை கிராமத்தில் மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள். அங்கே ஒருத்தன் இல்லீகளாக வேலை செய்கிறான். அவனும் வனத்துறை அதிகாரியும் சேர்ந்து அந்த ஊர்காரங்களை காலி பண்ணனும்னு நினைக்கிறாங்க. அதுக்கப்புறம் என்ன ஆகுது? என்பது தான் கதையா என்று கேட்பீங்க? ஆனால் அது கதை கிடையாது. இன்னொரு மெயின் கதையை வச்சிருக்காங்க என்று கலாய்த்து பேசினர்.
மேலும் இப்போ இதுவரைக்கும் சொன்ன கதை எதுக்குன்னு கேட்டா அது மெயின் கதைக்கும் சொல்றாங்க போல என்று சிரித்தபடியே சொல்லிவிட்டு படத்தின் உண்மையான கதை பற்றி பேசும்போது, அந்த மலை கிராமத்தில் இருக்கிற ஒரு சின்ன பொண்ணு படிச்சு பெரிய கலெக்டராக வரணும்னு ஆசைப்படுது. கலெக்டரை நேரில் பார்த்தால் தான் அது நடக்கும்னு நெனச்சு ஊரைவிட்டு கிளம்புது. அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது தான் மெயின் கதை.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
ஆனால் இந்த கதையை சொல்லிய விதம்தான் அவருக்கு மாற்றத்தை கொடுத்ததாம். ஆனால் படத்தை பார்க்கும் போது நல்ல கதை கிடைச்சதுக்காக எடுத்த படம் மாதிரி தெரியல. ஒரு கால்ஷீட் கிடைச்சிருக்கு சரி எல்லாரையும் மலைக்கு கூட்டிட்டு போய் அங்கேயே கதை எழுதி படம் எடுத்து விடலாம் என்று எடுத்த மாதிரி இருக்கு என்று விமர்சித்து இருக்கிறார்.
விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன்
மேலும் இந்த படத்தின் மிகப்பெரிய குழப்பம் என்னவென்றால், மலைவாழ் மக்கள் காடர் மொழி பேசுறாங்க. படம் பார்க்கிறவர்களுக்கு புரியணும்னு தமிழ்ல சப்டைட்டில் போடுறாங்க அது ஓகே. ஆனா கேரக்டரே சில சீன்களில் தமிழ்ல பேசுறாங்க. அடுத்த சீனில் காடர் மொழியில் பேசுறாங்க. அந்த சின்ன பொண்ணு ஸ்கூல் டீச்சர் கிட்ட தமிழ்ல பேசுது கலெக்டர் கிட்ட மட்டும் காடர் மொழியில் பேசுகிறது.

அருள்வான் படம் விமர்சனம்
அதுமட்டுமல்லாமல் எனக்கு வேற மொழியே தெரியாதுன்னு சொல்லுறாங்க. இந்த ஒரு குழப்பமே படத்தை சுத்தமா காலி பண்ணிடுச்சு என்று கூறியிருக்கிறார். மேலும் படத்தில் சில இடங்களில் காந்தாரா மியூசிக் வர மாதிரி இருக்குது. கருமுட்டை காணும்னு பேசுறாங்க. இந்த படத்துக்கும் கருமுட்டைக்கும் என்ன சம்பந்தம்? என்னத்தையோ சொல்லி குழப்பி வைத்திருக்கிறார்கள்.

கடைசியில் பார்த்தால் பெண் கல்வி என்று சொல்லி ஈயம் பூசுறாங்க. விமர்சனம் பார்க்கும்போது உங்களுக்கே இவ்வளவு குழப்பமா இருக்கு என்றால் படம் பார்த்த எங்களுக்கு எவ்வளவு குழப்பமாக இருக்கும்? நீங்களே யோசித்துப் பாருங்கள் என்று அவர் அதில் முடித்திருக்கிறார்.
அருள்வான் படம் சமூக கருத்தை பேச முயற்சித்தால் திரைக்கதையை சொல்லிய விதத்தில் பல குழப்பங்கள் இருப்பதாக ப்ளூ சட்டை மாறன் சொல்லி இருக்கிறார் அதே நேரத்தில் படத்தை பார்த்த சிலர் மெதுவாக நகரும் படம் தான் ஆனால் சொல்ல வந்த கருத்து நல்லது தான் என்றும் சொல்லி இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications
