ராஜினாமா செய்த 100+ விஞ்ஞானிகள்! சம்பளம் காரணமா? இஸ்ரோ விஞ்ஞானிகளின் சம்பளம்தான் என்ன? வெளியான தகவல்
டெல்லி: கடந்த சில நாட்களாகவே இஸ்ரோவில் இருந்து 100+ விஞ்ஞானிகள் ராஜினாமா செய்ததே பேசுபொருளானது. அதிக ஊதியம் தருவதாக தனியார் நிறுவனங்கள் அழைப்பதே இதற்கு காரணம் என சொல்லப்படும் நிலையில், தற்போது இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்பது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவில் இருந்து கடந்த சில மாதங்களில் மட்டும் 100+ விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அதிலும் குறிப்பாக ககன்யான் உள்ளிட்ட முக்கிய திட்டங்களில் பணிபுரியும் விஞ்ஞானிகள் ராஜினாமா செய்துள்ளது பேசுபொருள் ஆனது.

இஸ்ரோ
இதை தடுக்க விண்வெளி துறையே நேரடியாக உத்தரவிட்டது. அதாவது அதிகாரிகளின் ராஜினாமா, விருப்ப ஓய்வு கோரிக்கைகளை எளிதில் ஏற்கக் கூடாது என விண்வெளித் துறை உத்தரவிட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், இஸ்ரோவில் விஞ்ஞானி அல்லது பொறியாளராக சேர என்ன தகுதிகள் தேவை? அதற்கான சம்பளம் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
சம்பளம்
இஸ்ரோவில் விஞ்ஞானி அல்லது பொறியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க பிஇ, பிடெக் அல்லது அதற்கு இணையான பொறியியல் பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 65 சதவீத மார்க் அல்லது 10க்கு 6.84 சிஜிபிஏ பெற்றிருக்க வேண்டும். கேட் மார்க் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதிகபட்ச வயது வரம்பு 28 ஆகும்.. MSc பட்டம் பெற்றவர்களும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதி பெறலாம். பொறியியல் பட்டத்தோடு எம்பிஏ முதல் வகுப்பில் முடித்தவர்களுக்கு வயது வரம்பு 30 ஆகும்.
இந்த பதவிக்கான ஊதியம் ₹56,100 முதல் ₹1,77,500 வரை இருக்கும். இதில் சிறப்பாக வேலை செய்தால் பதவி உயர்வை பெறலாம். பதவி உயர்வுக்கு பிறகு சம்பளம் ₹2,05,400 முதல் ₹2,24,400 வரை கிடைக்கும்.
ரூ.2.25 லட்சம்
முனைவர் பட்டம் பெற்றவர்கள் சயின்ஸ்ட்/இஞ்சினியர்-SD என்ற பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கும் ஆள்சேர்ப்பு தேர்வு நேர்முகத் தேர்வு மூலமாகவே நடைபெறும். இதற்கான வயது வரம்பு 35ஆகும். ME/MTech/MS/MSc-ல் 60% மதிப்பெண்கள், BE/BTech-ல் 65% மதிப்பெண்கள் அல்லது BScல் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இதில் வேலைக்கு சேருவோருக்கு ₹67,700 முதல் ₹2,08,700 வரை சம்பளம் கிடைக்கும். இதில் வேலை செய்யும்போது சிறப்பாக வேலை செய்து பதவி உயர்வு பெற்றால் ₹2,05,400 முதல் ₹2,24,400 வரை சம்பளம் கிடைக்கும்.
அடுத்து இருப்பது டெக்னீசியன்-பி பணி.. 10ம் வகுப்பு முடித்துவிட்டு ஐடிஐ, என்டிசி, என்ஏசி படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு நடத்தப்படும். வயது வரம்பு 35 ஆகும். இதில் பணிக்கு சேர்வோருக்கு ₹21,700 முதல் ₹69,100 வரை சம்பளம் கிடைக்கும். பதவி உயர்வு மூலம் அசிஸ்டன்ட் என்ஜினீயர் நிலைக்கு செல்லும்போது ₹78,800 முதல் ₹2,09,200 வரை சம்பளம் உயரும்!
நல்ல சம்பளம் தான்
அடுத்து டெக்னிக்கல் அசிஸ்டெண்ட்.. இந்த வேலையில் சேர அரசு அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்ப கல்வி வாரியத்தில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் ₹44,900 முதல் ₹1,42,400 வரை ஊதியம் வழங்கப்படும். பதவி உயர்வு பெற்று டெக்னிக்கல் ஆபீசர்-SG ஆக மாறினால் ₹1,31,100 முதல் ₹2,16,600 வரை சம்பளம் கிடைக்கும்.
அடுத்து சயின்டிபிக் அசிஸ்டெண்ட். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி முதல் வகுப்பில் முடித்திருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் தேர்வு நடைபெறும். ₹44,900 முதல் ₹1,42,400 வரை சம்பளம் வழங்கப்படும். பின்னர் சயின்டிபிக் ஆபீசர்-SG பதவிக்கு உயரும்போது ₹1,31,100 முதல் ₹2,16,600 வரை சம்பளம் கிடைக்கும்.
வேறு காரணம்!
இஸ்ரோ அதிகாரிகள் விலக சம்பளம் ஒரு காரணம் என்றால் பணி சூழலும் ஒரு காரணமாக இருக்கிறதாம். அதாவது பல முக்கிய திட்டங்களில் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் விஞ்ஞானிகளிடம் இருப்பதில்லையாம். தலைமையின் ஒப்புதலுக்கு காத்திருக்க வேண்டி இருக்கிறதாம். இதுவும் கூட பலர் வெளியேற காரணம் என சொல்லப்படுகிறது. எனவே, இஸ்ரோ தான் வேலை செய்யும் முறையை மாற்ற வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன.















Click it and Unblock the Notifications