“ரெஸ்ட்ரோ பார் ஓபன் செய்வது தப்பு இல்லையே!” கார்த்தி சிதம்பரம் சொன்ன கருத்து!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் உணவகத்துடன் கூடிய பார் (ரெஸ்ட்ரோ பார்) அமைக்க அரசு பரிசீலித்து வந்தது. ஆனால், இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இப்படி இருக்கையில், ரெஸ்ட்ரோ பார் ஓபன் செய்வது ஒன்றும் தப்பு இல்லை என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் பேசியிருக்கிறார்.

அவர் பேசியதாவது, "எனக்கு இந்த பூரண மது விலக்கு கொள்கையில் பெரிய நம்பிக்கை கிடையாது. அதனால் ரெஸ்ட்ரோ பார் ஒபன் செய்வதில் தப்பு இல்லை.

Karti Chidambaram

ரெஸ்ட்ரோ பார்

தேவாலயங்கள், பள்ளிகள், மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் பார்க்களை மூடலாம். ஆனால், சிட்டிக்குள் பாரை ஓபன் செய்வது, ரெஸ்டாரன்ட் உடன் அட்டாச் செய்து பார் ஓபன் செய்வதில் என்னை பொறுத்தவரை எந்த தவறும் இல்லை. மீண்டும் சொல்கிறேன், பூரண மது விலக்கு கொள்கையில் எனக்கு ஈடுபாடு இல்லை. எல்லா விஷயத்திலும் எல்லோருக்கும் ஈடுபாடு இருக்க வேண்டியதில்லை. பூரண மது விலக்கு தோல்வியடைந்த திட்டம். அமெரிக்காவிலேயே இது ஃபெயிலியர்தான்.

குஜராத் நிலைமை

குஜராத்திலும் பூரண மது விலக்கு இருக்கிறது. ஆனால், காந்தி பிறந்த போர்பந்தரில்தான் அதிக மது கிடைக்கிறது. பூரண மது விலக்கு அமல்படுத்தினால் கள்ளச்சாராயம், அதன் மூலம் மிகப்பெரிய மாஃபியா உள்ளே வரும். எனவேதான் இந்த கொள்கை சர்வதேச அளவில் தோல்வியடைந்திருக்கிறது. எந்த ஊரிலும் இது வெற்றியடைந்தது கிடையாது. எனவே பார், ரெஸ்டாரன்ட் கொண்டுவருவது ஒன்னும் தப்பு கிடையாது" என்று கூறியிருக்கிறார்.

தொகுதி மறுவரையறை

அதேபோல, தொகுதி மறுவரையறை மசோதா குறித்து பேசிய அவர், "கடந்தமுறை நாடாளுமன்றத்தில் இந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது. அதுதான் என்னுடைய எதிர்பார்ப்பாக இருந்தது. இந்தமுறையும் மசோதா தோற்கடிக்கப்பட வேண்டும். கடந்த முறை திரிணாமுல் காங்கிரஸ் எதிர்த்தது. இப்போது அக்கட்சி இரண்டாக உடைந்திருக்கிறது. தேசியவாத காங்கிரஸும் எதிர்த்தது. இப்போது அக்கட்சியினர் ஊசலாட்டத்தில் இருக்கிறார்கள். எனவே இந்த முறையும் அனைத்து கட்சிகளும் இதை எதிர்க்க வேண்டும் என்று கேட்கிறேன்.

தென் மாநிலங்கள்

மகளிருக்கான இட ஒதுக்கீட்டை இப்போது உள்ள எம்பிக்களின் அடிப்படையிலேயே கொடுக்கலாம். அதைவிட்டுவிட்டு தொகுதி மறுவரையறை கொண்டு வந்து எம்பிக்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை. இப்போது இருக்கும் எம்பிக்கள் பேசுவதற்கே நேரம் கிடைக்கவில்லை. இந்த எண்ணிக்கை அதிகரித்தால், சீனாவில் உள்ள நாடாளுமன்றம் மாதிரி கூடி, கைதட்டி விட்டு கலைந்து போக வேண்டியதுதான். மட்டுமல்லாது தென் மாநிலங்களுக்கு இதனால் எந்த பலனும் கிடையாது" என்று கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+