Rasi Palan This Week: மேஷ ராசிக்கு இந்த வாரம் காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. கோபத்தை கட்டுப்படுத்துங்க!
Mesham Rasi Palan: மே 11 ஆம் தேதி முதல் மே 18 ஆம் தேதி வரை, சித்திரை 28 ஆம் தேதி முதல் வைகாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த வாரம் சித்திரை முடிந்து வைகாசி மாதம் பிறக்கிறது. அந்த வகையில், மே 11 ஆம் தேதி முதல் மே 18 ஆம் தேதி வரை, சித்திரை 28 ஆம் தேதி முதல் வைகாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மேஷம் ராசி பலன் (Mesham Rasi Palan)
மேஷ ராசியினர் செவ்வாயின் தாக்கம் இருப்பதால் கோபத்தை தவிர்ப்பது நல்லது. வார்த்தைகளில் மிகுந்த இயல்பாக எல்லோரிடம் பேசுவது நல்லது. எல்லா விஷயங்களையும் நன்றாக கொண்டு செல்வது நன்மை பயக்கும். நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிர்ஷ்டங்கள் ஏற்படும் காலகட்டம். தொழில் விஷயத்தில் அற்புதமான ஏற்றம் ஏற்படும்.
காந்தசக்தி
மேஷ ராசி நண்பர்களுக்கு காந்த சக்தி அதிகளவில் இருக்கும். பெரிய சந்தோஷம், வெற்றிகள் ஏற்படும். நினைத்த காரியங்கள் கைகூடும். ஆளுமை, தன்னம்பிக்கை கூடும். நிறைய முன்னேற்றங்கள் ஏற்படும். குரு சுக்கிரன் சேர்வதால் ஆடை, ஆபரணங்கள், அணிகலன்கள் சேரக்கூடிய வாய்ப்பு ஏற்படும். பணத்தை யாருக்கும் கொண்டு போய் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
குருப்பெயர்ச்சி
நிறைய பேர் கண்ணாடியை மாற்றுவீர்கள். பல் சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. இந்த வாரத்தின் ஆரம்பத்தின் இறுதிப் பகுதி நன்றாக இருக்கும். வாரத்தின் இறுதிப்பகுதி நன்றாக இருக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் ஆரம்பிப்பதால் பெரிய பாதிப்புகள் இருக்காது. 10 நாளில் குரு பெயர்ச்சி நடைபெறுவதால் நல்ல மாற்றம் ஏற்படும்.
வழிபாடு
ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வைகாசி மாதம் முழுவதும் அம்மனை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். ஏற்றம், சுபிக்ஷம் அனுகூலம் ஏற்படும். புதிய தொழில், வியாபாரம், படிப்பு, கெளரவம் உண்டாகும். சமூகத்தில் உள்ள பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications