லைசன்ஸ் வச்சு இருக்கவங்களுக்கு மிகப்பெரிய பாடம்.. உச்ச நீதிமன்றம் போட்ட.. மிகப்பெரிய உத்தரவு.. கவனம்
சென்னை: ஓட்டுநர் உரிமங்களின் பயன்பாடு குறித்து உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. ஒரு ஓட்டுநர் உரிமம் காலாவதியாகி.. அதன்பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டால், இடைப்பட்ட மாதத்தில் அந்த உரிமம் வைத்திருந்ததாகக் கருதப்பட முடியாது எனத் தெளிவுபடுத்தியது. ஒரு வருடத்திற்குள் உரிமத்தை புதுப்பித்திருந்தாலும் இம்முடிவு பொருந்தும்.
காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் இரண்டு முழு ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியமாகும். உரிமம் காலாவதியானதற்கும், புதுப்பித்ததற்கும் இடையில் இடைவெளி ஏற்பட்டால், சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட காலத்தில் புதுப்பிக்கப்பட்டிருந்தாலும் அது தொடர்ச்சியை முறித்துவிடும் என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.

உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன?
அதாவது ஒருவர் 2023 ஜனவரியில் லைசன்ஸ் வாங்குகிறார். அப்படி என்றால் 2025 டிசம்பரில் லைசன்ஸ் 2 வருடம் காலத்தை அடையும். அதுவே இடையில் 1 மாதம் லைசன்ஸ் செயலில் இல்லாமல் உள்ளது. காலாவதியாகி உள்ளது என்று வைத்துக்கொள்வோம். மீண்டும் அந்த லைசன்ஸ் renew செய்யப்பட்டாலும் கூட.. renew செய்யப்பட்ட காலத்தில் இருந்தே அந்த லைசன்ஸ் செயலில் இருந்ததாக கணக்கில் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.
2022 ஏப்ரல்-மே மாதங்களில், தெலங்கானா SLPRB 325 காவலர் (ஓட்டுநர்) மற்றும் தீயணைப்புத் துறை ஓட்டுநர்/இயக்குநர் பணியிடங்களை நிரப்ப அறிவித்தது. இந்த அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியான தேதியன்று, இரண்டு ஆண்டுகளுக்கு இலகு ரக/கனரக வாகன ஓட்டுநர் உரிமத்தைத் 'தொடர்ச்சியாக' வைத்திருக்க வேண்டும் என்பதே தகுதிக்கான நிபந்தனை.
அறிவிப்பு வெளியான காலத்திற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளில் உரிமங்கள் காலாவதியாகி, பின்னர் மோட்டார் வாகனச் சட்டம் அனுமதித்த ஓராண்டுக்குள் புதுப்பிக்கப்பட்ட சில விண்ணப்பதாரர்களை தெலங்கானா உயர் நீதிமன்றம் தேர்வுச் செயல்முறையில் பங்கேற்க அனுமதித்தது. உரிமத்தைப் புதுப்பிக்கும்போது, அது காலாவதி தேதியிலிருந்தே நடைமுறைக்கு வருவதால், தொடர்ச்சியில் இடைவெளி இல்லை என உயர் நீதிமன்றம் கருதியது. இதை ஆட்சேர்ப்பு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் எதிர்த்தது.
உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன?
நீதிபதிகள் அஹ்சானுதின் அமனுல்லா மற்றும் எஸ்.வி.என். பட்டி கொண்ட அமர்வு, விண்ணப்பதாரர்களை தேர்வுச் செயல்முறையில் பங்கேற்க அனுமதித்த உயர் நீதிமன்றத்தின் முடிவை ரத்து செய்தது. மோட்டார் வாகன (திருத்தச்) சட்டம், 2019, முன்னதாக இருந்த 30 நாள் சலுகை காலத்தை நீக்கியுள்ளதால், உரிமம் காலாவதியான உடனேயே தகுதியிழப்பு ஏற்படும். மோட்டார் வாகன சட்டம் 1988 இன் பிரிவு 14, உரிமம் காலாவதியான பிறகு ஒரு நாள் கூட தொடர அனுமதிக்கவில்லை என அமர்வு சுட்டிக்காட்டியது.
நீதிபதி அமனுல்லா எழுதிய தீர்ப்பில், உயர் நீதிமன்றத்தின் 'பின் தேதியிட்டு செயல்படும்' (relation back) கோட்பாடு தவறானது என நிராகரிக்கப்பட்டது. இந்த கோட்பாடு ஆவணத்தின் செல்லுபடியாகும் தன்மைக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஆட்சேர்ப்பு விதிகளின் கீழ் வாகனம் ஓட்டுவதற்கான தொடர்ச்சியான சட்டப்பூர்வ தகுதியைக் கணக்கிடுவதற்கு இது பொருந்தாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஒரு ஓட்டுநர் உரிமம் காலாவதியாகி.. அதன்பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டால், இடைப்பட்ட மாதத்தில் அந்த உரிமம் வைத்திருந்ததாகக் கருதப்பட முடியாது எனத் தெளிவுபடுத்தியது. ஒரு வருடத்திற்குள் உரிமத்தை புதுப்பித்திருந்தாலும் இம்முடிவு பொருந்தும்.
"இடைவெளிக்குப் பிறகு உரிமம் புதுப்பிக்கப்பட்டிருந்தாலும், புதுப்பித்தல் பின் தேதியிட்டதாகக் கருதப்பட்டு, இடைப்பட்ட காலத்திலும் உரிமம் தொடர்ச்சியாகவும் செல்லுபடியாகும் என்ற கோட்பாட்டை ஏற்க முடியாது" என நீதிமன்றம் உறுதிபடத் தெரிவித்தது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications