இனி சென்னை உள்ளே வருவதும்.. வெளியே செல்வதும்.. ரொம்ப ஈசி.. ஹை வேயில் நடக்கும் 7 அதிசயங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உள்ளே மக்கள் வரவும்.. போகவும் பயன்படுத்தப்படும் முக்கியமான சாலைகளில் ஒன்று ஜிஎஸ்டி சாலை ஆகும். இங்கே மாலை மற்றும் காலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்க.. சென்னை ஜிஎஸ்டி சாலையில் 7 இடங்களில் புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.

கிராண்ட் சதர்ன் டிரங்க் (ஜிஎஸ்டி) சாலையில் பாதசாரிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, அடுத்த ஆறு மாதங்களில் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே லிஃப்ட் பொருத்தப்பட்ட ஏழு புதிய பாதசாரிகளுக்கான நடைமேடை மேம்பாலங்களை (FOBs) அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

chennai automobile

வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, எஸ்டான்சியா டெக் பார்க் மற்றும் சிங்கபெருமாள்கோயில் ரயில் நிலையம் ஆகியவை இந்த புதிய பாதசாரிகளுக்கான மேம்பாலங்களுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களாகும், இவை அனைத்தும் அதிக பாதசாரி போக்குவரத்தை கொண்டு இருப்பதால் அங்கே பாலம் கட்டப்படுகிறது.

இந்த திட்டத்திற்கு ₹16.3 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சாலையில் எட்டு வழிச்சாலையில் சராசரி வாகன வேகத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

அரசு அதிகாரபூர்வ தரவுகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளில் 60 பாதசாரிகள் இறப்பதற்கு 33 கிமீ நீளம் கொண்ட இந்த சாலை காரணமாகிறது. கடந்த ஆண்டு NHAI ஆனது பொத்தேரியில் உள்ள SRM கல்லூரிக்கு அருகிலும் மறைமலைநகரிலும் இரண்டு நடை பாலங்களை அமைத்தது.

இது விபத்து எண்ணிக்கையில் கணிசமான குறைப்புக்கு வழிவகுத்தது. இந்த திட்டத்தின் வெற்றியால் உற்சாகமடைந்த NHAI மேலும் ஏழு இடங்களுக்கு திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்தது, இதன் மூலம் தினமும் 40,000க்கும் மேற்பட்ட பாதசாரிகள் பயனடைவர் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏழு FOBகளும் ஒரே நேரத்தில் 16 பேர் வரை தங்கக்கூடிய லிஃப்ட்களைக் கொண்டிருக்கும். இது குறிப்பாக முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பயணிப்பதை எளிமையாக்கும் என்று NHAI அதிகாரிகள் தெரிவித்தனர்.

வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, எஸ்டான்சியா டெக் பார்க் மற்றும் சிங்கபெருமாள்கோயில் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் அதிகம் கூட்டம் இருப்பதால் முதல் கட்டமாக அந்த பகுதிகளில் இந்த நடைமேடை பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.

ஜிஎஸ்டி சாலை: இதே ஜிஎஸ்டி சாலையில், சென்னை அண்ணா சாலையில் உயர்மட்ட சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. இதனால் அங்கே பேரிகேட் போடப்பட உள்ளது.

இதனால் வரும் நாட்களில் அங்கே பணிகள் முடியும் வரை போக்குவரத்து நெரிசல் நிலவும் வாய்ப்புகள் உள்ளன. தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர் மட்ட சாலைகள் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் சிறப்புகளை இங்கே பார்க்கலாம்.

3.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு 4 வழி சாலையாக உயர் மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது. கீழே மெட்ரோ சுரங்கம் உள்ள நிலையில் அதற்கு பாதிப்பு ஏற்படாமல் உயர்மட்ட சாலை அமைக்கப்படும். பொறியியல் அதிசயம் என்று சொல்லும் விதமாக, மெட்ரோ சுரங்கத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இந்த சாலை அமைக்கப்பட உள்ளது.

இன்ஜினியரிங் அதிசயம்: இன்ஜினியரிங் அதிசயம் என்று அழைக்கப்படும் வகையில் பரபரப்பான அண்ணாசாலையில் 3.2 கிமீ நான்கு வழி உயர்மட்ட சாலை பணிகள் முடித்தவுடன், தேனாம்பேட்டை மற்றும் சைதாப்பேட்டை இடையே பயணிகள் 10 நிமிடங்களுக்குள் பயணிக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாலைகள் பாலங்கள் ஒன்று கூட இல்லாத நிலையில்தான் நீண்ட பாலம் அமைக்கப்பட உள்ளது.

இந்த மேம்பாலத்திற்கான அடித்தளம் சாலை மட்டத்திலிருந்து ஏழு மீட்டர் ஆழத்தில் அமைக்கப்படும், மேலும் இது சராசரியாக 20m-28m ஆழம் கொண்ட மெட்ரோ சுரங்கப்பாதைக்கு மேலே அமைக்கப்படும். மெட்ரோ சுரங்கத்தை இது பிடிக்காது. இந்தியாவிலேயே முதல்முறையாக, நிலத்தடி மெட்ரோ சுரங்க பாதை கொண்ட சாலையில் உயர்மட்ட தாழ்வாரம் கட்டப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+