6 மாஸ்டர் பிளான்.. டாப் அதிகாரிகளை கூப்பிட்ட சிவ்தாஸ் மீனா.. திடீர் ஆலோசனை.. இனி சட்டுனு போகலாம்
சென்னை: தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட உள்ள பல்வேறு சாலை போக்குவரத்து திட்டங்கள் குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை மேற்கொண்டார்.
முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தில் 2021-22 மற்றும் 2022-23ல் எடுக்கப்பட்ட 64 நான்கு வழி சாலை பணிகளில், 9 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 55 பணிகளை விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

இது தொடர்பாக இன்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை மேற்கொண்டார். சுமார் ஒன்றரை மணி நேரம் சாலைகள் மற்றும் பாலங்கள் பணி முன்னேற்றம் குறித்து தொடர்புடைய துறைகளின் அரசுச் செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
முக்கியமாக 6 முத்திரைப் பணிகள் விரிவாக ஆய்வு செய்து விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று இதில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 1. தொழிற்துறை தொடர்பான வைப்பு நிதி பணிகள்: சிப்காட், டாட்டா, ஓலா போன்ற பல்வேறு தொழில்துறை சம்பந்தமான 9 வைப்பு நிதி பணிகளை சிறப்பு கவனம் செலுத்தி, ஆய்வு செய்து விரைந்து முடித்திட வேண்டும் எனவும், ஒரு ஆண்டுக்கு கீழ் உள்ள நிலுவைப் பணிகள் மற்றும் ஒரு ஆண்டுக்கு மேல் உள்ள பணிகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு நீண்ட நாள் முடிக்கப்படாமல் உள்ள பணிகள் விரைந்து முடித்திட வேண்டும்.
வரவு செலவு திட்ட மதிப்பீடு கொண்டு தற்போது தற்போது வரை 34 சதவீதம் செலவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறித்தினார்கள்.
2. புறவழிச் சாலைப்பணிகள்: மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு புறவழிச் சாலைகள் அமைக்கும் பணிகளை தனி கவனம் செலுத்திசெயல்படுத்த வேண்டும். விரிவான திட்ட அறிக்கை நிலையில் உள்ள 12 பணிகள் மற்றும் மற்றும் நில எடுப்பு நிலையில் உள்ள 28 பணிகள், ஆக 40 பணிகளை தனி கவனம் செலுத்தி செயலாக்கத்திற்கு கொண்டு வரவேண்டும். சாலைப் பாதுகாப்புப்பணிகள்
3. சாலை பாதுகாப்பு: பணிகளில் விபத்து கரும்புள்ளி பகுதி பணிகள், ஹாட்ஸ்பாட் பணிகள் போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் தந்து தகுந்த பொறியியல் சீரமைப்பினை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து விபத்து கரும்புள்ளி பகுதி பணிகளிலும், மேலும் விபத்து நடைபெறாத வண்ணம் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், சாலைகளில் கனரக வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக சுமை ஏற்றிச் செல்வதால், சாலைகளின் தாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது. சாலைகளில் போக்குவரத்து தரவுகளை கணக்கில் கொண்டு தான் சாலைகள் அமைக்கப்படுகின்றன. சாலைகள் பழுதாவதை தவிர்க்க ஆலோசனைகள் வழங்கினார்.
4. கலைஞர் நூற்றாண்டு விழா: 100 இடங்களில் மரக்கன்றுகள் நடுதல், 100 பாலங்கள் கட்டுதல், 100 பாலங்கள் புனரமைத்தல், 100 இடங்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் போன்ற பணிகளுக்கு முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என கேட்டு கொண்டார்கள். நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், சமூக வலைதள செய்திகளில் குறிப்பிட்ட சாலைகள் மற்றும் பாலங்கள் குறித்த செய்தி வெளியாகும் போது, அது குறித்து உடனடியாக சீர் செய்து, தலைமை பொறியாளர்களுக்கும், அரசு கூடுதல் தலைமை செயலாளருக்கும் விரிவான அறிக்கையை அனுப்ப வேண்டும் எனவும் பத்திரிக்கைகளுக்கு செய்தியை உடனடியாக அனுப்ப வேண்டும்.
5. சாலை பராமரிப்பு: சாலை பராமரிப்பு பணிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். மரங்களுக்கு வண்ணம் பூசுதல், பாலங்கள் / சிறுப்பாலங்கள் சீரமைத்தல் புருவங்களை செம்மைப் படுத்துதல், சாலை பாதுகாப்பு போன்ற பணிகளை அவ்வப்போது செய்யப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
6. கள ஆய்வு: மேலும் எனது கள ஆய்வின் போதும் மற்றும் உயர் அதிகாரிகள் ஆய்வின் போதும், இது குறித்த சுணக்கம் இருந்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
ஆகஸ்ட் மாதம் பாலங்கள் பராமரிப்பு மாதமாக கடைபிடிக்கப்படுவதால், சிறு பாலங்கள், குழாய் பாலங்கள் அனைத்தையும் சுத்தப்படுத்தி நீர் வழி பாதைகளில் உள்ள அடைப்புகளை அகற்றி பராமரிக்க வேண்டும். பாலங்களை வெள்ளை அடித்து நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தமிழ்நாடு முழுவதும் நான் கள ஆய்வு செய்ய உள்ளதாகவும், ஆய்வின் போது பாலங்கள் பராமரிப்பு குறித்து சிறப்பு கவனம் செலுத்தி ஆய்வு செய்ய உள்ளதாகவும், கண்காணிப்பு பொறியாளர்களும் கோட்ட பொறியாளர்களும் தனி கவனம் செலுத்தி பாலங்கள் பராமரிப்பை உரிய முறையில் செயல்படுத்திட வேண்டும் என இந்த ஆய்வுக் கூட்டத்தில் அறிவுரை வழங்கினார்கள்.












Click it and Unblock the Notifications