"நோ அபராதம்".. பாஸ்ட் டேக் பயனாளிகளுக்கு நாடு முழுக்க மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்.. செம அறிவிப்பு
சென்னை: டோல் கேட்டை கடந்த 10 நிமிடத்திற்குள் பாஸ்ட் டேக்கில் இருந்து பணம் பரிமாற்றம் நடக்கவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்று வெளியான செய்திகளுக்கு தேசிய போக்குவரத்து ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது. இது டோல் கேட் பயனாளிகளுக்கு விதிக்கப்பட்ட விதிமுறை அல்ல.. வங்கிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு என்று தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்து உள்ளது.
அதன்படி, வங்கிகள் டோல் கேட் பயனாளியின் பாஸ் டேக்கில் இருந்து பணத்தை முறையாக மாற்ற வேண்டும். முறையாக பரிவர்த்தனையை தாமதம் இன்றி செய்ய வேண்டும் என்று வங்கிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு இது என்று தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்து உள்ளது.

புதிய பாஸ்ட் டாக் விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் என்ன மாதிரியான மாற்றங்கள் டோல் கேட்டில் ஏற்பட்டு உள்ளன என்று இங்கே பார்க்கலாம். இது நேரடி அனுபவத்தின் அடிப்படையில் பகிரப்படும் தகவல்கள் ஆகும்.
அதே சமயம் முதலில் பாஸ்ட் டாக்கில் என்னென்ன விதிகள் மாறி உள்ளன என்று இங்கே பார்க்கலாம்.
1. பாஸ்ட் டாக்கில் லோ பேலன்ஸ் இருந்தால்.. எல்லா டோல் கேட்டிலும் இனி ரீசார்ஜ் செய்ய முடியாது.
2. சிலருக்கு லோ பேலன்ஸ் காரணமாக பிளாக் லிஸ்ட் ஆகி இருந்தால், டோல் கேட்டிற்கு செல்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
3. அதாவது டோல் கேட் அருகே நின்று ரீ சார்ஜ் செய்தால்.. அதை டோல் கேட்டில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இனிமேல் குறைந்த பேலன்ஸ் காரணமாக பாஸ்ட் டாக் பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டால் இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
4. கே ஒய் சி காரணமாக பிளாக் லிஸ்ட் ஆகி இருந்தால்.. டோல் கேட்டிற்கு செல்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பே அதை சரி செய்ய வேண்டும். இந்த வாகனங்களின் பாஸ்ட் டாக் ஏற்றுக்கொள்ளப்படாது.
5. வாகனங்களுக்கு சட்ட ரீதியிலான வழக்கு, சிக்கல் இருந்தால், அதன் காரணமாக பாஸ்ட் டாக்.. பிளாக் லிஸ்ட் ஆகி இருந்தால் அதை 1 மணி நேரத்திற்கு முன்பே சரி செய்திருக்க வேண்டும்.
6. பிளாக் லிஸ்ட் ஆகி இருக்கும் பாஸ்ட் டாக் எதையும் டோல் கேட்களில் பயன்படுத்த கூடாது. இனிமேல் பிளாக் லிஸ்ட் காரணமாக பாஸ்ட் டாக் பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டால் இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
என்னென்ன மாற்றங்கள் டோல் கேட்டில் உள்ளன:
புதிய பாஸ்ட் டாக் விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் என்ன மாதிரியான மாற்றங்கள் டோல் கேட்டில் ஏற்பட்டு உள்ளன என்று இங்கே பார்க்கலாம். இது நேரடி அனுபவத்தின் அடிப்படையில் பகிரப்படும் தகவல்கள் ஆகும்.
இனிமேல் குறைந்த பேலன்ஸ் காரணமாக பாஸ்ட் டாக் பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டால் இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. புதிய பாஸ்ட் டாக் விதிமுறைகள் காரணமாக பலரும் பாஸ்ட் டாக்கில் மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
பாஸ்ட் டாக் காரணமாக டோல் கேட்டில் எப்போதும் போலவே போக்குவரத்து உள்ளது. ஆனால் இந்த முறை காத்திருப்பு நேரம் குறைந்துவிட்டது. ஏனென்றால் யாரும் டோல் கேட்டில் ரீ சார்ஜ் செய்வதற்கு நிற்கவில்லை. அதேபோல் லைனில் நின்ற பின் யாரும் ரீ சார்ஜ் செய்வதற்கு காலம் எடுப்பது இல்லை.
இதனால் காத்திருப்பு நேரம் வெகுவாக குறைந்துவிட்டது. அதே சமயம் பலர் 60 நிமிடங்களுக்கு உள்ளாக ரீ சார்ஜ் செய்ததால் அவர்கள் அபராதம் கட்ட வேண்டி உள்ளது. சிலருக்கு இன்னும் பல காரணங்களால் பிளாக் லிஸ்ட் ஆகி இருந்ததால் அவர்களும் அபராதம் கட்ட வேண்டிய சூழல் உள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications