தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்கிறீர்களா? அப்போ உங்களுக்குத்தான் இது.. மத்திய அரசு முக்கிய முடிவு
சென்னை: தேசிய நெடுஞ்சாலைகளின் தரம், செயல்பாடு மற்றும் பராமரிப்பில் கவனம் செலுத்துவதற்காக NHAI தனியாக ஒரு குழுவை உருவாக்க உள்ளது. ஒரு பிரத்யேக Corridor Management Unit எனப்படும் காரிடார் மேலாண்மை அலகு (CMU) அமைப்பதற்கான திட்டத்தை சாலை போக்குவரத்து அமைச்சகம் முன்வைத்துள்ளது.
இனிமேல் இந்த அமைப்புதான் சாலை பராமரிப்பு, சாலையின் தரத்தை சோதனை செய்தல், சாலை பணிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளை செய்யும். இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.

சாலை மாற்றம்: இது போக பெட்ரோல், டீசல் உட்பட எரிபொருள் பயன்பாடு மற்றும் வாகன மாசுவை குறைக்கும் முயற்சியில், நகரங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்தை மின்மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. இதற்காக தங்க நாற்கர சாலையில் 6,000 கிலோமீட்டர் தூரத்திற்கு மின்சார வாகனத்தை இயக்கும் வகையில் நெடுஞ்சாலைகளை மாற்ற அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இ-மொபைலிட்டி மற்றும் இ-பஸ்களின் பயணத்தை ஊக்குவிப்பதற்காக அடுத்த ஏழு ஆண்டுகளில் இந்த திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றப்பட திட்டமிடப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஒரு நாட்டின் பொருளாதாரம் என்பது பல காரணிகள் நிர்ணயிக்கப்படும். அங்கே உள்ள தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள் தாண்டி வேறு பல காரணிகள் கூட பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் பங்கு வகிக்கும். அதில் ஒன்று சாலைகளின் தரம்.
இந்தியாவில் சமீப காலமாக அதிக அளவில் சாலைகள் போடப்படுகின்றன. முக்கியமாக எக்ஸ்பிரஸ் வே சாலைகள், நெடுஞ்சாலைகள் அதிகம் போடப்படுகின்றன. இந்த சாலைகள் பயணத்தை வேகம் ஆக்க உதவுகின்றன. இதன் மூலம் பொருளாதாரமும் உயரும்.வேகமான பயணம் என்பது வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.
மத்திய அரசு திட்டம்: இந்த நிலையில்தான் இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் மக்கள் செல்லும் சராசரி வேகத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வாகனங்களுக்கான வேக வரம்பு கடைசியாக ஏப்ரல் 2018 இல் புதுப்பிக்கப்பட்டது. தற்போது, நெடுஞ்சாலைகளில் அதிகபட்சமாக 100 கிமீ வேகத்திலும், எக்ஸ்பிரஸ்வேயில் மணிக்கு 120 கிமீ வேகத்திலும் கார்கள் ஓட்ட அனுமதிக்கப்படுகிறது. நகர்ப்புற சாலைகளில் அதிகபட்ச வேகம் மணிக்கு 70 கி.மீ அனுமதிக்கப்படுகிறது. அதே சமயம் சராசரி வேகம் 70 கிமீ என்ற அளவில் தேசிய நெடுஞ்சாலைகளிலும் உள்ளது.
அதாவது 100 கிமீ அனுமதிக்கப்பட்டால் சாலை தரம், தடுப்புகள் காரணமாக சராசரி வேகம் 70 கிமீ ஆக உள்ளது. இதை 85 ஆக உயர்த்த.. அதாவது வாகனங்கள் சராசரியாக செல்லும் வேகத்தை அதிகரிக்க சாலைகளில் மாற்றங்களை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன.
டோல்: இது போக விரைவில், இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான டோல் கட்டண முறைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. டோல் கட்டண முறைகேடுகளை தவிர்ப்பது, பொய்யான டோல் கட்டண முறையை தடுப்பதற்காக இந்த முறை கொண்டு வரப்பட்டு உள்ளது.
நாடு முழுக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) விரைவில் புதிய முறையை அறிமுகப்படுத்தும் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மார்ச், 2024க்குள் தேசிய நெடுஞ்சாலைகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான கட்டண முறையை NHAI அறிமுகப்படுத்தும் என்று அமைச்சர் நிதின் கட்கரி ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications