கமேனி இறுதி சடங்கு.. ஒரே தாக்குதலில் மொத்த பேரையும் காலி செய்ய முடியும்! - வாயை விட்ட டிரம்ப்
வாஷிங்டன்: ஈரான் உச்ச தலைவர் கமேனியின் இறுதி சடங்கில் முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்றிருக்கிறார்கள். இது குறித்து பேசியிருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஒரே அட்டாக்கில் மொத்த பேரையும் காலி செய்ய முடியும் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார்.
இதை பார்க்கும்போது.. சாமியே வரம் கொடுத்தாலும்.. பூசாரி இடம் கொடுக்க மாட்டார் என்பதை போல இருப்பதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட இருக்கிறது. இந்த நேரத்தில் வந்து, மொத்த பேரையும் தூக்கிடுவேன் என்று டிரம்ப் பேசுவது.. அமைதியை அமெரிக்கா விரும்பவில்லையோ என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது.
அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மவுண்ட் ரஷ்மோரில் நாட்டு மக்களிடையே டிரம்ப் இப்படி சொல்லியிருக்கிறார். அவர் பேசியதாவது, "ஈரான் தலைவர்கள் அனைவரும் அங்கே கூடியிருந்தனர். ஒரே ஒரு தாக்குதலில் அனைவரையும் வீழ்த்தியிருக்க முடியும். ஆனால் நாங்கள் அதைச் செய்யவில்லை. நாங்கள் அதைச் செய்திருந்தால், பின்னர் பேச்சுவார்த்தை நடத்த அங்கு யாரும் இருந்திருக்க மாட்டார்கள். ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் தொடர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்று கூறியிருக்கிறார்.
மேலும் கமேனியின் இறுதி சடங்கு குறித்து நக்கல் தொணியிலும் பேசியிருக்கிறார். ஈரானில் 6 நாட்கள் நடைபெற்ற இறுதிச்சடங்கு ஊர்வலங்களைக் கிண்டல் செய்த டிரம்ப், நாங்கள் அவர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை அளித்தோம் என்று கூறினார். மேலும், இறுதிச்சடங்கில் மக்கள் அழுவது போலி கண்ணீராக இருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் எழுப்பினார்.
டிரம்பின் இந்தக் கருத்துக்கு ஆர்மீனியாவில் உள்ள ஈரான் தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. "உங்களுக்கு நாகரிகம், வரலாறு அல்லது கௌரவம் என்றால் என்னவென்றே தெரியாது, அதனால்தான் இப்படிப் பேசுகிறீர்கள்" என்று எக்ஸ் (X) தளத்தில் ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.
ஈரானுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தானில் ஜூலை 11-ம் தேதி மீண்டும் தொடங்க உள்ள நிலையில், டிரம்ப் இப்படி உளறி கொட்டியிருப்பது சர்வதேச அளவில் சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.
உனக்கு என்னப்பா.. நீ என்ன வேணாலும் பேசுவ! போர் நிக்கலனா.. நாங்கதானே பெட்ரோல் இல்லாம கஷ்டப்படனும்? என பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவரும் டிரம்ப் பேச்சுக்கு டென்ஷன் ஆகியிருக்கின்றனர்.














Click it and Unblock the Notifications