புதுசு புதுசாக முளைக்கும் சாலைகள்! கார், வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரிய குட் நியூஸ்! இதை நோட் பண்ணுங்க
சென்னை: சென்னையில் புதிய லிங்க் ரோடு அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மெட்ரோ ரயில் பணியால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் புதிய இணைப்பு சாலைகள் (லிங்க் ரோடு) அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைகள் மூலம் பராமரிக்கப்படும் சாலைகளை இணைக்கும் வகையில் இந்த புதிய லிங்க் சாலைகளை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை மூத்த அதிகாரிகள் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.

முதல் கட்டமாக அடையாறு ஆற்றின் அருகே உள்ள இசைக் கல்லூரி அருகே டிஜிஎஸ் தினகரன் சாலை மற்றும் துர்காபாய் தேஷ்முக் சாலையை இணைக்கும் வகையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் இணைப்புச் சாலை அமைக்க அதிகாரிகள் முன்மொழிந்துள்ளனர்.
சாந்தோம், மயிலாப்பூர் போன்ற பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், சாந்தோம் ஹைரோடு போன்ற பல முக்கிய சாலைகளில் போக்குவரத்தை மாற்ற ரிங்க் ரோடு அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை அதிகாரிகள் ஆராயத் தொடங்கியுள்ளனர்.
இதேபோல், மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வரும் அண்ணாநகர் பகுதி மக்கள், ஜவஹர்லால் நேரு சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, வார்டு 104ல் உள்ள பிள்ளையார் கோயில் தெருவிலிருந்து வார்டு 90ல் உள்ள பாடி குப்பம் சாலையை இணைக்கும் வகையில் இணைப்பு சாலை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தப் பணியால் குறைந்தது இன்னும் ஒரு வருடத்திற்கு அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாடி குப்பம் ரோட்டில் இருந்து பிள்ளையார் கோயில் தெரு வரை 900 மீட்டர் தூரத்திற்கு செல்லும் இந்த இணைப்பு சாலை, மதுரவாயல், பூந்தமல்லி, வானகரம் ஆகிய பகுதிகளில் இருந்து வாகனங்கள் செல்ல வசதியாக இருக்கும். இந்த வாகனங்கள் ரெயில் நகர் பாலத்தை கடந்து பூந்தமல்லி உயர் சாலையை அடையும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
திட்ட அறிக்கை; சென்னை புறநகர் பகுதிகளுக்கும் மெட்ரோ ரயில் சேவை அளிக்க தயாராகும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளை விரிவுபடுத்தும் விதமாக இந்த திட்டம் கையில் எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும். இந்த நிலையில்தான் ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2027க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் 20-கிமீ நீளம் கொண்ட மாதவரம் முதல் சிப்காட் வரை - 45.4 கிமீ பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இங்கு நேரு நகர், கந்தஞ்சாவடி, பெருங்குடி, தொரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் தொரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர் ஏரி I மெட்ரோ, சோழிங்கநல்லூர் ஏரி II மெட்ரோ, செம்மஞ்சேரி 1 மெட்ரோ, செம்மஞ்சேரி 2 மெட்ரோ, காந்தி நகர், நாவலூர் மெட்ரோ, சிறுசேரி, சிறுசேரி SIPCOT I மெட்ரோ மற்றும் சிறுசேரி SIPCOT II மெட்ரோ ஆகிய நிலையங்கள் இந்த பாதையில் அமைக்கப்படும். மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 44.6 கிமீ நீளம் (காரிடார் 5) மற்றும் லைட் ஹவுஸ்-பூந்தமல்லி வரையிலான 26.1 கிமீ ஆகியவை இரண்டாம் கட்ட திட்டத்தில் உள்ள மற்ற இரண்டு வழித்தடங்களாகும்.
இதில் மாதவரம் மற்றும் தரமணி இடையே பாதை அண்டர் கிரவுண்ட் பாதையாகவும், சிறுசேரியில் உள்ள சிப்காட்டின் கடைசி நிலையம் வரை மேலே பாலம் அமைக்கப்பட்ட உயரமான பாதையாகவும் இருக்கும். அண்டர் கிரவுண்ட் பாதை அமைக்க அதிக நேரம் எடுக்கும். இன்னொரு பக்கம் மேலே பாலம் அமைக்கும் பணிகள் வேகமாக முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய நிலையங்கள்: இந்த நிலையில் சென்னையில் மெட்ரோ ரயில் வழித்தடம் 3ல் புதிய ரயில் நிலையங்கள் அமைக்க ரூ.4,058.20 கோடியில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து போடப்பட்டு உள்ளது. புதிய மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்துடன் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications