இந்தியாவிலேயே எந்த சிட்டியிலும் இல்லாத அதிசயம்.. சென்னையில் நடக்கும் சூப்பர் சம்பவம்.. இதுதான் தேவை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெங்களூர் -சென்னை விரைவுச்சாலை திட்டத்தின் கீழ், ஸ்ரீபெரும்புதூர் வரை அமையவுள்ள 23.2 கி.மீ. நீள உயர்மட்டச் சாலைக்கான பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தொடங்கியுள்ளது. இதன் முதல் கட்டமாக, மதுரவாயல் முதல் பூந்தமல்லி வரையிலான ஆறு வழி உயர்மட்டச் சாலையை அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

மதுரவாயலில் அமைக்கப்படும் இரட்டை அடுக்கு கிளாஸ்ஃபளை அமைப்பு, நாட்டின் முதல் முயற்சியாகும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்திட்டத்தின் முதல் கட்டம், மதுரவாயல் கிளாஸ்ஃபளை பரிமாற்றம் முதல் பூந்தமல்லிக்கு அருகிலுள்ள சென்னை வெளிவட்டச் சாலை வரையிலான 8.14 கி.மீ. தூரத்தை உள்ளடக்கியது. இதில் NH-48 சந்திப்பிற்கான மேம்பாடுகளும் அடங்கும்.

chennai automobile

சென்னை வெளிவட்டச் சாலை

இந்த உயர்மட்டச் சாலைப் பணிகள், கலப்பின வருடாந்திர மாதிரி திட்டத்தின் கீழ் ரூ.1,241 கோடி செலவில் செயல்படுத்தப்படும். மதுரவாயல், பூந்தமல்லி, இருங்காட்டுக்கோட்டை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய நான்கு இடங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதுரவாயலில் அமையும் இரண்டு அடுக்கு கிளாஸ்ஃபளை, நாட்டின் முதல் முறையாகும். இது கட்டுமானத்தில் உள்ள துறைமுகம்-மதுரவாயல் உயர்மட்ட விரைவுச்சாலையிலிருந்து சென்னை துறைமுகம் நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கு தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யும்.

மதுரவாயல்-பூந்தமல்லி சாலை பணிகள்

மதுரவாயல்-பூந்தமல்லி நீட்டிப்புப் பணிகள் இந்த நிதியாண்டில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பூந்தமல்லியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரையிலான இரண்டாம் கட்டப் பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (CMRL) பூந்தமல்லியில் இருந்து பரந்தூர் விமான நிலையம் வரையிலான 52.94 கி.மீ. நீள மெட்ரோ ரயில் பாதை திட்டத்திற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து ஆய்வுகளின்படி, சென்னை-பூந்தமல்லி திசையில் மதுரவாயலுக்கு அருகே தினமும் 97,304 வாகனங்களும், பூந்தமல்லிக்கு அருகே 69,536 வாகனங்களும் செல்கின்றன. மறுபுறம், பூந்தமல்லியில் இருந்து சென்னை நோக்கி முறையே 94,747 மற்றும் 62,655 வாகனங்கள் பயணிக்கின்றன.

முதல் அடுக்கில் உயர்மட்டச் சாலை

இந்தப்பகுதியில், முதல் அடுக்கில் உயர்மட்டச் சாலையும், இரண்டாவது அடுக்கில் மெட்ரோ ரயிலும் என இரு அடுக்கு அமைப்பை NHAI திட்டமிட்டுள்ளது. "உயர்மட்டச் சாலை மற்றும் மெட்ரோ ரயில் ஒருங்கிணைப்புக்கு நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். மெட்ரோ ரயில் சீரமைப்பு குறித்த CMRL-ன் இறுதி திட்டத்தை எதிர்நோக்கியுள்ளோம்" என்று NHAI அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த ஒருங்கிணைப்பு திட்டத்தின்படி, மெட்ரோ ரயில் மற்றும் உயர்மட்டச் சாலை இரண்டும் ஸ்ரீபெரும்புதூர் வரை இரு அடுக்கு கட்டமைப்பாகச் செயல்படும். அங்கிருந்து நெடுஞ்சாலை முடிவடையும். மெட்ரோ பாதை NH-4 வழியாக நீர்வளூர் வரை தொடர்வதற்கு முன், வலதுபுறம் திரும்பி பரந்தூர் விமான நிலையத்தை நோக்கிச் செல்லும்.

இரண்டாவது அடுக்கில் மெட்ரோ ரயில்

முதல் கட்டத்தில், பூந்தமல்லியில் இருந்து குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் வழியாக சுங்குவார்சத்திரம் வரையிலான 27.9 கி.மீ. தூரத்தை, 14 நிலையங்களுடன், ரூ.8,779 கோடி செலவில் CMRL அமைக்கும்.

தற்போது 21 கி.மீ சென்னை துறைமுக - மதுரவாயல் இரட்டை அடுக்கு உயர்த்தப்பட்ட வழித்தடத்தின் ஒரு பகுதியாக வானகரத்தில் தூண்கள் வரத் தொடங்கியுள்ளன. அதேபோல் மதுரவாயல் தாண்டி தூண்கள் இருந்த பகுதிகளில் இரண்டு அடக்கு பாலங்கள் வர தொடங்கி உள்ளன. சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான 19.8 கி.மீ நீள இரட்டை அடுக்கு உயர்மட்ட விரைவுச்சாலை திட்டம் தற்போது முக்கியத்துவம் பெறுகிறது. இத்திட்டம் சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+