புல்லட் ரயில் டூ ராட்சச எக்ஸ்பிரஸ் வே.. தமிழ்நாட்டை மொத்தமாக மாற்ற போகும் 3 திட்டங்கள்.. ஆச்சர்யம்!
சென்னை; தமிழ்நாட்டை மொத்தமாக மாற்ற போகும் 3 திட்டங்கள் அடுத்தடுத்து நடந்து வருகின்றன. இந்த திட்டங்கள் தமிழ்நாட்டை பொருளாதாரத்தை, உற்பத்தியை, எதிர்காலத்தை பெரிய அளவில் மாற்றும்.
அவை என்னென்ன திட்டங்கள் என்று இங்கே பார்க்கலாம்.
எக்ஸ்பிரஸ் வே: சென்னை பெங்களூரை இணைக்கும் எக்ஸ்பிரஸ் வே சாலை பணிகள் நடந்து வருகின்றன. இதே பாதைக்கு அருகே புல்லட் ரயில் கொண்டு வரப்பட உள்ளது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே சென்னை பெங்களூர் இடையே விரைவுச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சாலை வந்த பின் பெங்களூர் - சென்னை இடையிலான பயணம் அடியோடு மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக தற்போது சென்னை பெங்களூர் இடையே பயணம் செய்ய 7 மணி நேரம் ஆகிறது. இந்த விரைவுச்சாலை வரும் பட்சத்தில் போக்குவரத்து 4 மணி நேரமாக குறையும். இதனால் மக்கள் இன்னும் வேகமாக, எளிதாக பயணம் செய்ய முடியும்.
பாலங்கள்: சென்னை பெங்களூரை இணைக்கும் சாலையில் உள்ள உயர் மட்ட சாலைகளாக அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையேயான மேம்பாலப் பணி இந்த நிதியாண்டு இறுதிக்குள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஆண்டுக்கான வேலைத் திட்டத்தில் இந்த திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. ₹3,500 கோடி மதிப்பில் இந்த உயர்மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது. அதாவது 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையே ஒரே நீளமாக பாலம் அமைக்கப்படும். இந்த பகுதியை இப்போது கடக்க 30 நிமிடம் குறைந்தபட்சம் ஆகிறது. பாலம் கட்டப்பட்டால் 10 -15 நிமிடத்தில் இந்த பகுதியை கடக்கலாம்
இடை இடையே மக்கள் வெளியேற, உள்ளே வர இணைப்பு பாலங்கள் அமைக்கப்படும். 6 வழி சாலை கொண்ட மிக பிரம்மாண்ட பாலம் ஆகும். இதற்கான முழு ரிப்போர்ட் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. . இந்த சாலையில் சூப்பர் வீடியோ இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக வெளியாகி உள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அதன்பின் இதற்கான டெண்டர் விடப்படும். இந்த வருட இறுதிக்குள் இதற்கான பணிகள் தொடங்கும். சென்னை - பெங்களூர் செல்ல தற்போது பயன்படுத்தப்படும் ஹைவேஸின் மேல் இந்த பாலம் கட்டப்படும். நடுவில் ஒரு பில்லர் வைத்து மெட்ரோ பாணியில் இந்த பாலம் அமைக்கப்படும்.
இரண்டு கட்டங்களாக இந்த பாலம் அமைக்கப்படும். ஒன்று மதுரவாயலில் இருந்து சென்னை வெளிவட்ட சாலை வரை அமைக்கப்படும். மற்றொன்று அந்த இடத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை அமைக்கப்படும். இந்த புதிய பாலம் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடிக்கு முன்னால் நெடுஞ்சாலையில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
புல்லட் ரயில்: சென்னை - மைசூர் அதிவேக ரயில் (CBM புல்லட் ரயில்) திட்டம் 435 கிமீ தூரம் செல்லும் உத்தேச அதிவேக ரயில் பாதை. இது சென்னை, பெங்களூர் (பெங்களூரு) மற்றும் மைசூர் (மைசூரு) ஆகிய நகரங்களை தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள 9 நிலையங்கள் வழியாக இணைக்கும்.
இதற்கான நிலம் எடுக்கும் பணிகள் இந்த வருடம் தொடங்க உள்ளது. சென்னை சென்ட்ரல் அருகே, பூந்தமல்லி, அரக்கோணம், சித்தூர், பங்காரப்பேட்டை, பெங்களூரு, சென்னபட்னா, மாண்டியா மற்றும் மைசூரு மார்க்கம் வழியாக இந்த ரயில் பயணிக்கும். இந்த திட்டத்தின் முக்கிய புள்ளிவிவரங்கள் முன்மொழியப்பட்டது: 435 கி.மீ
அதிகபட்ச வேகம்: 350 கி.மீ
செயல்பாட்டு வேகம்: மணிக்கு 320 கி.மீ
சராசரி வேகம்: 250 kmph
ட்ராக் கேஜ்: ஸ்டாண்டர்ட் கேஜ் - 1435 மிமீ
சிக்னலிங்: DS-ATC
ரயில் திறன்: 750 பயணிகள்
இழுவை: 25 KV AC மேல்நிலை கேடனரி (OHE)
பாதுகாப்பு: பூகம்பம் ஏற்பட்டால் தானாக நிறுத்துவதற்கும், நிலநடுக்கம் கண்டறிதல் மற்றும் எச்சரிக்கை அமைப்பு (யுரேடாஸ்) ஆகியவை கொண்டது.
சென்னை - மைசூர் ஹெச்எஸ்ஆர் பாதை
நீளம்: 435 கி.மீ
நிலையங்களின் எண்ணிக்கை: 9
நிலையத்தின் பெயர்கள்: சென்னை, பூந்தமல்லி, அரக்கோணம், சித்தூர், பங்காரப்பேட்டை, பெங்களூரு, சென்னபட்னா, மாண்டியா மற்றும் மைசூரு ஆகியவை ஆகும்.
மதுரவாயல் பாலம்: மதுரவாயல் - துறைமுகம் பாலம் திட்டம் கடந்த வாரம் முதல் தொடங்கி உள்ளது. இதற்கான டெண்டர்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டுவிட்ட நிலையில் குமார் கட்டுமான நிறுவனம் அங்கே ஏற்கனவே கட்டப்பட்ட பழைய தூண்களை இடித்துவிட்டு புதிய திட்டத்திற்கு ஏற்றபடி தூண்களை அமைக்க உள்ளது.
இதற்கான டெண்டர் விடப்பட்ட நிலையில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்துவிட்டன. சென்னையில் தற்போது பல்வேறு பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சாலைகள் சரி செய்யப்பட்டு வருகின்றன. புதிய சாலைகள் போடப்பட்டு வருகின்றன. சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை கூட பாலம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடக்க உள்ளன.
இந்த நிலையில்தான் இன்னொரு பக்கம் மதுரவாயல் பாலத்திற்கான கட்டுமானம் தொடங்கி உள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைத்து துறைமுகத்திற்கு கூடுதல் ஏற்றுமதி, இறக்குமதியை மேற்கொள்ள வைத்து, வருமானத்தை பெருக்கும் வகையில் திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதி மூலம் 2009ல் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் என்பது திமுகவின் கனவு திட்டம் ஆகும். சரியாக சொல்ல வேண்டும் என்றால் கருணாநிதியின் கனவு திடமாக இது இருந்தது. ஆனால் 14 வருடங்களாக இந்த திட்டம் தொடங்கப்படாமல் முடக்கப்பட்டு இருந்தது,
ஜெயலலிதா அரசியல்: மதுரவாயல் - துறைமுகம் இடையே பாலம் அமைக்கும் திட்டம் பல காலமாக ஜெயலலிதா ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட திட்டம். மதுரவாயல் வழியாக சென்னை உள்ளே நுழையும் பலர் பாதி கட்டப்பட்டு நிற்கும் பாலங்களை பார்த்து இருப்பார்கள். வெறும் தூண்கள் மட்டும் போஸ்டர் ஒட்டும் இடங்களாக காட்சி அளிக்கும்.

கிடப்பில் போடப்பட்ட திட்டம்: அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா இந்த திட்டத்தை நிறுத்தினார். கூவத்தின் மீது பாலம் கட்டுவது சுற்றுசூழலை பாதிக்கும் என்று கூறி திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டார். தமிழ்நாட்டில் அப்போது அரசியல் ரீதியாக கடுமையாக ஈகோ மோதல் நிலவி வந்தது. முக்கியமாக புதிய சட்டசபை கூட மருத்துவமனையாக மாற்றப்பட்டது. அதனால் இந்த திட்டமும் கைவிடப்பட்டது , கட்டப்பட்ட பாலங்கள் அப்படியே நின்றன.
அந்த திட்டம் அதன்பின் மேம்படுத்தப்படாமலே இருந்தது. 2011ல் நிறுத்தப்பட்ட இந்த திட்டம் 2022 வரை தொடங்கப்படாமல் இருந்தது. 11 வருடமாக திட்டம் முடங்கி கிடந்தது. இங்கு வெறும் தூண்கள் மட்டும் போஸ்டர் ஒட்ட பயன்படுத்தப்பட்டு வந்தது. இது சென்னைக்கே அலங்கோலத்தை கொடுக்கும் விதமாக மாறியது.
இதனால் அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதையடுத்து திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த பாதையில் இரட்டை மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவித்தார். தமிழ்நாடு அரசு இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஏற்கனவே கட்டப்பட்ட தூண்கள் இடிக்கப்பட்டு இங்கு புதிதாக மொத்தமாக கட்டுமானம் தொடங்க உள்ளது. முதலில் இருந்து கட்டுமானத்தை தொடங்குவதற்காக முடிவு எடுக்கப்பட்டது.
ஒப்பந்தம் கையெழுத்தானது: சென்னையில் கட்டப்பட உள்ள இந்த மதுரவாயல் பாலம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட உள்ளது. இதற்கான டெண்டர் சமீபத்தில் விடப்பட்ட நிலையில், J Kumar Infraprojects என்ற நிறுவனம் வென்றுள்ளது. ஏற்கனவே டெண்டர் 1, 2, 4 ஆகியவற்றை கைப்பற்றிய இந்த நிறுவனம் தற்போது டெண்டர் 4ஐயம் கைப்பற்றி உள்ளது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications