ஆல்ரெடி ஆரம்பிச்சிட்டாங்களே! தமிழ்நாட்டில் வேகமாக முன்னேறும் சின்ன நகரம்.. வருது பெரிய ப்ராஜெக்ட்!
சென்னை: மன்னார்குடியைச் சுற்றி 22 கி.மீ.க்கு ரிங்ரோடு அமைக்கப்படும். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சில கிராம சாலைகளைத் தவிர மூன்று மாநில நெடுஞ்சாலைகளையும் இந்த சாலை இணைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. முதல் கட்டமாக அளவெடுக்கும் பணிகள் தற்போது தொடங்கி நடந்து வருகின்றன.
இதன் மூலம் தமிழ்நாட்டில் ரிங் ரோடு அமைக்கப்படும் மிக சிறிய நகரமாக மன்னார்குடி மாறி உள்ளது. தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மன்னார்குடி எம்எல்ஏவாக இருக்கும் நிலையில் ஏற்கனவே அங்கே பேருந்து நிலையம் மொத்தமாக புனரமைக்கப்பட்டு மத்திய பேருந்து நிலையமாக மாற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்தான் ரிங் ரோடு அமைப்பது மன்னார்குடியில் போக்குவரத்து நெரிசலை பெருமளவில் குறைக்க வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . முன்மொழியப்பட்ட சுற்றுச் சாலையுடன் கிராமப்புற சாலைகளை இணைப்பதன் மூலம் விவசாய விளைபொருட்களை அருகில் உள்ள நகரங்களுக்கு மிக எளிதாக கொண்டு செல்ல முடியும்.
ரிங் சாலை கும்பகோணம்-மன்னார்குடி-அதிராம்பட்டினம் சாலையை இணைக்கும் (மாநில நெடுஞ்சாலைகள் எண். 66); திருவாரூர்-மன்னார்குடி-முத்துப்பேட்டை சாலை (SH எண். 22); மன்னார்குடி-சேதுபாவசமுத்திரம் சாலை (SH எண். 46); மற்றும் மன்னார்குடி-திருமக்கோட்டை-சொக்கனாவூர் சாலை உள்ளிட்ட பிற சாலைகள்; மன்னார்குடி-ஒரத்தநாடு-திருவோணம் சாலை மற்றும் ஒரு சில கிராமப்புற சாலைகளை இது இணைக்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளது.
உத்தேச ரிங்ரோடு மூன்றாம்சேத்தி, பாமினி, அரவத்தூர், ராமாபுரம், கைலாசநாதர் கோயில், நாங்கம்சேத்தி, சேரங்குளம், கொப்பிராலயம், நெடுவாக்கோட்டை, குமாரபுரம், கரிக்கோட்டை, மேலவயல், மூவாநல்லூர் ஆகிய வருவாய் கிராமங்கள் வழியாகச் செல்லும்.
பணிகள் நடக்கிறது: சுற்றுச் சாலையுடன் இணைக்கப்படும் மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட ஆட்சியர் மு.மதிவாணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து அனைத்து கிராமங்களுக்கும் சென்று திட்டப் பணிகள் குறித்த நேரடித் தகவல்களைப் பெற்றார். மன்னார்குடி நகரில் 73 மீட்டர் நீளமுள்ள புதிய பாலம் ரூ. 2.75 கோடி. அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
பட்ஜெட்: இது போக தமிழ்நாட்டில் கடந்த பட்ஜெட்டில், கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் 2000 கி.மீ. சாலைப்பணிகள் ₹1000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
மாநகர பகுதிகளில் சாலை விரிவாக்க பணிக்காக ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சிங்காரச் சென்னை 2 திட்டத்திற்கு ₹500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னையில் சாலைகளை விரிவுபடுத்த ₹300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ₹100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வடசென்னை பகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ₹1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
சென்னையில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட சாலைகள் அகலப்படுத்தப்படும். 18 மீட்டர் முதல் 30 மீட்டர் வரை சாலைகள் அகலப்படுத்தப்படும். 2,000 புதிய மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்க ரூ.365 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ரூ.300 கோடியில் மாநகராட்சியை ஒட்டியுள்ள பகுதிகளில் சாலை வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
பெசண்ட் நகர், கோவளம், எண்ணூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 5 லட்சம் ஏழை எளிய மக்களை வறுமைக் கோட்டிலிருந்து மீட்க தாயுமானவன் திட்டம் ஏற்படுத்தப்பட்டு ரூ.25,972 கோடி ஒதுக்கீடு செய்யப்படும், என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications