Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவின் மிக முக்கிய பாதை.. வருது தமிழ்நாட்டை சூரத்தோடு இணைக்கும்.. மாபெரும் எக்ஸ்பிரஸ் வே

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூரத்திலிருந்து சென்னை வரையிலான 6 வழிச்சாலை திட்டத்தின் கடைசி கட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.19,000 கோடி மதிப்பிலான இந்த புதிய நெடுஞ்சாலை திட்டம் மூலம் பயண நேரம் 45% குறையும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

220 கிமீ சூரத் - சென்னை விரைவுச்சாலை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதன் 65 சதவிகித பணிகள் முடிந்துள்ளன. இன்னும் அடுத்த 6-7 வருடத்தில் மீதம் உள்ள பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

automobile

சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ் வே சாலை கட்டுமானம் ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில் சூரத் - சென்னை எக்ஸ்பிரஸ் வே சாலை இன்னொரு பக்கம் கட்டப்பட்டு வருகிறது. இந்த சாலை வேகமாக உருவாகி வருகிறது. அடுத்த வருடம் திறக்கும் விதமாக இந்த சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

220 கிமீ சூரத் - சென்னை விரைவுச்சாலை NHAI மூலம் கட்டப்பட்டு வரும் 6 வழிப்பாதை பகுதி அணுகல்-கட்டுப்பாட்டு நெடுஞ்சாலையாகும். இது நாசிக், அகமதுநகர், சோலாப்பூர், கலபுர்கி, கர்னூல், கடப்பா மற்றும் திருப்பதி வழியாக குஜராத், மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றை இணைக்கிறது.

மொத்த மதிப்பிடப்பட்ட செலவு: ரூ. 45,000 கோடி
திட்டத்தின் நீளம்: 1220 கிமீ (தோராயமாக)
பாதைகள்: 6
வடிவமைப்பு வேகம்: மணிக்கு 120 கிமீ
நிலை: கட்டுமானத்தின் கீழ், ஏலம் மற்றும் நிலம் கையகப்படுத்துதலின் கீழ்
கடைசி தேதி: டிசம்பர் 2026
உரிமையாளர்: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI)
திட்ட மாதிரி: ஹைப்ரிட் ஆன்யூட்டி மாடல் (HAM)

சென்னை கிரீன்ஃபீல்ட் மற்றும் பிரவுன்ஃபீல்ட்

இந்த திட்டமானது கிரீன்ஃபீல்ட் மற்றும் பிரவுன்ஃபீல்ட்-மேம்படுத்தப்பட்ட பிரிவுகளுடன் பகுதியளவு அணுகல்-கட்டுப்படுத்தப்பட்ட 2 பொருளாதார எக்ஸ்பிரஸ் வேக்களின் கலவையாகும்.

அதன்படி 513 கிமீ: சூரத் - நாசிக் - அகமதுநகர் - சோலாப்பூர் பொருளாதார வழித்தடம்
707 கிமீ: சோலாப்பூர் - கர்னூல் - சென்னை பொருளாதார வழித்தடமாக கட்டப்பட உள்ளது.

பெங்களூர் சாலை : சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ் வே சாலை கட்டுமானம் ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில் சூரத் - சென்னை எக்ஸ்பிரஸ் வே சாலை இன்னொரு பக்கம் கட்டப்பட்டு வருகிறது. சென்னை - பெங்களூர் இடையே அமைக்கப்படும் எக்ஸ்பிரஸ் வே சாலை தொடர்பான முக்கியமான அப்டேட் வெளியாகி உள்ளது. கர்நாடகாவில் 60 சதவிகித பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆந்திர பகுதியில் மட்டுமே பணிகள் மெதுவாக நடக்கின்றது. இதனால் அந்த பகுதியில் டிசம்பரில் சாலை திறக்கப்படும். அதற்கு முன் உள்ள தமிழ்நாடு பகுதிகள் மற்றும் கர்நாடக பகுதிகளில் அதற்கு முன்பாகவே சாலையை திறக்க முடிவு செய்துள்ளனர். பெரும்பாலும் ஜூலை மாதமே சாலையை திறக்க முடிவு செய்துள்ளனர்.

சென்னை சாலை பணிகள் தீவிரம்

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே சென்னை பெங்களூர் இடையே விரைவுச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சாலை வந்த பின் பெங்களூர் - சென்னை இடையிலான பயணம் அடியோடு மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக தற்போது சென்னை பெங்களூர் இடையே பயணம் செய்ய 7 மணி நேரம் ஆகிறது. இந்த விரைவுச்சாலை வரும் பட்சத்தில் போக்குவரத்து 4 மணி நேரமாக குறையும். இதனால் மக்கள் இன்னும் வேகமாக, எளிதாக பயணம் செய்ய முடியும்.

சென்னையில் வரும் பாலங்கள்

சென்னை பெங்களூரை இணைக்கும் சாலையில் உள்ள உயர் மட்ட சாலைகளாக அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையேயான மேம்பாலப் பணி இந்த நிதியாண்டு இறுதிக்குள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஆண்டுக்கான வேலைத் திட்டத்தில் இந்த திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. ₹3,500 கோடி மதிப்பில் இந்த உயர்மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது. அதாவது 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையே ஒரே நீளமாக பாலம் அமைக்கப்படும். இந்த பகுதியை இப்போது கடக்க 30 நிமிடம் குறைந்தபட்சம் ஆகிறது. பாலம் கட்டப்பட்டால் 10 -15 நிமிடத்தில் இந்த பகுதியை கடக்கலாம்

இடை இடையே மக்கள் வெளியேற, உள்ளே வர இணைப்பு பாலங்கள் அமைக்கப்படும். 6 வழி சாலை கொண்ட மிக பிரம்மாண்ட பாலம் ஆகும். இதற்கான முழு ரிப்போர்ட் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. . இந்த சாலையின் சூப்பர் வீடியோ இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக வெளியாகி உள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

விரைவில் டெண்டர் விடப்படும்

அதன்பின் இதற்கான டெண்டர் விடப்படும். இந்த வருட இறுதிக்குள் இதற்கான பணிகள் தொடங்கும். சென்னை - பெங்களூர் செல்ல தற்போது பயன்படுத்தப்படும் ஹைவேஸின் மேல் இந்த பாலம் கட்டப்படும். நடுவில் ஒரு பில்லர் வைத்து மெட்ரோ பாணியில் இந்த பாலம் அமைக்கப்படும்.

இரண்டு கட்டங்களாக இந்த பாலம் அமைக்கப்படும். ஒன்று மதுரவாயலில் இருந்து சென்னை வெளிவட்ட சாலை வரை அமைக்கப்படும். மற்றொன்று அந்த இடத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை அமைக்கப்படும். இந்த புதிய பாலம் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடிக்கு முன்னால் நெடுஞ்சாலையில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+