Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக அரசே.. இலவசமாக வழங்கும் கார் ஓட்டுனர் பயிற்சி.. நான் முதல்வன் திட்டத்தில்.. புதிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாகன ஓட்டுனர்களுக்கு உலகளவில் தேவை அதிகரித்து வருவதால், குறிப்பாக ஜப்பான் போன்ற நாடுகளில் வாகன ஓட்டுனர்களுக்கு தேவை அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் அதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இப்போது இலவச தொழில்முறை ஓட்டுநர் பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட உள்ளன.

45-நாள் LMV/HTV மற்றும் 30-நாள் Forklift Operator திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. 8வது, 10வது அல்லது 12வது வகுப்புத் தகுதிகளைக் கொண்ட விண்ணப்பதாரர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைய முடியும். ரெட் ஹில்ஸ், மறைமலைநகர், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் பயிற்சி மையங்கள் உள்ளன. வரும் நாட்களில் மற்ற பகுதிகளுக்கு இந்த திட்டம் விரிவாக்கப்படும்.

automobile naan mudhalvan

இந்த முன்முயற்சியானது உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் வாகன ஓட்டுனர் வேலைவாய்ப்புகளை பெற உதவியாக இருக்கும். இதற்கு இடையில்தான் தமிழ்நாட்டின் 'நான் முதல்வன்’ திட்டம் மூலம் இதுவரை எத்தனை பேர் பயன் அடைந்துள்ளனர். எத்தனை மாணவர்கள் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

'நான் முதல்வன்’ திட்டம் 2022 இல் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் அதிக ஊதியம் பெறும் வேலைகள், தொழில்முனைவு மற்றும் திறன் மேம்பாட்டிற்காக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதுவரை, 28.3 லட்சம் மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர், 11 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர்.

டிசிஎஸ் மற்றும் விப்ரோ போன்ற நிறுவனங்கள் 2.2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளன, 2027க்குள் ஆறு லட்சம் பேர் பணியமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முயற்சி ஸ்டார்ட்அப்களை உருவாக்கவும் பயிற்சி அளிக்கிறது 50 மாணவர்கள் முன்னிறுத்திய ஸ்டார்ட் அப் திட்டங்கள் இதுவரை பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களாக மாறி உள்ளன.

இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 30 மாணவர்கள் சர்வதேச கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக ஜெர்மனி, ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் படிக்கும் இளைஞர்கள், வேலைதேடுபவர்கள் என்று பலருக்கு ஏற்றபடி புதிய திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. முக்கியமாக நான் முதல்வன் திட்டம் மக்களிடையே பெரிய அளவில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளன. மாணவர்கள் பலருக்கு புதிய வாய்ப்புகளை நான் முதல்வன் திட்டம் வழங்கி வருகிறது.

இன்னும் சொல்லப்போனால் தனியார் பள்ளிகளில் இருப்பவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை விட பெரிய வாய்ப்புகள் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நான் முதல்வர் திட்டம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில்தான் தமிழ்நாட்டில் வேலை தேடிக்கொண்டு இருக்கும் இளைஞர்களுக்கு என்று சிறப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள போஸ்டில், வேலை
தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்களா நீங்கள்? தற்போது கல்லூரி முடித்து அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா?

வேலை தேடும் 21 முதல் 24 வயதுக்கு உட்பட்ட 1 கோடி இளைஞர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் கிடைக்கும் 12 மாத PM இன்டர்ன்ஷிப் வாய்ப்பு.. இதை பயன்படுத்த தவற வேண்டாம். இதற்காக மாதம் ரூ.5000 மாத ஊக்கத்தொகை வழங்கப்படும். இளைஞர்களின் ஆர்வத்தை பொறுத்து, எந்தத் துறையில் விரும்புகிறீர்களோ அந்த துறையில் 5 Internship வாய்ப்புகள் தேர்வு செய்யலாம்.

இதற்கான தகுதிகள்:

10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பாலிடெக்னிக், ITI, டிப்ளமா, ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு.
குடும்பத்தின் கடந்த ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கு மேல் இருக்கக்கூடாது.

மேலும் விவரங்களுக்கு, தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் இணையதளம் பாருங்கள்: www.naanmudhalvan.tn.gov.in
விண்ணப்பிக்க QR Code ஐ ஸ்கேன் செய்யவும், என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டு மாணவர் ஒருவர், உலகின் எந்த நாட்டு மாணவரையும் விட, தரமும் தகுதியும் குறைந்தவர் கிடையாது என்பதைக் காட்டும் திட்டம் தான் நான் முதல்வன், என்று தமிழ்நாடு அரசு இந்த திட்டம் குறித்து விளக்கம் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2200+ நிறுவனங்கள், கல்வி அமைப்புகளில் இந்த மாணவர்கள் வாய்ப்புகளை பெற்றுள்ளனர். 250+ படிப்புகளை இவர்கள் தேர்வு செய்துள்ளனர்.

அதேபோல் இந்த திட்டத்தில் 80 க்கும் மேற்பட்ட சர்வதேச அமைப்புகள் பங்குதாரர்களாக உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+