இவ்வளவு கம்மியா? சென்னை - பெங்களூர் இடையே வரும் விரைவு சாலை.. டோல் கட்டணம் என்ன தெரியுமா?
சென்னை: சென்னை பெங்களூர் இடையே அமைய இருக்கும் பசுமைவழி சாலையின் டோல் கட்டணம் எவ்வளவு இருக்கும் என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
தென்னிந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் சாலைகளில் ஒன்றாக பெங்களூர் சென்னை பசுமைவழி சாலை உள்ளது. தென்னிந்தியாவில் உள்ள இரண்டு பெரிய நகரங்களை இந்த சாலைகள் இணைக்க உள்ளன.

ஏற்கனவே இங்கு உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்ய 10 மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது. அதிகட்சம் 8 மணி நேரத்தில் இரண்டு நகரங்களுக்கு இடையே பயணம் செய்ய முடியும். இப்படிப்பட்ட நிலையில்தான் இரண்டு நகரங்களுக்கு இடையில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே சென்னை பெங்களூர் இடையே விரைவுச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சாலை வந்த பின் பெங்களூர் - சென்னை இடையிலான பயணம் அடியோடு மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக தற்போது சென்னை பெங்களூர் இடையே பயணம் செய்ய 7 மணி நேரம் ஆகிறது. இந்த விரைவுச்சாலை வரும் பட்சத்தில் போக்குவரத்து 4 மணி நேரமாக குறையும். இதனால் மக்கள் இன்னும் வேகமாக, எளிதாக பயணம் செய்ய முடியும்.
வேகம் எடுக்கும் பணிகள்: சென்னை பெங்களூர் விரைவுச்சாலை ரூ.18 ஆயிரம் கோடி செலவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மொத்தம் 258 கி.மீட்டர் தூரத்துக்கு இந்த மிக நீண்ட சாலை அமைக்கப்பட உள்ளது. தென் இந்தியாவின் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் வழியாக இந்த சாலை 4 வழிச்சாலையாக உயர் தரத்தில் அமைக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய பசுமை வழி சாலைகளில் இதுவும் ஒன்றாகும்.
டோல் கட்டணம்: இந்த நிலையில் இந்த சாலையில் பயணம் செய்ய எவ்வளவு டோல் கட்டணம் வசூல் செய்யப்படும் என்ற விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. பெங்களூர் - சென்னை விரைவுச்சாலை என்பது பெங்களூர் மற்றும் சென்னை நகரங்களை இணைக்கும் நோக்கத்துடன் 262 கிமீ நீளமுள்ள விரைவுச் சாலையாகும். இந்த திட்டம் இரண்டு முக்கிய நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை குறைக்கும் மற்றும் அந்த பகுதியில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பகுதியின் டோல் கேட் கட்டண விகிதங்கள்:
கார்கள் மற்றும் ஜீப்புகள் போன்ற இலகுரக வாகனங்கள்: கி.மீ.க்கு ₹0.65
பெரிய சரக்கு வாகனம் மற்றும் மினி பேருந்து: கி.மீ.க்கு ₹1.05
பேருந்துகள் மற்றும் லாரிகள்: ஒரு கி.மீ.க்கு ₹2.20
மூன்று அச்சு லாரிகள்: கி.மீ.க்கு ₹2.40
மல்டி ஆக்சில் டிரக்குகள்: கி.மீ.க்கு ₹3.45
அதிக அளவு லாரிகள்: கி.மீ.க்கு ₹4.20 என்ற தொகை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
பாலங்கள்: சென்னை பெங்களூரை இணைக்கும் சாலையில் உள்ள உயர் மட்ட சாலைகளாக அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையேயான மேம்பாலப் பணி இந்த நிதியாண்டு இறுதிக்குள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த ஆண்டுக்கான வேலைத் திட்டத்தில் இந்த திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. ₹3,500 கோடி மதிப்பில் இந்த உயர்மட்ட சாலை அமைக்கப்பட உள்ளது. அதாவது 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் இடையே ஒரே நீளமாக பாலம் அமைக்கப்படும். இந்த பகுதியை இப்போது கடக்க 30 நிமிடம் குறைந்தபட்சம் ஆகிறது. பாலம் கட்டப்பட்டால் 10 -15 நிமிடத்தில் இந்த பகுதியை கடக்கலாம்.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
6வது இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னை விமான நிலையம்.. முந்திய பெங்களூர்! பிசியான ஏர்போர்ட் லிஸ்ட் -
பெங்களூருவுடன் ஒப்பிடுவது தவறு.. பரந்தூர் விமான நிலையம் குறித்து பூவுலகின் நண்பர்கள் கருத்து -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!












Click it and Unblock the Notifications