டெல்டா இனி தலைநிமிர்ந்து நிற்கும்.. கண்ணை காட்டிய டெல்லி.. வேகமாக நடக்கும் பணிகள்.. வருது புது ஹைவே!
தஞ்சாவூர்: தேசிய நெடுஞ்சாலை 36ல் சோழபுரம் - தஞ்சாவூர் இடையிலான சாலை பணிகள் முடிவடைந்து உள்ளன. இதனால் அங்கே முழுமையான போக்குவரத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலை 36 (NH 36) விக்கிரவாண்டி அருகே அமைய உள்ள மிகப்பெரிய தேசிய நெடுஞ்சாலையாகும். இது விக்கிரவாண்டியில் தொடங்கி மானாமதுரையில் முடிவடைகிறது. இதன் மொத்த நீளம் 334 கி.மீ.பண்ருட்டி, வடலூர் அணைக்கரை, கும்பகோணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருப்பத்தூர், சிவகங்கை வழியாக இந்த நெடுஞ்சாலை செல்கிறது.

இது பண்ருட்டி, வடலூர், ஆனைக்கரை, கும்பகோணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருப்பத்தூர், சிவகங்கை உள்ளிட்ட பல முக்கிய நகரங்கள் வழியாக செல்கிறது. இந்த பாதையானது மாவட்டங்களுக்கு போக்குவரத்திற்கு மிகவும் தேவையாக அமையும்.
தேசிய நெடுஞ்சாலை 36ல் சோழபுரம் - தஞ்சாவூர் இடையிலான சாலை பணிகள் முடிவடைந்து உள்ளன. இதனால் அங்கே முழுமையான போக்குவரத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி நல்லூர் வி.யு.பி. குடுமுருட்டி ஆற்றுப் பாலத்தை சாலையுடன் இணைக்கும் பணி முடிவடைந்து உள்ளது.
நான்கு வழிச்சாலை கொண்ட சோழபுரம்-தஞ்சாவூர் பிரிவு 48 கி.மீ. நீளம் கொண்டது. இதில் இரண்டு பைபாஸ் பிரிவுகள், நான்கு பெரிய பாலங்கள் மற்றும் 15 வாகன சுரங்கப்பாதைகள்/மேம்பாலங்கள் உள்ளன. சேத்தியாத்தோப்பு-சோழபுரம் பிரிவு சுமார் 50 கி.மீ தூரத்திற்கு இயங்குகிறது, இதில் மூன்று புறவழிச்சாலைகள், நான்கு பெரிய பாலங்கள் மற்றும் 20 VUPகள்/மேம்பாலங்கள் உள்ளன.
வேகம் எடுக்கும் பணிகள்: மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மேற்கொண்ட ஆய்விற்கு பின் இங்கே நடக்கும் பணிகள் தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட காலமாக முடிக்கப்படாமல் இருந்த விக்கிரவாண்டி-கும்பகோணம்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை கட்டுமானத்தை கடந்த வாரம் ஆய்வு செய்தது கவனம் பெற்றுள்ளது.
இதனால் இத்திட்டம் தேவையான உந்துதலைப் பெறும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. இத்திட்டம் டெல்டா பகுதிக்கான முக்கியமான உள்கட்டமைப்பு வளர்ச்சியை கொடுக்கும். விழுப்புரம், கடலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு இது ஒரு முக்கிய வழித்தடமாக அமையும்.
செப்டம்பர் 2020க்குள் முடிக்க திட்டமிடப்பட்டிருந்த இந்த திட்டம் இப்போது வரை முடிக்கப்படவில்லை. கஜா புயல், கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் நிதி ஒதுக்குவதில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முழு திட்டமும் தாமதமானது என்று மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. முக்கியமாக நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் இந்த சாலை அமைப்பதில் சிக்கலை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் முதல் சோழபுரம் மற்றும் சோழபுரம் முதல் சேத்தியாத்தோப்பு வரையிலான திட்டத்தின் இரண்டு தொகுப்புகளில் சுமார் 95% பணிகள் நிறைவடைந்துள்ளன. மற்ற தொகுப்பின் ஒப்பந்தத்தை முடித்துவிட்டு புதிய டெண்டருக்கு செல்ல NHAI முடிவு செய்திருந்தது. கூடிய விரைவில் பணிகள் துவங்கப்படும் என்று கூறப்படுகிறது.
நான்கு வழிச்சாலை கொண்ட சோழபுரம்-தஞ்சாவூர் பிரிவு 48 கி.மீ. நீளம் கொண்டது. இதில் இரண்டு பைபாஸ் பிரிவுகள், நான்கு பெரிய பாலங்கள் மற்றும் 15 வாகன சுரங்கப்பாதைகள்/மேம்பாலங்கள் உள்ளன. சேத்தியாத்தோப்-சோழபுரம் பிரிவு சுமார் 50 கி.மீ தூரத்திற்கு இயங்குகிறது, இதில் மூன்று புறவழிச்சாலைகள், நான்கு பெரிய பாலங்கள் மற்றும் 20 VUPகள்/மேம்பாலங்கள் உள்ளன.
அமைச்சரின் ஆய்வும், திட்டம் குறித்த உறுதிமொழியும் கும்பகோணம் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை நாள் இந்த திட்டம் நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. இத்திட்டத்தை அமைச்சர் நேரில் ஆய்வு செய்தது அப்பகுதியில் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சோழபுரம் - தஞ்சாவூர் இடையிலான நெடுஞ்சாலைப் பகுதி முழுமையாகப் பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் போக்குவரத்துக்கு திறக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். அமைச்சரின் வருகையைத் தொடர்ந்து மற்ற தொகுப்புகளும் விரைவாக நிறைவேற்றப்படும் என்று நம்புகிறோம் என்று அப்பகுதி மக்கள் ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications