மங்காத்தா ரீ ரிலீஸ்.. விஜய்யோடு போட்டோவை வெளியிட்டு, வெங்கட் பிரபு சொன்ன வார்த்தை! இவரு நல்ல தெளிவு தான்!
சென்னை: அஜித் குமார் நடித்த மங்காத்தா திரைப்படத்தின் ரீரிலீஸ், இன்று ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவாகவே மாறியுள்ளது. 15 ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்குகளில் மீண்டும் வெளியாகியுள்ள இந்த படம், அஜித் ரசிகர்களை மட்டுமல்லாமல் பொதுவான சினிமா ரசிகர்களையும் திரையரங்குகளுக்கு இழுத்து வருகிறது. இந்த நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்ட ஒரு பதிவு தான் தற்போது இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அஜித்தின் 50வது படமாக வெளியான மங்காத்தா, அவரது திரைவாழ்க்கையில் மிக முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. வழக்கமான ஹீரோ இமேஜை உடைத்து, முழுக்க நெகட்டிவ் ஷேட்ஸ் கொண்ட கதாபாத்திரத்தில் அஜித்தை காட்டிய படம் என்பதால், இன்றுவரை இந்த படத்திற்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

அந்த படத்தின் ரீரிலீஸ் இன்று மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. சன் பிக்சர்ஸ் பக்கா பிளானுடன் இந்த மறுவெளியீட்டை கையில் எடுத்துள்ளனர். அதற்கேற்ப ப்ரோமோஷன், திரை எண்ணிக்கை, ப்ரீ புக்கிங் என அனைத்திலும் மங்காத்தா முன்னிலை வகிக்கிறது.
ரீரிலீஸுக்கு முன்பே முன்பதிவு அமோகமாக நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பு ரீரிலீஸில் சாதனை படைத்த விஜய்யின் கில்லி, ரஜினியின் படையப்பா போன்ற படங்களின் வசூலுக்கு மங்காத்தா சவால் விடும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. தமிழகத்தைத் தாண்டி பல மாநிலங்களிலும் மங்காத்தா ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளதால், ஓப்பனிங் வசூல் மிகப்பெரிய அளவில் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த சூழலில், இயக்குனர் வெங்கட் பிரபு தனது ஸ்டைலில் கலகலப்பான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "மங்காத்தா கிளைமாக்ஸ் காட்சியை மட்டும் கசியவிடாதீர்கள்" என ரசிகர்களிடம் நகைச்சுவையாக கோரிக்கை வைத்துள்ளார். குறிப்பாக இந்த கிளைமாக்ஸ் குறித்த அவரது பதிவு தான் அஜித் ரசிகர்களிடையே அதிகமாக வைரலாகி வருகிறது.
அதோடு மட்டுமல்லாமல், மங்காத்தா படப்பிடிப்பு காலத்தில் எடுக்கப்பட்ட ஒரு பழைய புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அஜித், விஜய் மற்றும் வெங்கட் பிரபு மூவரும் ஒன்றாக இருக்கிறார்கள். அந்த பதிவில், "இது மறக்க முடியாத ஒரு தருணம். இனி இப்படியொரு தருணம் மீண்டும் நடக்க வாய்ப்பு இருக்காது போல தோன்றுகிறது. ஆனாலும் என் கணிப்பு பொய்யாக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்" என்று வெங்கட் பிரபு குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு வெளியானதும், ரசிகர்கள் மத்தியில் "அஜித் - விஜய் கூட்டணி மீண்டும் உருவாகுமா?" என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. உண்மையில், நீண்ட காலமாக அஜித் மற்றும் விஜய் இருவரையும் வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை வெங்கட் பிரபுவுக்கு இருந்ததாக சொல்லப்படுகிறது.

மங்காத்தா படம் வெளியான பிறகு கூட, விஜய் வெங்கட் பிரபுவிடம், "இந்த படத்தில் அர்ஜுன் ரோலில் நான் நடித்திருக்கலாமே" என்று சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. அதன் பிறகு, இரு பெரிய நட்சத்திரங்களையும் வைத்து ஒரு படம் எடுக்க வெங்கட் பிரபு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது விஜய் முழுமையாக அரசியலுக்கு சென்றுள்ளதால், அந்த வாய்ப்பு இனி சாத்தியமில்லை என்றே சினிமா வட்டாரங்கள் கருதுகின்றன.
இருந்தாலும், வெங்கட் பிரபு விஜயை வைத்து GOAT படத்தை இயக்கி அதை வெற்றிப்படமாக மாற்றினார். அந்த படத்திலும், மங்காத்தா போலவே விஜய்க்கு நெகட்டிவ் ஷேட்ஸ் கொண்ட கதாபாத்திரத்தை கொடுத்து ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தார்.
இந்நிலையில், மங்காத்தா ரீரிலீஸை ஒரு சாதாரண நிகழ்வாக இல்லாமல், ரசிகர் கொண்டாட்டமாக மாற்றுவதில் வெங்கட் பிரபு மற்றும் படக்குழு முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர். ரீரிலீஸ் தினத்தை முன்னிட்டு, வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் பல திரையரங்குகளுக்கு நேரில் சென்று ரசிகர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர். சில தியேட்டர்களில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் அவர் நேரடியாக பதிலளித்துள்ளார். இந்த நிகழ்வுகள் சமூக வலைதளங்களில் வீடியோக்களாக வைரலாகி வருகின்றன.
ஆனால், இவ்வளவு பெரிய கொண்டாட்டங்களுக்கு மத்தியில் கூட, அஜித் வழக்கம் போல அமைதியாகவே இருக்கிறார். மங்காத்தா ரீரிலீஸ் குறித்து அவர் எந்த பேட்டியும் கொடுக்கவில்லை, எந்த சமூக வலைதள பதிவும் வெளியிடவில்லை. ரசிகர்கள் கொண்டாடட்டும், படம் பேசட்டும் என்பதே அவரது நிலைப்பாடாக இருக்கிறது. இந்த மௌனமே தான் அஜித்தின் ஸ்டைல் என்று ரசிகர்கள் சொல்கிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications