மலேசியாவுல ஜனநாயகன் ஆடியோ லான்ச் நடக்க இதுதான் காரணமா? விஜய் போட்ட ஒற்றை கண்டிஷன் பாருங்க
சென்னை: மலேசியாவில் உள்ள தலைநகரான கோலாலம்பூர் விளையாட்டு மைதானத்தில் ஜனநாயகன் பட ஆடியோ லான்ச் நடைபெற உள்ளதாகவும், இந்நிகழ்ச்சியில் ஒரு லட்சம் பேர் வரைக்கும் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், மலேசியாவில் ஏன் ஜனநாயகன் பட விழாவை நடத்த வேண்டும் என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு காரணங்களை தந்துள்ளார்.
Cheyyaru Balu என்ற யூடியூப் சேனலில் பேசியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, 'ஜனநாயகன்' படம் விஜய்யின் கடைசி படம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.. படம் நடித்து முடித்த பிறகும் ரகசியமாக கதை கேட்டு வருவதாக தகவல்கள் வருவதெல்லாம் உண்மை கிடையாது.

விஜய் இன்றைக்கும் லைம்லைட்டில் இருக்கும் நடிகர்.. ரூ.200 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குபவர் என்பதால், இந்தப் படத்தின் எதிர்பார்ப்பு மிக அதிகமாகவே உள்ளது..
ஜனநாயகன் கடைசி படம்
ஜனநாயகன்' படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமையை வாங்க ஆள் இல்லை என்றார்கள்.. ஆனால், இப்போது 10 பேர் சேர்ந்து வாங்கியிருப்பதாக சொல்கிறார்கள்..
இதுகுறித்து நானே இறங்கி விசாரித்ததில் 3 பேர் வாங்கியிருக்கிறார்களாம்.. அதாவது, ஃபைவ் ஸ்டார் செந்தில்,, கோயம்புத்தூர், பெங்களூரைச் சேர்ந்த மூன்று பேர் சேர்ந்து ₹115 கோடிக்கு 'ஜனநாயகன்' படத்தை வாங்கியிருக்கிறார்களாம்.. தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத ஒரு பெரிய தொகை இது என்கிறார்கள்.. இந்த 3 பேரும், ஏரியாவை பிரித்து பிரித்து தந்துள்ளார்கள்..
'ஜனநாயகன்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மலேசியாவில் ஏன் நடக்கிறது? இங்கே தமிழ்நாட்டில் விஜய் பேச தைரியம் இல்லையா? என்றெல்லாம் பலரும் கேட்டு வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் விழாவை நடத்தினால் மறுபடியும் கட்டுக்கடங்காத கூட்டம், தள்ளுமுள்ளு, சர்ச்சை என சேர்ந்துவிடும், எனவே தேர்தல்வரை அப்படியொரு சம்பவம் நடக்க வேண்டாம் என்று விஜய் நினைக்கிறாராம். அதனால்தான் மலேசியாவில் விழா நடத்தப்படுகிறது.
ஆடியோ லான்ச் டிக்கெட்
மலேசியாவில் டிசம்பர் 27ம் தேதி ஆடியோ வெளியீட்டு விழாவை வைத்ததற்கான இன்னொரு காரணம், இங்கு நடத்தினால் தயாரிப்பாளருக்கு 10 கோடி ரூபாய் செலவாகும்.. ஆனால், அங்கே செலவு குறைவு.. எனவே மலேசியாவில் இந்த படத்தை வாங்கியிருப்பவரே, நிகழ்ச்சிக்கான செலவையும் பார்த்து கொள்வதாக கூறிவிட்டார்.
எனவே, மலேசியாவில் நிகழ்ச்சியை அறிவித்த 18 மணி நேரத்தில் மொத்த டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாம்.. சென்னையில் உள்ள ஒரு டூரிசம் கம்பெனி, மலேசியா சுற்றுலாவுடன் ஆடியோ லான்ச் பார்க்கும் பேக்கேஜை அறிவித்துள்ளது..
விஜய்யின் கடைசி படம் என்பதால், ஒரு பெரிய இசை நிகழ்ச்சி நடத்த போகிறார்களாம்.. ஆண்ட்ரியா, சைந்தவி, திப்பு போன்ற பாடகர்கள் கலந்துகொண்டு, 'நாளைய தீர்ப்பு' முதல் 'ஜனநாயகன்' வரை உள்ள முக்கியமான பாடல்களைப் பாடப்போவதாக தெரிகிறது. .
விஜய்க்கு மேடையில் கவுரவம்
அதேபோல விஜய்யை வைத்துப் படம் இயக்கிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், அதே மேடையில் விஜய்யை கௌரவப்படுத்த முடிவெடுத்துள்ளார்களாம்..
விக்ரவாண்டி மாநாட்டிலேயே விஜய்க்கு கவுரவம் செய்ய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் நினைத்தார்களாம். ஆனால், அதனை விஜய் தடுத்துவிட்டாராம். கட்சி மாநாட்டில், சினிமாவை புகுத்த வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். எனவே, மலேசியாவில் ஜனநாயகன் மேடையில் விஜய்க்கு அனைவரும் மரியாதை செய்ய போகிறார்களாம்.
அதேபோல விஜய் என்ன பேசுவார்? என்ன குட்டி ஸ்டோரி சொல்லுவார்? என்ற எதிர்பார்ப்பும் இப்போதே எழுந்துள்ளது..
விஜய் போட்ட கண்டிஷன்
இந்த மலேசியா பயணத்துக்கு விஜய் ஒரே ஒரு கண்டிஷனை போட்டுள்ளாராம்.. அதாவது, மலேசியாவுக்கு சார்ட்டர்ட் பிளைட்டில் வந்து, நிகழ்ச்சியில் பேசிவிட்டு, கலந்துகொண்டு உடனடியாக திரும்பிவிடுவேன் என்றும், அங்குள்ள அரசியல் தலைவர்கள் (பிரதமர், கவர்னர், கவுன்சிலர்) யாரையும் சந்திப்பது, போட்டோ எடுப்பது என எதுவுமே தனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம்.
தற்போது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் சமூக ஊடகங்களில், 'கடைசி படம்' என்று இப்போதே பதிவிட துவங்கிவிட்டார்கள். ஆனால்,ஆந்திராவில் பவன் கல்யாண் துணை முதல்வராகி இன்னும் படங்களில் நடித்து வருவதால், விஜய்யும் தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ரசிகர்கள் அன்புடனும், ஆர்வத்துடனும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications