ரஜினியின் முள்ளும் மலரும் போல ஃபீல் குட் மூவி.. நெல்லைன்னாலே அரிவாளா? திருமாவளவன் சாடுவது இதைத்தான்
நெல்லை பாய்ஸ் பட விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பேசும்போது, "பட தலைப்பின் எழுத்தின் வடிவமைப்பிலேயே அரிவாள் இருக்கிறது.. நெல்லை என்றாலே அரிவாள் என்று சித்தரிக்கவேண்டும் என்று இல்லை. சினிமாவில் வன்முறைகள் இல்லாமல் படம் எடுக்கவே முடியாதா? தாதாயிசம் அல்லது ரவுடியிசம் இருந்தால்தான் அவன் ஹீரோ என்று கட்டாயமாக வலிந்து அதைக் காட்டித்தான் ஆகவேண்டுமா?
நெல்லைன்னாலே அரிவாள்?
நெல்லையில் எவ்வளவோ பேர் கல்விமான்கள், தொழிலதிபர்கள், ஆய்வாளர்கள், நீதிபதிகள் தோன்றி இருக்கிறார்கள். ஆனாலும், நெல்லை என்றாலே அரிவாள் கலாசாரம் என்பதை போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிற போக்கு தொடர்ந்து இருக்கிறதே என்ற கவலை எனக்கு உண்டு. இந்தப் படத்தை வைத்து பேசவில்லை, பொதுவாகப் பேசுகிறேன்.

சாதி அமைப்பை நியாயப்படுத்துவது , சாதிப் பெருமையை உயர்த்திப் பிடிப்பது மதவாத அரசியலை நியாயப்படுத்துவது இவை எல்லாம் சமூகத்தின் நலன்களுக்கு உகந்தவையா என்ற சிந்தனை தேவை...
திருமாவளவன் வேண்டுகோள்
பெரியார், அம்பேர்கார் போன்றோர் சமூகத்தில் எத்தகைய மாற்றத்தை உருவாக்க விரும்பினார்களோ அந்த மாற்றத்தை உருவாக்குவதற்கு நாம் பெரிதாக சினிமாவில் பிரச்சாரம் செய்ய முடியாது. ஆனால் அதற்கு எதிரான காட்சிகளை அமைத்து ஓர் எதிரான போக்கைச் சமூகத்தில் வளர்த்து விடாமல் இருந்தாலே போதும். இது என்னுடைய பணிவான வேண்டுகோள்:" என்றெல்லாம் பேசியிருந்தார்.
ஃபீல் குட் மூவி
இந்நிலையில், BBT Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் ராஜ கம்பீரன், ஃபீல் குட் மூவி எதுவுமே வன்முறை படங்கள் கிடையாது.. ரஜினியின் முள்ளும் மலரும், கமலின் மூன்றாம் பிறை, விஜயின் காதலுக்கு மரியாதை, அஜித்தின் காதல் கோட்டை, விஜய் சேதுபதிக்கு தென்மேற்கு பருவக்காற்று போன்ற படங்களில் வன்முறை இருக்காது.
எனவே, இனி வரப்போகும் அடுத்த தலைமுறை, அன்பு சார்ந்த, நல்லிணக்கம் சார்ந்த தலைமுறையாக வரவேண்டும் என்று திருமாவளவன் நினைக்கிறார்.. அடுத்து வன்முறையை ஹீரோயிஸமாக காட்டக்கூடாது என்கிறார்..
வன்முறை ஒரு கருவியா
கெட்டிப்பட்டு போயிருக்கக்கூடிய சாதிய முறைகள், மேலாதிக்கம், ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம், உள்ளிட்ட எல்லாவிதமான ஆதிக்கங்களிலிருந்தும் விடுதலை ஆக வேண்டும் என்பதுதான் அரசியல்.. அதற்கு வன்முறையை ஒரு கருவியாக எடுத்துதான் புரட்சிகள் வெடித்துள்ளன. இந்த உலகில் வன்முறை இல்லாமல் புரட்சிகளும் வெடித்ததில்லை.
அறிவுப் புரட்சி
ஆனால் ஜனநாயகம் என்பது, கருத்து மாற்றத்தின் வழியாகவே ஒன்றை புரிந்து கொள்வதன் மூலமாகவே, நாம் அறிவுப் புரட்சியை நிகழ்த்த முடியும்..
ஆயுதத்தின் மட்டுமல்ல, அறிவினால்கூட புரட்சியை ஏற்படுத்த முடியும் என்று திருமாவளவன் நம்புகிறார்..
எனவே வன்முறை படங்களை எடுக்க வேண்டாம் என்கிறார் திருமாவளவன்... தலித்தாக பிறக்காத ஒருவர், தலித்துக்கு என்னென்ன கொடுமைகள் நடக்கின்றன என்பதை பரியேறும் பெருமாள் போன்ற படங்களின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.. எனவே, உலக நாடுகளே மனித பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வரும்போது, கருத்தியல் வழியாக,. உணர்வுகள் வழியாக, உரையாடல் வழியாக புரட்சியை ஏற்படுத்த முடியும் என்று திருமாவளவன் நம்புகிறார்..
பரியேறும் பெருமாள் , அசுரன்
படம் போரடிக்கக்கூடாது என்பதற்காக போர்களை காட்ட வேண்டுமா? ரத்தம் சொட்ட சொட்ட வன்முறையை ஏன் காட்ட வேண்டும்? மனித உணர்வுகளில் வன்முறை மட்டும்தான் எமோஷனலா?
தலித் அல்லாத வெற்றி மாறன், அசுரன் என்ற தலித் படத்தை எடுப்பதற்கு முன்பு, எந்த சர்ச்சையும் வந்துவிடக்கூடாது என்பதற்காக திருமாவளவனை நேரில் சந்தித்து பேசினார்.. அப்போது கதை பற்றின விவரங்களை திருமாவளவனிடம் வெற்றிமாறன் சொல்லி முடித்தார்..
அதைக்கேட்ட திருமாவளவன், கதை நன்றாக உள்ளது, ஆனால், வன்முறை அதிகம் வராமல் பார்த்து கொள்ளுங்கள் என்றார்.
அன்பை போதிக்கும் படங்கள் தேவை
ஆனால் படம் சில வன்முறைகளுடன் எடுக்கப்பட்டது. இந்த படத்தை திருமாவளவனுக்கு போட்டும் காண்பித்தார் வெற்றிமாறன். காரணம், இங்கே சினிமாவை பொறுத்தவரை, வன்முறை என்பது வியாபாரம்.. சாக்லேட் ஹீரோக்களும் ஆக்ஷன் ஹீரோவாக மாற காரணம், வசூல் அதிகம், வியாபாரமும் அதிகம்.. ஆக்ஷன் படங்களுக்கு ஆடியன்ஸும் இங்கு அதிகம்.
எனினும் ரத்தத்தை காட்டுகிற சினிமா எப்படி நல்ல படமாக இருக்க முடியும்? வன்முறை டோஸை குறைத்து, அன்பை போதிக்கும் அளவை அதிகரிக்க வேண்டும் என்பதைதான் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்" என்றெல்லாம் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications