உடைந்த ஜோதிகா.. ஸ்ரீதேவி முதல் நிதி அகர்வால் வரை ரசிகர்களால் மோசமான அனுபவம்.. நொந்து போன நடிகைகள்
சென்னை: நடிகை நிதி அகர்வால், ஹைதராபாத் மாலில் நடைபெற்ற 'ராஜா சாப்' பட பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றுவிட்டு வெளியே வந்தார்.. அப்போது நிதி அகர்வால் ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கினார்.. சில ரசிகர்கள் அவரிடம் அத்துமீறியும் நடந்து கொண்டனர். இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. இதுகுறித்து அரசியல் விமர்சகரும், மூத்த பத்திரிகையாளருமான வெங்கடேசன் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள திண்டுக்கல் வெங்கடேசன், "தமிழில் நிதி அகர்வால் நடித்த ஈஸ்வரன், பூமி, கழகத் தலைவன் போன்ற படங்கள் பெரிய வெற்றியை தரவில்லை என்றாலும், தெலுங்கு திரையுலகில் அவர் முன்னணி நடிகையாக உள்ளார்.. பிரபாஸுடன் அவர் நடித்துள்ள 'ராஜா சாப்' படம் அவருக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

நடிகைகளுக்கு பாதுகாப்பு தேவை
எப்போதுமே ஒரு நடிகை பொது இடத்திற்கு வரும்போது படக்குழுவினர் முறையான பாதுகாப்பு வழங்க வேண்டும்.. இத்தகைய அத்துமீறல்கள் தடுக்கப்பட வேண்டும்..
குஷ்புவைப் போலவே, வட இந்தியப் பின்னணியை கொண்டிருந்தாலும் தமிழ் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்ட நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர்..
ஒருமுறை ஏர்போர்ட்டில் இருந்தபோது, ரசிகர்கள் அவரிடம் மிக மோசமான முறையில் அத்துமீறி நடந்துகொண்டனர்.. அந்த நேரத்தில் ஜோதிகா, அந்த பிரச்சினையை பெரிதுபடுத்த விரும்பவில்லை. "ஏன் இவ்வளவு கூட்டம்?" என்று நினைத்து, அந்த இடத்தை விட்டு உடனடியாக கிளம்பி சென்றுவிட்டார்.
ஜோதிகா ஏர்போர்ட் சம்பவம்
நிதி அகர்வால் சந்தித்த சம்பவத்தைப் போல, அன்று ஜோதிகா அந்த இடத்திலேயே உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், அது மிகவும் சீரியஸான விஷயமாக மாறியிருக்கும்.. சிசிடிவி காட்சிகளை வைத்து, அத்துமீறிய நபர் யார் என்பதையும் கண்டுபிடித்திருக்க முடியும்..
மறைந்த நடிகை ஸ்ரீதேவியும், தமிழ் படங்களில் அன்று நடித்துக் கொண்டிருந்த காலத்தில், ரசிகர்கள் மத்தியில் பல கசப்பான அனுபவங்கள், அத்துமீறல்கள் ஏற்பட்டுள்ளன..
வானத்தில் இருந்து குதித்தாரா
'இமைக்கா நொடிகள்' பிலிம்சிட்டி, மால் உள்ளிட்ட பல இடங்களில் ஷூட்டிங் எடுக்கப்பட்டது.. அப்போது ஷூட்டிங்கின்போது நயன்தாரா ரசிகர்களை தவிர்ப்பதையும், தமக்கென தனியாக பவுன்சர்களை வைத்து கொண்டார்.. ரசிகர்களிடம் பேசும்போது கூட 5 அடி தூரம் தள்ளி நின்றே பேசுவார். இது ஆரம்பத்தில் பலருக்கு அவர் மீது ஒருவித வெறுப்பை ஏற்படுத்தியது. "இவர் என்ன வானத்தில் இருந்து குதித்து வந்தவரா?" என்று கூட சிலர் கேட்டார்கள்..
ஆனால், அவருக்கு ஏற்பட்ட முந்தைய கசப்பான அனுபவங்களின் காரணமாகவே நயன்தாரா இத்தகைய பாதுகாப்பு மற்றும் இடைவெளியை பின்பற்ற தொடங்கினார்..
பிளேடால் கீறிய ரசிகர்
நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் ஆகியோருக்கும் ரசிகர்கள் மத்தியில் இத்தகைய கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன.. அஜித் ரசிகர் ஒருவருக்கு ஷேக் ஹேண்ட் தரும்போது, கையை ரசிகர் ஒருவர் பிளேடால் கீறிவிட்டார்.. கை நரம்பு அறுபட்டால் என்னாவது? ஷூவில் மிதித்த சம்பவமும் உண்டு.
சிவகாசி பட ஷூட்டிங்கின்போது, விஜய்க்கும் இப்படி நடந்தது. அதனால்தான், வலது, இடது புறத்தில் 5 அடி தூரம் இடைவெளியை பொது இடங்களில் கடைப்பிடித்தார்..
மலேசியாவில் சிம்புவுக்கும் இப்படி நடந்தது.. ஓட்டலில் கட்டுக்கடங்காத கூட்டத்தில், ஓட்டலின் பேஸ்மெண்ட் வழியாக வெளியேற்றி, மற்றொரு ஓட்டலில் நிகழ்வு கடந்த வாரம் நடந்தது..
அழகான காதல் அது
நடிகர்களுக்கே இந்த நிலைமை என்றால், நடிகைகள் நிலைமை பரிதாபம்.. தற்போது நிதி அகர்வால் இந்த விவகாரத்தில் சிக்கி உள்ளார்.. பாதுகாப்பு நடிகைகளுக்கு படக்குழுவினர்தான் பலப்படுத்த வேண்டும்..
'ஈஸ்வரன்' படத்தில் நடித்தபோது சிம்பு மற்றும் நிதி அகர்வால் இடையே காதல் இருந்தது.. அது உண்மையான காதல் தான்.. ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த காதல் முறிந்துவிட்டது.. இதனால் சிம்பு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.. அதற்கு பிறகு ஆன்மீக பாதையில் சிம்பு சென்றுவிட்டார்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications