ரஜினிகாந்த் ஊஞ்சலை இழுத்து போட்டு உட்கார்ந்து.. படையப்பா சீனின் சீக்ரெட் உண்மை! செம்ம சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினியின் படையப்பா படம் ரிலீசாகி 25-ம் வருடத்தில் மீண்டும் இப்போது 50வது வருடத்தில் டிஜிட்டரில் ரீ-ரிலீஸ் ஆகிறது.. சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளான இன்றைய தினம் இந்த படம் ரிலீஸாகி உள்ளது, அவரது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.. இந்நிலையில், படையப்பா படத்தில் பல காட்சிகள் சிறப்பாக இருந்தாலும், அதில் ஹைலைட்டாக பேசப்பட்டது ஊஞ்சல் காட்சிதான். இதுகுறித்து பல பேட்டிகளில் கேஎஸ் ரவிக்குமார் கூறியிருக்கிறார். அதனை பற்றி இங்கே பார்ப்போம்.

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் ரஜினிகாந்த்துக்கு பிடித்தமான ஒன்று.. அதிலும் அதிலுள்ள நந்தினி கேரக்டர் மீது தனி பிரியம் இருந்துள்ளது..

Padayappa Swing Neelambari

என்றாவது ஒருநாள் நந்தினி மாதிரி ஒரு கேரக்டரை மையமாக வைத்து ஒரு படம் செய்ய வேண்டும் என நினைத்து கொண்டிருந்தாராம் ரஜினி.. தன்னுடைய இந்த விருப்பத்தை கே எஸ் ரவிக்குமாரிடம் சொல்லவும், அப்படி உருவானதுதான் படையப்பா படமும், அதிலுள்ள நீலாம்பரி கேரக்டரும்..

கேஎஸ் ரவிக்குமார் சக்ஸஸ்

பல சாதனைகளை உள்ளடக்கிய படம்தான் இந்த படையப்பா.. மொத்தம் 21 ரீல்களில் படம் ரெடியாகியிருக்கிறது.. ஒரு ரீல் என்பது 1000 அடியாகும்.. அதனால் 2ம் பாகம் வெளியிடும் அளவுக்கு படம் எடுக்கப்பட்டுள்ளது.. பிறகுதான் அது 14 ரீலாக குறைக்கப்பட்டுள்ளது..

மொத்தம் 210 பிரிண்ட்கள் இப்படத்துக்கு போடப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட 86 தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேல் இந்த படம் ஓடி வெற்றி கண்டது.. தெலுங்கிலும் நரசிம்மா என்று டப் செய்து, 49 தியேட்டர்களில் 50 நாட்களுக்கு மேல் ஓடியது.

ரிலீஸ் ஆன 2000ம் வருடத்திலேயே 45 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது இந்த படையப்பா. கோடியில் வசூல் சாதனையில் படைத்த பெருமையையும் படையப்பா பெற்றது.. தமிழக அரசின் 5 விருதுகளையும் இந்த படம் பெற்றதை இங்கு குறிப்பிட்டாக வேண்டி உள்ளது..

வியந்த நீலாம்பரி

பல சீன்கள் இந்த படத்தில் பேசப்பட்டாலும், ஊஞ்சல் காட்சி யாராலும் மறக்க முடியாதது.. ஆரம்பத்தில் இப்படியொரு ஊஞ்சல் காட்சியே படத்தில் இல்லையாம்.. ஆனால் அந்த சீன் வேறு மாதிரியாக முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த ஊஞ்சல் சீனுக்கு இன்ஷ்பிரேஷன், ராமாயணத்தில் அனுமன், தன்னுடைய வாலையே இருக்கையாக பயன்படுத்தி உயரமாக உட்காருவார்.. அதுபோல அங்கு உயரமான நாற்காலியை ரஜினி சால்வையால் இழுத்து ரம்யா கிருஷ்ணனை விட உயரமாக உட்கார வேண்டும் என்பதுபோல சீன் அமைக்கப்பட்டிருந்ததாம்.

ஊஞ்சலில் படையப்பா

அதாவது படையப்பா நீலாம்பரி வீட்டுக்கு வரப்போகிறார் என்று தெரிந்ததுமே, அந்த பெரிய வீட்டிலுள்ள உள்ள அனைத்து நாற்காலிகளையும் மறைத்து வைத்துவிடுவார்கள்.. உடனே வீட்டில் நுழையும் ரஜினி, சாய்வு நாற்காலியை, ஒரு கயிற்றால் கட்டி இழுத்து போட்டு உட்காருவதுபோல சீன் எழுதியிருந்தார்களாம்.

இதற்காக லொகேஷன் பார்க்க அந்த வீட்டிற்குள் சென்றபோதுதான், அங்கு ஏற்கனவே கட்டி வைத்திருந்த ஊஞ்சலை என்ன செய்வதென்று தெரியவில்லையாம்.. பிறகு ஆர்ட் டைரக்டரை அழைத்த கேஎஸ் ரவிக்குமார், ஊஞ்சலை மேலே கட்டி வைத்து, துண்டால் இழுத்தால் கீழே வரும்படி செய்ய முடியுமா? என்று கேட்டாராம்.

அதன்படியே ஆர்ட் டைரக்டர் ஊஞ்சலை மேலே கட்டி வைத்துள்ளார்.. அப்போது அங்கு வந்த ரஜினி, ஏன் ஊஞ்சல் மேலே கட்டப்பட்டிருக்கு? என்று கேட்டாராம்..

துண்டால் இழுத்து போட்டு

உடனே ரவிக்குமார், 20 வருடங்களுக்கு பிறகு உங்களை பார்க்கும் நீலாம்பரி முகத்தில் திமிர் இருக்கும்.. அப்போது இந்த ஊஞ்சலை, உங்கள் துண்டால் இழுத்து போட்டு உட்கார்ந்தால் கெத்தாக இருக்கும் என்றாராம்..

இதைக்கேட்டு ஆச்சரியப்பட்ட ரஜினி, அப்படின்னா செட் போட்டு எடுத்துடலாமா என்று கேட்டதற்கு, வேண்டாம், நேச்சுரலாக இப்படியே இருக்கட்டும் என்று ரவிக்குமார் சொல்லி உள்ளார்.. அதன்படியே வீட்டில் நுழைந்து, தன்னுடைய துண்டால் ஊஞ்சலை இழுத்து போட்டு ரஜினி உட்கார்ந்ததுமே, படப்பிடிப்பில் இருந்தவர்கள் அத்தனை பேரும் கிளாப்ஸ் அடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்களாம்..

ஸ்பாட்டில் தோன்றிய டயலாக்

"மின்சார கண்ணா, எல்லாருக்கும் உன்னை ஏன் பிடிக்குது தெரியுமா? வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்னை விட்டுப் போகலை" என்று நீலாம்பரி பேச, "தேங்க்யூ தேங்க்யூ, கூடவே பொறந்தது என்னைக்கும் போகாது" என்று படையப்பா பதிலளிக்கும் வசனங்கள் ஸ்பாட்டிலேயே ரெடியானதாம்.

இப்படி ஒரு சீனிலேயே இத்தனை ஆச்சரியங்களையும் இந்த படையப்பா படம் குவித்து வைத்துள்ளது, உண்மையிலேயே ஆச்சரியம்தான்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+