24 வருஷத்துக்கு பிறகு ரீ ரீலீஸ் ஆகும் மௌனம் பேசியதே.. சூர்யா வெளியிட்ட வீடியோ! குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: நடிகர் சூர்யாவின் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியாகி இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் 'மௌனம் பேசியதே'. காலம் கடந்தாலும் இந்த படம் ரசிகர்களின் நினைவுகளில் இடம் பிடித்த ஒன்றாகவே இருந்து வருகிறது. தற்போது இந்த படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு, வரும் பிப்ரவரி 13ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக பழைய வெற்றி படங்களை மீண்டும் திரையிடும் போக்கு தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது. ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'நாயகன்', 'வேட்டையாடு விளையாடு', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜய்யின் 'கில்லி', 'சச்சின்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', 'அஞ்சான்', தனுஷின் 'யாரடி நீ மோகினி', சேரனின் 'ஆட்டோகிராப்' உள்ளிட்ட பல படங்கள் ரீ-ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. அந்த வரிசையில் தற்போது 'மௌனம் பேசியதே' மீண்டும் திரைக்கு வருகிறது.

வீடியோ மூலம் ரசிகர்களுக்கு சூர்யாவின் சர்ப்ரைஸ்
'மௌனம் பேசியதே' படம் மீண்டும் வெளியாக இருப்பதை முன்னிட்டு, நடிகர் சூர்யா தனது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், இந்த படத்தின் மிகவும் பிரபலமான வசனத்தை அவர் மீண்டும் பேசி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
"நல்லாதானடா இருந்தீங்க... திடீர்னு உங்களுக்கு எங்கிருந்துடா அந்த காதல் வருது? காதல் கண்ணிலிருந்து வரக்கூடாது... இதயத்திலிருந்து வரணும்" என்ற அந்த டயலாக், படம் வெளியான காலத்திலிருந்து இன்று வரை காதலர்களிடையே பிரபலமாக பேசப்பட்டு வரும் ஒன்று. குறிப்பாக காதலர் தின காலகட்டங்களில், சிங்கிளாக இருப்பவர்கள் கூட இந்த டயலாக்கை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைக்கும் அளவுக்கு, அந்த வசனம் கலாச்சாரமாகவே மாறியது.
இதே வசனத்தை தற்போது சூர்யா மீண்டும் ரீ-கிரியேட் செய்து பேசியது ரசிகர்களுக்கு பெரிய நாஸ்டால்ஜியா அனுபவத்தை கொடுத்துள்ளது. பலரும் "24 ஆண்டுகள் கழித்தும் அந்த டயலாக்கின் தாக்கம் குறையவில்லை" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அமீரின் முதல் படம்
'மௌனம் பேசியதே' திரைப்படம் இயக்குனர் அமீரின் முதல் இயக்கப் படமாக அமைந்தது. அந்த காலகட்டத்தில் காதல் படங்கள் ஒரு விதமான வழக்கமான ஃபார்முலாவுடன் வந்த நிலையில், இயல்பான உணர்வுகள், நுணுக்கமான காதல் காட்சிகள் மூலம் இந்த படம் தனித்துவமாக பேசப்பட்டது.
இந்த படத்தில் சூர்யாவுடன் திரிஷா, லைலா, நந்தா, நேஹா பெண்ட்ஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். குறிப்பாக, சூர்யாவின் இளம் வயது காதல் கேரக்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
யுவன் சங்கர் ராஜாவின் இசை ஹிட்
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பாடல்கள் வெளியான காலத்தில் மட்டுமல்லாமல், இன்றும் கூட இசை ரசிகர்களிடையே அதிகம் கேட்கப்படும் பாடல்களாக இருந்து வருகின்றன. மெலடியான காதல் பாடல்கள், பின்னணி இசை ஆகியவை படத்தின் உணர்வுகளை இன்னும் வலுப்படுத்தியது.
மீண்டும் ரீ-ரிலீஸ்
வீடியோவில் பேசிய சூர்யா, 'மௌனம் பேசியதே' தன்னுடைய ஆரம்ப கால முக்கிய படங்களில் ஒன்று என்றும், இந்த படத்தை இயக்குனர் அமீரின் முதல் படமாக ரசிகர்கள் மீண்டும் திரையில் பார்க்கப் போவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ரீ-ரிலீஸுக்கு ரசிகர்களின் ஆதரவு வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
புதிய தலைமுறைக்கு மௌனம் பேசியதே
2000களின் தொடக்கத்தில் இந்த படத்தை திரையில் பார்த்தவர்கள் இன்று அந்த நினைவுகளை மீண்டும் அனுபவிக்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அதே நேரத்தில், அந்த காலத்தில் பிறந்த புதிய தலைமுறை ரசிகர்களுக்கு, 'மௌனம் பேசியதே' ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைக்கு வரும் 'மௌனம் பேசியதே' வெறும் ஒரு பழைய படம் ரீ-ரிலீஸ் ஆகுவது மட்டுமல்ல; 2000களின் காதல் சினிமாவின் ஒரு நினைவுச்சின்னம் மீண்டும் ரசிகர்களை சந்திக்க வரும் தருணமாகவும் பார்க்கப்படுகிறது. சூர்யாவின் வீடியோ, அந்த கால நினைவுகளை மீண்டும் உயிர்ப்பித்து, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications