துரந்தர் 2 படத்தை பார்த்து விராட் கோலி போட்ட பதிவு.. ஓபனா சொல்லிட்டாரே! இயக்குனர் உருக்கம்
சென்னை: பாலிவுட்டில் சமீப காலத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்த படங்களில் ஒன்று 'துரந்தர் 2'. வெளியான நாளிலிருந்தே இந்த படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. அதிலும், முதல் பாகம் ஏற்கனவே பெரிய வெற்றியை பெற்றிருந்ததால், இரண்டாம் பாகத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அந்த எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்திருக்கிறது இந்த படம். இந்த படத்தைப் பற்றி விராட் கோலி வெளியிட்ட பதிவு சோசியல் மீடியாவில் அதிகமாக கவனம் பெற்று வருகிறது.

துரந்தர் 2 ஸ்பெஷல்
துரந்தர் 2 படத்தில் ரன்வீர் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரமான ஹம்சா அல்லது ஜஸ்கிரத் சிங் ரங்கி பற்றிய பின்னணி, அவர் எப்படிப் பயங்கரவாத வலையமைப்புக்குள் நுழைகிறார், அதை எப்படி உடைக்க முயற்சிக்கிறார் என்பதையே படம் முழுவதும் காட்டுகிறது. முதல் பாகத்தில் ஆரம்பித்த கதை, இரண்டாம் பாகத்தில் இன்னும் தீவிரமாகவும், பெரிய அளவிலும் விரிவடைகிறது. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகள், பின்னணி இசை, திரைக்கதை முறை என எல்லாம் சேர்ந்து இந்த படத்தை ஒரு ஹாலிவுட் லெவல் அனுபவமாக ரசிகர்கள் பேசும் அளவுக்கு கொண்டு சென்றிருக்கிறது.
நடிகர்கள் பங்களிப்பு
இந்த படத்தில் ரன்வீர் சிங்குடன் அர்ஜுன் ராம்பால், ஆர். மாதவன், சஞ்சய் தத் போன்ற முக்கிய நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனி முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டிருப்பதால், படம் முழுவதும் ஈர்ப்பை இழக்காமல் செல்கிறது. குறிப்பாக கதை இந்தியா - பாகிஸ்தான் பின்னணியில் நகர்வதும், உளவுத்துறை சம்பந்தமான விஷயங்களும் இருப்பதால், திரில்லர் ரசிகர்களுக்கு இது ஒரு பெரிய ட்ரீட் ஆக மாறியுள்ளது.
துரந்தர் 2 வசூல்
வசூல் தரப்பிலும் இந்த படம் சாதனை படைத்திருக்கிறது. உலகளவில் 1600 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் இந்தியாவில் மட்டும் 1000 கோடி நெட் வசூல் செய்த முதல் இந்தி படமாகவும் இது உருவெடுத்துள்ளது. ஆரம்ப நாளிலேயே 100 கோடியை தாண்டி ஓப்பனிங் பெற்றதும் பெரிய பேசுபொருளாக இருந்தது.
விராட் கோலி பதிவு
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியும் இந்த படத்தை பார்த்து தனது கருத்தை பகிர்ந்துள்ளார். பொதுவாக படங்கள் குறித்து அதிகமாக பேசாத அவர், இந்த முறை மிகவும் எக்சைட்டாக ரிவ்யூ கொடுத்திருக்கிறார்.
"இந்த மாதிரி ஒரு சினிமா அனுபவத்தை நான் இதுவரை பார்த்ததே இல்லை. கிட்டத்தட்ட 4 மணி நேரம் படம் ஓடியும் ஒரு நிமிஷம் கூட சலிப்பே வரவில்லை. எல்லா உணர்ச்சிகளையும் கவர்ந்த படம் இது" என்று அவர் கூறியுள்ளார். மேலும், இயக்குநர் ஆதித்யா தாரின் முயற்சியையும், அவரது பார்வையையும் அவர் பாராட்டியுள்ளார்.
அதோடு, ரன்வீர் சிங்கின் நடிப்பை பற்றி பேசும்போது, "இந்த படத்திற்குப் பிறகு நீங்கள் வேற லெவலுக்கு போயிட்டீங்க. உங்க நடிப்பு ரொம்ப அசத்தல்" என்று நேரடியாக புகழ்ந்துள்ளார். இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி, படக்குழுவும் மிகவும் உற்சாகமாகியுள்ளது.
இயக்குனர் எமோஷனல்
விராட் கோலியின் இந்த பாராட்டுக்கு இயக்குநர் ஆதித்யா தாரும் உணர்ச்சி வசப்பட்டு பதில் அளித்துள்ளார். "உங்களைப் போன்ற ஒரு லெஜண்ட் இப்படிச் சொல்வது எனக்கு மிகவும் பெருமை. உங்களை நான் அண்டர்-19 காலத்திலிருந்து பார்த்து வருகிறேன்" என்று கூறியுள்ளார். மேலும், "நீங்கள் நாட்டிற்காக செய்யும் விஷயங்கள் எங்களுக்கு எப்போதும் ஒரு இன்ஸ்பிரேஷன். நாமும் நம்ம படங்களால் இந்தியாவுக்கு பெருமை சேர்க்க முயற்சி செய்வோம்" என்றும் தெரிவித்துள்ளார்.
மொத்தத்தில், 'துரந்தர் 2' ஒரு சாதாரண படம் இல்ல, வசூல், விமர்சனம், பிரபலங்களின் பாராட்டு என சேர்ந்து ஒரு ப்ளாக்பஸ்டர் அனுபவமாக மாறியுள்ளது. இப்போதிருக்கும் நிலையைப் பார்த்தால், இன்னும் சில நாட்களில் புதிய சாதனைகளையும் இந்த படம் படைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.












Click it and Unblock the Notifications