நபிகள் நாயகம் பற்றிய சர்ச்சை படம்! ஆஸ்திரேலியால் முஸ்லிம்கள் போராட்டத்தில் கலவரம்? வீடியோ உண்மையா?
சிட்னி: இந்தியாவில் நேற்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்த சர்ச்சைக்குரிய திரைப்படத்தால் ஆஸ்திரேலியாவில் முஸ்லிம் மக்கள் பெரியளவில் திரண்டு போராட்டம் நடத்துவதாக வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. இதனை இந்திய ஊடகங்கள் மறைத்திருப்பதாகவும் சிலர் விமர்சனம் செய்யும் நிலையில் இது உண்மையா? பின்னணி என்ன? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் நேற்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. நேற்று காலையில் முஸ்லிம் மக்கள் குளித்து புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை நடத்தினர். மேலும் தியாகத்தின் அடையாளமாக கொண்டாடப்பட்டு வரும் இந்த பக்ரீத் தொழுகை முடிந்தவுடன் ஒருவரையொருவர் கட்டி அனைத்து தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
அதன்பிறகு ஆடு,மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டது. அதன் இறைச்சிகள் உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும் வழங்கி ஈகை குணத்தை வெளிப்படுத்தும் வகையில் முஸ்லிம் மக்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர்.

இந்நிலையில் தான் தற்போது இணையதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் திரைப்படம் ஒன்று வெளியானதாகவும், இதனை கண்டித்து ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் முஸ்லிம்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியதாகவும் வீடியோவில் கூறப்படுகிறது.
மேலும் இந்த வீடியோவை வலைதளங்களில் பரவும் நிலையில் இதுபற்றி இந்திய செய்தி சேனல்கள், பத்திரிகைகள் மற்றும் சர்வதேச செய்தி நிறுவனங்களும் செய்தி வெளியிடாமல் புறக்கணித்துள்ளதாக விமர்சித்து வருகின்றனர். இதையடுத்து இணையதளங்களில் பரவும் வீடியோ ஆய்வு செய்யப்பட்டது. அப்போது தான் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது நபிகள் நாயகம் குறித்த சர்ச்சைக்குரிய படம் தொடர்பாக ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தியது உண்மை என்பது தெரியவந்தது. ஆனால் அது இப்போது நடக்கவில்லை என்பதும், அது 2012ல் நடந்ததும் தெரியவந்தது. இது சம்பந்தமாக 2012 செப்டம்பர் மாதம் 16ம் தேதி சேனல் 10 என்ற யூடியூப் பக்கத்தில் இதுதொடர்பான வீடியோ இடம்பெற்றுள்ளது.
மேலும் இதுதொடர்பாக பல்வேறு செய்தி சேனல்கள் மற்றும் ஊடகங்களில் வெளியான செய்திகள் உள்ளன. அந்த செய்திகளில் இஸ்லாம் மதம் குறித்து சர்ச்சையை கிளப்பிய திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சிட்னியில் நடந்த போராட்டத்தில் டஜன் கணக்கான மக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ‛தி சிட்னி மார்னிங் ஹெரால்ட்' எனும் பத்திரிகை 2012ல் செப்டம்பர் மாதம் 17ம் தேதி இதுபற்றி செய்தி வெளியிட்டுள்ளது. அதில் சிட்னியின் சிபிடி பகுதியில் சுமார் 400 பேர் திரண்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு இஸ்லாமுக்கு எதிரான திரைப்படம் தான் காரணம். மேலும் போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி அடித்து, கேப்சிகம் ஸ்பிரே உள்ளிட்டவற்றை பயன்படுத்தியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த சம்பவத்தின்போது 6 போலீசார் காயமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சிட்னியில் நடந்த போராட்டத்தை சிலர் உண்மை தெரியாமல் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Fact Check
வெளியான செய்தி
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வெளியான திரைப்படத்தை எதிர்த்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் முஸ்லிம் மக்கள் பெரியளவில் போராட்டம் நடத்துகின்றனர்.
முடிவு
சர்ச்சைக்குரிய திரைப்படத்தை எதிர்த்து சிட்னியில் கடந்த 2012ல் நடந்த போராட்டத்தின் வீடியோவை இப்போது நடப்பதாக பரப்புகின்றனர்.
ரேட்டிங்
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications