நிலவில் முத்திரையாக இந்தியாவின் சின்னம்.. சந்திரயான்-3இன் தரமான சம்பவம் என பரவும் போட்டோ! உண்மை என்ன

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சந்திரயான் 3 சாட்டிலைட் முதல்முறையாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியுள்ள நிலையில், இந்தியாவின் சின்னமும் இஸ்ரோவின் லோகோவும் நிலவில் பதிக்கப்பட்டதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகிறது.

நிலவு குறித்து இந்தியாவின் ஆய்வுகளுக்கு வெற்றி மீது வெற்றி கிடைத்து வருகிறது. சந்திரயான் வரிசையில் இந்தியா கடந்த மாதம் சந்திரயான் 3 சாட்டிலைட்டை நிலவுக்கு அனுப்பியது. சுமார் 40 நாட்கள் பயணித்து அது நிலவுக்குச் சென்று சேர்ந்துள்ளது.

 Fack check: Fake pics of National Emblem, ISRO Logo On Moon is spreading online as Chandrayaan 3 Imprint

நேற்றைய தினம் அதாவது ஆகஸ்ட் 23ஆம் தேதி சந்திரயான் 3 ராக்கெட்டின் விக்ரம் லேண்டர் சந்திரனின் மேற்பரப்பில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. நிலவின் இருண்ட பகுதியான சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

சந்திரயான் 3: மேலும், அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் மற்றும் சீனாவுக்குப் பிறகு நிலவில் தரையிறங்கிய நான்காவது நாடு என்ற சிறப்பையும் இந்தியா பெற்றுள்ளது. எப்போதும் இருட்டாகவே இருக்கும் நிலவின் தென் துருவம் குறித்து எப்போதும் மர்மம் இருந்து கொண்டே இருக்கும். இதற்கு முன்பு சில சாட்டிலைட்கள் நிலவின் தென் துருவத்தில் இறங்க முயன்ற போதிலும் அது வெற்றிகரமாக இருந்தது இல்லை. இதற்கிடையே முதல்முறையாக இந்தியாவின் சந்திரயான் 3 சாட்டிலைட் நிலவின் தென் பகுதியில் தரையிறங்கியுள்ளது.

அடுத்த 14 நாட்களுக்கு நிலவின் தென் பகுதியில் அது பல்வேறு இடங்களுக்குச் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளது. இதற்கிடையே ட்விட்டரில் படம் ஒன்று டிரெண்டாகி வருகிறது. அதாவது "இன்று சந்திரனின் மேற்பரப்பில் இந்தியாவின் சின்னமும் இஸ்ரோவின் லோகோவும் நிரந்தரமாகப் பதிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் ரோவரின் டயர்களில் இந்தியாவின் சின்னம் இஸ்ரோவின் லோகோ முத்திரை இருக்கிறது. ரோவர் நகர நிலவின் இந்தியாவின் முத்திரை பதிக்கப்படும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பரவும் படம்: இதனை நெட்டிசனக்ள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இரு புறமும் ரோவரின் டயர்கள் இருக்க நடுவில் இந்தியாவின் சின்னமும் இஸ்ரோவின் லோகோவும் இருக்கும் இந்தப் படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இதற்கிடையே சிலர் இந்தத் தகவல் உண்மைதானா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதில் உண்மை என்ன.. இணையத்தில் பரவும் படம் உண்மைதானா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

இது குறித்து நாம் ஆய்வு செய்ததில் இணையத்தில் டிரெண்டாகும் இந்தப் படம் உண்மையானது இல்லை என்பது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. அதை போட்டோஷாப்பை பயன்படுத்தி யாரோ உருவாக்கியுள்ளதும் நமக்குத் தெரிகிறது. அந்த படத்தை நாம் கூர்ந்து கவனித்தால் அதில் Krishanshu Garg என்ற பெயர் இருப்பதும் உறுதியாகிறது.

 Fack check: Fake pics of National Emblem, ISRO Logo On Moon is spreading online as Chandrayaan 3 Imprint

உண்மை என்ன: இதை வைத்து அவரது ட்விட்டரை நாம் ஆய்வு செய்ததில் நேற்றிரவு அவர் தான் இந்தப் படத்தை முதலில் பகிர்ந்துள்ளதும் தெரிய வருகிறது. இந்தப் படம் உண்மையானது இல்லை. தான் உருவாக்கிய போலி படம் என்பதை அவரே கூறியுள்ளார். இருப்பினும், இதை வைத்து இணையத்தில் சிலர் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.

மேலும், சந்திரயான் 3 ரோவர் குறித்து இஸ்ரோ பகிர்ந்த செய்திகளை நாம் பார்க்கும் போது, ரோவரின் டயர்களில் இந்தியாவின் சின்னமும் இஸ்ரோவும் லோகோவும் இருப்பது உண்மைதான் என்பது தெளிவாகிறது. இருப்பினும், அது அதன் வீல்களில் தான் இருக்கிறது.

எனவே, ரோவர் நகரும் போது அதன் வீல்கள் செல்லும் பாதையில் தான் இரு சின்னமும் இருக்கும். ஆனால், இப்போது இணையத்தில் டிரெண்டாகும் படத்தில் இரண்டு வீல்களுக்கு நடுவே இந்தியா மற்றும் இஸ்ரோ சின்னம் இருப்பது போல இருக்கிறது. எனவே, இதன் மூலமும் இது போலி படம் என்பது உறுதியாகிறது.

Fact Check

வெளியான செய்தி

இந்தியா மற்றும் இஸ்ரோவின் சின்னத்தை நிலவில் பதித்த சந்திரயான் 3

முடிவு

இந்தியா மற்றும் இஸ்ரோவின் சின்னம் ரோவரில் இருக்கிறது என்ற போதிலும் இஸ்ரோ இதுவரை இப்படியொரு படத்தை வெளியிடவில்லை.

ரேட்டிங்

Mostly False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+