Fact Check: திருப்பதி கோயிலில் பிரபல நடிகையிடம் ஊழியர்கள் தகாத முறையில் நடந்தனரா? உண்மை என்ன?
திருப்பதி: திருப்பதி கோயிலில் விஐபி தரிசன டிக்கெட் இல்லை என கூறி ஊழியர்கள் தன்னை அவமானப்படுத்தியதாகவும் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் நடிகை அர்ச்சனா கவுதம் பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார். இதை திருமலை திருப்பதி தேவஸ்தானம் மறுத்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த நடிகை அர்ச்சனா கவுதம் கடந்த வியாழக்கிழமை திருப்பதி வந்திருந்தார். இவர் கடந்த முறை நடந்த உத்தரப்பிரதேச மாநில தேர்தலில் ஹஸ்தினாபூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். எனினும் அவர் தோல்வி அடைந்தார்.
திருப்பதி வந்த அர்ச்சனா செயல் அதிகாரி அலுவலகத்திற்கு சென்றார். அங்கு சிபாரிசு கடிதம் மூலம் டிக்கெட் பெற வந்தார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் அர்ச்சனாவை அநாகரீகமாக பேசியதாக தெரிகிறது. மேலும் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ 10 ஆயிரத்தை வழங்கிவிட்டு ரூ 500 செலுத்தி விஐபி டிக்கெட்டை பெற்றுக் கொள்ளுமாறு ஊழியர்கள் தெரிவித்தனராம்.

அர்ச்சனா
இதனால் அர்ச்சனா அங்கிருந்த ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தார். மேலும் தன்னிடம் ஊழியர்கள் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் வீடியோ எடுத்து வெளியிட்டிருந்தார். இதில் இந்து மத கோயில்கள் கொள்ளை அடிக்கும் கூடாரமாக மாறிவிட்டது.

மதத்தின் பெயரால்
மதத்தின் பெயரால் பெண்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் கவனத்திற்கு கொண்டு போய் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

திருமலை திருப்பதி
இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூறுகையில் நடிகை அர்ச்சனா கூறுவது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இதை பக்தர்கள் யாரும் நம்ப வேண்டாம். கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி மத்திய அமைச்சர் ஒருவரின் சிபாரிசு கடிதத்தை ஸ்ரீதிவாரி, நடிகை அர்ச்சனா கவுதம் உள்ளிட்ட 7 பேர் கொண்டு வந்தனர்.

ரூ 300 டிக்கெட்
திருமலையில் உள்ள கூடுதல் செயல் அதிகாரி அலுவலகத்தில் தரிசனத்திற்கு பதிவு செய்திருந்தனர். அவர்களுக்கு ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டு அது தொடர்பான விவரங்களை ஸ்ரீதிவாரி அளித்த செல்போன் எண்ணிற்கு அனுப்பினோம். ஆனால் அவர்கள் குறித்த நேரத்திற்கு தரிசனத்திற்கு செல்லவில்லை. அதற்கு பதிலாக அடுத்த நாளான ஆகஸ்ட் 31 ஆம் தேதி தரிசனத்திற்கு சென்றனர்.

டிக்கெட் கெடு
டிக்கெட்டின் காலம் முடிந்து விட்டதால் தரிசனத்திற்கு அவர்கள் மறுக்கப்பட்டனர். இதையடுத்து மீண்டும் கூடுதல் செயல் அதிகாரி அலுவலகத்திற்கு ஸ்ரீதிவாரி வந்து ரூ 300 டிக்கெட் கேட்டார். அதற்கு அங்கிருந்த அதிகாரி, "நாங்கள் கொடுத்த நேரத்தில் தரிசனம் செய்யாததால் டிக்கெட் காலாவதியாகிவிட்டது" என்றார். அப்போது திடீரென உள்ளே வந்த அர்ச்சனா கவுதம் அங்கிருந்த அதிகாரிகளை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார். அத்துடன் ஒரு அதிகாரியை பிடித்து தள்ளினார். தரிசன டிக்கெட்டின் விதிமுறைகளை அதிகாரிகள் அவர்களுக்கு புரிய வைக்க முயன்றனர். ஆனாலும் அவர்கள காதில் எதையும் வாங்கிக் கொள்ளவில்லை. எனினும் கடைசியாக இரண்டாவது முறையாக அவர்களுக்கு ரூ 300 தரிசனத்திற்கு கொடுத்து காலாவதியாகும் முன்பு தரிசனம் செய்ய அறிவுறுத்தினோம்.

அர்ச்சனா புகார்
ஆனால் அர்ச்சனா கவுதம் தரிசனத்திற்கு செல்லாமல் அதிகாரிகள் மீது புகார் கொடுக்க காவல் நிலையத்திற்கு சென்றார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்திய போது எங்கள் தரப்பு ஊழியர் எடுத்த வீடியோவில் அந்த நடிகை ஊழியரிடம் எப்படி தரக்குறைவாக நடந்து ஆபாசமான வார்த்தைகளை பேசினார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நடிகை தான் சிக்கிக் கொண்டதை எண்ணி காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்தார். செப்டம்பர் 1ஆம் தேதி அர்ச்சனாவே ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு நாங்கள் வற்புறுத்தியதாக பொய் கூறுகிறார். இதை யாரும் நம்ப வேண்டாம் என தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
நடிகை புகார்- திருப்பதியில் ஊழியர்கள் தகாத முறையில் நடந்து கொண்டனர். தரிசனத்திற்கு அனுமதிக்கவில்லை.
முடிவு
முடிவு- திருப்பதியில் ஊழியர்களை தாக்கியது நடிகை அர்ச்சனா கவுதம்தான். அவருக்கு ரூ 300 தரிசன டிக்கெட் அளித்தும் அவர் சுவாமி தரிசனத்திற்கு செல்லாமல் டிக்கெட் காலாவதியாகி சென்றுவிட்டு செயல் அதிகாரியின் அ
ரேட்டிங்
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications