தவெக எம்.எல்.ஏ விஜயகுமாருக்கு ஏற்பட்ட சோகம்.. மனைவி காலமானார்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: கும்மிடிப்பூண்டி தொகுதி தவெக எம்.எல்.ஏ விஜயகுமாரின் மனைவி ஷர்மிளா (45) உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த சில நாட்களாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
தவெக எம்.எல்.ஏ விஜயகுமார் மனைவியின் இந்த திடீர் மறைவு தவெக கட்சியினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதியில் கடந்த ஏப்ரம் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தவெகவைச் சேர்ந்த விஜயகுமார் வெற்றி பெற்று தற்போது எம்.எல்.ஏவாக உள்ளார். வழக்கறிஞரான விஜயகுமார், திருவள்ளூர் வடக்கு மாவட்ட தவெக செயலாளராகச் செயல்பட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications
