FACT CHECK:பொறுப்பு டிஜிபி நியமனம்! நாட்டில் வேறு எங்கும் நடக்கலையா? அண்ணாமலை குற்றச்சாட்டு உண்மையா?
சென்னை: தமிழக காவல்துறையின் டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், இந்த பொறுப்புக்கு யார் நியமிக்கப்படுவார்கள் என்று கேள்வி எழுந்திருந்தது. இந்நிலையில் சீனியாரிட்டி அடிப்படையில் 9வது இடத்தில் இருந்த வெங்கட்ராமன் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதை விமர்சித்துள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, இப்படி எங்கும் நடந்ததில்லை என குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் அப்படி பல மாநிலங்களில் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பணியில் காவல்துறை மிகப்பெரிய அளவில் பங்காற்றி வருகிறது. இந்நிலையில் காவல்துறையின் டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதற்கு அடுத்தபடியாக யார் பதவியேற்பார் என்று பெரும் கேள்வி எழுந்திருந்தது.

வழக்கமாக புதிய டிஜிபியாக பதவியேற்க இருப்பவர் குறைந்தது 6 மாதமாவது பதவியில் இருக்க வேண்டும். இந்த தேர்வு குறித்து பெயர் பட்டியலை தயாரித்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு மாநில அரசு அனுப்ப வேண்டும். பட்டியலிலிருந்து மூன்று பெயர்களை தேர்வு செய்து மாநில அரசுக்கு தேர்வாணையம் அனுப்பும். அதில் ஒருவரை டிஜிபியாக நியமிக்கலாம். இதற்கான 10 பேரை உள்ளடக்கிய பட்டியலை தமிழக அரசு அனுப்பியதாகவும், ஆனால் தேர்வாணையம் இன்னும் பதிலை அனுப்பவில்லை எனவும் சொல்லப்படுகிறது.
பட்டியலில் சீமா அகர்வால், ஜி. வெங்கட்ராமன், வினித் வாங்கடே, சந்தீப் ராய் ரத்தோர், வன்னியப் பெருமாள், ராஜீவ் குமார், மகேஷ் குமார் அகர்வால், சஞ்சய் மாத்தூர் என 10 அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் இன்று ஜி.வெங்கட்ராமனை பொறுப்பு டிஜிபியாக தமிழக அரச நியமித்திருக்கிறது. அவர் இன்று பொறுப்பெற்றுக்கொண்டார். அவர் பதவியேற்ற நிகழ்ச்சியில் டிஜிபி அந்தஸ்து கொண்ட பட்டியலில் முதல் 8 இடங்களில் இருப்பவர்கள் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அண்ணாமலை கடுமையான விமர்சனங்களை அடுக்கியிருக்கிறார். "தமிழ்நாட்டில் டிஜிபியாக பொறுப்பேற்று பார்த்திருப்போம். பொறுப்பு டிஜிபி பொறுப்பேற்று பார்த்திருக்கிறோமா? டிஜிபி நியமனத்தில் உச்சநீதிமன்றம் என்ன சொல்றாங்கன்னா, ஒரு டிஜிபி ஓய்வு பெறுவதற்கு ஆறு மாசம் இருக்கிற அப்பவே, புதிய டிஜிபிக்கான லிஸ்ட்டை யுபிஎஸ்சிக்கு அனுப்புங்க, மூன்று பேரை தயார் பண்ணி நாங்கள் உங்களுக்கு கொடுக்கிறோம். அதில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுங்கள் என சொல்கிறது. ஆனா, தமிழக அரச ஆறு மாதமாக ஒரு பெயரையும் அனுப்பல.
முதலமைச்சரின் லிஸ்ட் எடுத்து பார்க்கிறார். சீனியாரிட்டி நம்பர் ஒன் இடத்தில் சீமா அகர்வால் இருக்கிறார். இவர் நம்ம ஆட்சிக்கு எதிரானவர். எனவே தூக்கு, அடுத்து 2வது நம்பர், 3வது நம்பர் என 8 பேரையும் நீக்கி 9வது இடத்தில் உள்ள ஒருவரை பொறுப்பு டிஜிபியாக போட்டுவிட்டு ஜெர்மன் போய்விட்டார். இந்தியாவில் எங்காவது இப்படி நடக்குமா? சீனியாரிட்டி வரிசைப்படித்தான் பதவியை கொடுக்க முடியும். 9வது இடத்தில் இருப்பவரை 8 பேரை தவிர்த்துவிட்டு கொடுக்க முடியாது. இப்படி இருந்தால் காவல்துறை எப்படி சரியாக இயங்கும்? பெண்களின் பாதுகாப்பு எப்படி உறுதி செய்ய முடியும்?" என்று விமர்சித்திருக்கிறார்.
ஆனால் இந்தியாவில் சில மாநிலங்களில் பொறுப்பு டிஜிபிக்கள் பதவியில் இருப்பது தொடர்ந்துதான் வருகிறது. குறிப்பாக பாஜக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் முதல் பொறுப்பு டிஜிபிக்கள்தான் பதவி வகித்து வருகின்றனர். அப்படியெனில் அம்மாநில அரசு பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கவில்லை என சொல்ல முடியுமா? என திமுகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதில் மற்றொரு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச பாஜக அரசு, கடந்த 2024ல் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது. இது, மத்திய அரசின் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உத்தரவு இல்லாமல், மாநில அரசே சுயமாக டிஜிபி-யை நியமிக்க வழி வகுக்கும் வகையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Fact Check:
வெளியான செய்தி:
பொறுப்பு டிஜிபி நியமனம் நாட்டில் வேறு எங்கும் நடக்கவில்லை, பொறுப்பு டிஜிபி நியமனத்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என அண்ணாமலை கூறியிருந்தார்.
முடிவு:
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2022ம் ஆண்டு முதல் அம்மாநிலத்தில் பொறுப்பு டிஜிபிக்கள்தான் நியமிக்கப்பட்டி வருகின்றனர். இன்று வரை அம்மாநிலத்தில் பொறுப்பு டிஜிபிதான் இருக்கிறார்.
ரேட்டிங்:
False
-
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
“கட்சியால் புறக்கணிக்கப்பட்டவர்”.. கரூர் ரோபோக்கள் என விமர்சித்த அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி -
முத்துராமலிங்கத் தேவரின் மறு உருவம் அண்ணாமலையா.. செல்லூர் ராஜு பேச்சால் கொந்தளித்த மாணிக்கம் தாகூர்! -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
சட்டமன்ற தேர்தல்.. எத்தனை நாள் டாஸ்மாக் விடுமுறை? வெளியான முழு விவரம்! -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
அடிச்ச வெயிலுக்கு.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! கொட்டப்போகும் மழை! -
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி












Click it and Unblock the Notifications