வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் இணையதள சேவைக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்ததா? உண்மை என்ன?
டெல்லி: லோக்சபா தேர்தல் நடைபெறும் வாக்குசாவடிகளை சுற்றி 200 மீட்டருக்கு இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறி பரவும் தகவல்கள் உண்மையல்ல என்று இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. தேர்தலை நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டதாக பரவும் புதிய அறிவிப்புகளின் உண்மை தன்மை குறித்து பார்ப்போம்.
17வது லோச்சபாவின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் 16ந் தேதி நிறைவு பெறுகிறது. இதையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் லோச்சபா தேர்தல்கள் எப்போது நடைபெறும் என்பதை கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி அறிவித்தது. இதன்படி ஏப்ரல் மாதம் 19ந் தேதி முதல் ஜூன் 1ந் தேதி முடிய 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்ரல் 19ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ந் தேதி, 2ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ந் தேதி, 3ம் கட்ட தேர்தல் மே 7ந் தேதி, 4ம் கட்ட தேர்தல் மே 13ந் தேதி, 5ம் கட்ட தேர்தல் மே 20ந் தேதி, 6ம் கட்ட தேர்தல் மே 25ந் தேதி, 7ம் கட்ட தேர்தல் ஜூன் 1ந் தேதிகளில் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முதல் கட்ட வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ந் தேதி தமிழ்நாடு (ஒரே நாளில்), உத்தரகாண்ட், மத்தியபிரதேசத்தில் ஒருபகுதி, உத்தரபிரதேசத்தின் ஒருபகுதி, ராஜஸ்தானின் ஒரு பகுதி, சிக்கிம், மேகாலயா, திரிபுரா, அசாமின் ஒருபகுதி, மேற்கு வங்காளத்தின் ஒருபகுதி, மிசோரம், நாகாலாந்து, அருணாசலபிரதேசம், அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் பீகாரில் 4 தொகுதிகள், ஜம்மு காஷ்மீர், மணிப்பூர் ஆகியவற்றில் தலா ஒரு தொகுதி என மொத்தம் 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.
2ம் கட்ட தேர்தல் கேரளா, கர்நாடகம், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், பீகார், அசாம், ஒரு பகுதி, ராஜஸ்தானின் ஒருபகுதி, உத்தரபிரதேசத்தின் ஒரு பகுதி, மணிப்பூரின் மற்றொரு தொகுதி, ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதி என மொத்தம் 89 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ந் தேதி நடைபெற உள்ளது. 3ம் கட்ட தேர்தல் குஜராத் மாநிலம், கர்நாடகத்தின் ஒருபகுதி, அதைப்போல சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், பீகார், அசாம் ஆகிய மாநிலங்களின் ஒருபகுதிகள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதி என மொத்தம் 94 தொகுதிகளுக்கு மே 7ந் தேதி நடைபெற போகிறது.
4ம் கட்ட தேர்தல் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், பீகார், உத்தரபிரதேசம், மராட்டிய மாநிலங்களின் ஒரு பகுதிகள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதி என மொத்தம் 96 தொகுதிகளுக்கு மே 13ந் தேதி நடைபெற போகிறது.
5ம் கட்ட தேர்தல் ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், பீகார், உத்தரபிரதேசம் மற்றும் மராட்டிய மாநிலங்களின் ஒரு பகுதிகள், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதி, லடாக் தொகுதி என மொத்தம் 49 தொகுதிகளுக்கு மே 20ந் தேதி நடைபெற உள்ளது.

6ம் கட்ட தேர்தல் அரியானா, டெல்லி மற்றும் ஒடிசா, மேற்கு வங்காளம், பீகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களின் ஒருபகுதிகள் என மொத்தம் 57 தொகுதிகளுக்கு மே 25ந் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
7ம் கட்ட தேர்தல் பஞ்சாப், சண்டிகார், இமாச்சலபிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட் ஆகியவற்றின் ஒரு பகுதிகள் என மொத்தம் 57 தொகுதிகளுக்கு ஜூன் 1ந் தேதி நடைபெற உள்ளது. 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்று முடிந்த பின்னர் ஜுன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற போகிறது.
இந்த தேர்தலில் 96.8 கோடி பேர் 12 லட்சத்துக்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் மூலம் வாக்களிக்க போகிறார்கள். இவர்களில் 49.7 கோடி பேர் ஆண்கள், 47.1 கோடி பேர் பெண்கள் ஆவார். 1.8 கோடி பேர் முதல்முறை வாக்காளர்கள், 19.74 கோடி பேர் 20 முதல் 29 வயதுக்கு உட்பட்ட இளம் வாக்காளர்கள் ஆவர்..
லோக்சபா தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில், அதற்காக பல்வேறு அறிவிப்புகளை அடிக்கடி வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டதாக ஒரு நோட்டீஸ் ஒன்று வேகமாக பரவி வருகிறது.. அந்த நோட்டீஸில், தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடியை சுற்றி 200 மீட்டருக்கு இணையதள சேவைகள் முடக்கப்பட வேண்டும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தை சுற்றி 250 மீட்டருக்கு இணையதள சேவைகள் ரத்து செய்யப்பட வேண்டும்.. ஜியோ, வோடபோன் இணையதள சேவைகள் வாக்குப்பதிவு நடைபெறும் அன்றும், வாக்கு எண்ணிக்கை அன்றும் 100 மீட்டர் சுற்றளவிற்கு ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 7 அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டதாக தகவல் பரவி வருகிறது.
இதனிடையே தேர்தல் ஆணையம் இணைய தள சேவைகளை முடக்குமாறு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று மறுத்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலேயே அந்த நோட்டீஸ் போலியானது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Fact Check
வெளியான செய்தி
லோக்சபா தேர்தல் நடைபெறும் வாக்குசவாடிகளை சுற்றி 200 மீட்டருக்கு இணையதள சேவைக்கு தேர்தல் ஆணையம் சர்பில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
முடிவு
இணையதள சேவைகளை முடக்குமாறு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் ட்விட்டர் பக்கத்திலேயே போலி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேட்டிங்
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications