தூத்துக்குடியில் கார்களை வாரி சுருட்டி அடித்துப் போனதா வெள்ளம்.. வீடியோவின் பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தூத்துக்குடியில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் கார்கள் அடித்து செல்லப்பட்டதாக வீடியோ ஒன்று அதிகளவில் பகிரப்பட்டு வரும் நிலையில் அதன் உண்மைத் தன்மை என்ன என்று பார்ப்போம்.

கடந்த வாரம், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளி மண்டல சுழற்சி காரணமாக தென் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அதி கனமழை கொட்டித் தீர்த்தது. தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பதிவானது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் 96 சென்டி மீட்டர் அளவில் பெரு மழை கொட்டியது. 4 மாவட்டங்களில் உள்ள அருவிகள், நீர் நிலைகளில் தண்ணீர் வழிந்தோடியது.

Fact check on a video of cars being washed away due to flood in Tuticorin

குறிப்பாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குடியிருப்புகளுக்கு தண்ணீர் புகுந்தது. அதி கனமழையாலும் நீர் நிலைகளில் ஏற்பட்ட உடைப்பாலும் தென் மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் ஏராளமான மக்கள் முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். தேசிய பேரிடர் மீட்புப் படை உதவியுடன் தமிழ்நாடு அரசு மீட்புப் படை, தீயணைப்பு துறை, காவல் துறை, தன்னார்வலர்கள் என பலர் மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை செய்தனர்.

வெள்ளம் காரணமாக பல இடங்களில் கார்கள், லாரிகள், இரு சக்கர வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இந்த நிலையில் வெள்ள பாதிப்பு என்று கூறி பல தவறான, பழைய, போலியான வீடியோக்களும் பகிரப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அதில் ஏராளமான கார்களை வெள்ளம் அடித்து செல்கிறது. பார்ப்பதற்கே பரபரப்பை ஏற்படும் அந்த காட்சியில், "தூத்துக்குடி; இந்த நிகழ்வுகள் என்று மறக்க முடியாது" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

அந்த வீடியோவின் பின்னணி தமிழில் மக்கள் பேசும் சத்தமும் கேட்கிறது. இதனை பலரும் அதிகளவில் பகிர்ந்து வருகின்றன. இது குறித்து உண்மை நிலையை அறிய அந்த வீடியோவின் சில பிரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் தேடலின் மூலம் நாம் ஆய்வு மேற்கொண்டோம். அப்போதுதான் தெரிந்தது அது தூத்துக்குடியில் எடுக்கப்பட்ட வீடியோவே இல்லை என்று. சரி தமிழ்நாட்டின் வேறு பகுதியிலோ, அந்த இந்தியாவின் வேறு மாநிலங்களில் எடுத்ததா என்றால் அதுவும் இல்லை.

ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை தூத்துக்குடி என்று பரப்பி இருக்கிறார்கள். மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பின்னணி தமிழில் பேசும் குரல்களை இணைத்து உள்ளார்கள். டிசாஸ்டர் நியூஸ் என்ற எக்ஸ் பக்கத்தில் கடந்த ஜூலை 2023 அன்று இந்த வீடியோவை பகிர்ந்து உள்ளார்கள். இதன் மூலம் இந்த வீடியோ போலியானது என்பது உறுதியாகிறது.

Fact Check

வெளியான செய்தி

தூத்துக்குடியில் கொட்டித் தீர்த்த கனமழை வெள்ளத்தில் கார்கள் அடித்து செல்லப்பட்ட வீடியோ

முடிவு

மொராக்கோ நாட்டில் எடுத்த வீடியோவை தூத்துக்குடி என்று பரப்பி உள்ளார்கள்.

ரேட்டிங்

Misleading
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+