Fact Check: தவறாக மந்திரம் ஓதியது அனைத்து ஜாதியினரும் அர்ச்சகரலாம் திட்டத்தில் பயின்றவரா? வதந்தி
சென்னை: தை அமாவாசை அன்று ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த போது அர்ச்சகர் ஒருவர் மந்திரத்தில் தை அமாவாசை சுப நாளில் என கூறியிருந்தது அறநிலையத் துறையினர் மீது விமர்சனங்களை குவித்தது.
அதாவது அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தில் பயிற்சி பெற்றவர்தான் இப்படி தவறாக மந்திரம் ஓதினார் என்றும் இந்து அறநிலையத் துறை இந்து மத சடங்குகளை சீரழிக்கிறது என்றும் இந்து அமைப்புகள் சமூகவலைதளத்தில் விமர்சனம் செய்திருந்தன.

இந்த வீடியோ வைரலான நிலையில் தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் தற்போது உண்மைத் தகவலை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
தவறாக மந்திரம் ஓதியது "கிளி ஜோசியர்" : அறநிலையத்துறைக்கு எதிராகப் பரவும் வதந்தி !
வதந்தி
"அனைத்து மதத்தினவரும் அர்ச்சகர் ஆகலாம்; இந்து மத சடங்குகளை சீரழிக்கும் இந்து அறநிலைய துறை." என்று குறிப்பிட்டு தவறாக மந்திரம் ஓதும் புரோகிதரின் காணொளி பகிரப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?
இது முற்றிலும் தவறான தகவல்.
"இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயிலில் நடைபெற்ற தை அமாவாசை சடங்கில் தவறாக மந்திரம் ஓதிய நபர் அனைத்து சாதியினர் அர்ச்சகராகலாம் திட்டத்தில் பயின்றவர் இல்லை. பழனி மலையடிவாரத்தில் கிளி ஜோசியம் பார்த்துக் கொண்டிருந்தவர். அவர் பெயர் சுப்பிரமணியன்.
அக்னி தீர்த்தக் கரையில் இயங்கும் புரோகிதர் சங்கத்தினர் இவரைபோல் 20 நபர்களை அழைத்து வந்து பூணூல் அணிவித்து புரோகிதம் செய்ய வைத்துள்ளனர். இவருக்கும், கோயில் நிர்வாகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை." என்று கோயில் இணை ஆணையர் விளக்கமளித்துள்ளார்.
வதந்தியைப் பரப்பாதீர்!

Fact Check
வெளியான செய்தி
ராமேஸ்வரத்தில் தை அமாவாசையின் போது தவறாக மந்திரம் ஓதியவர், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தில் பயின்றவர், திமுக அரசு தொடர்ந்து இந்து மத சடங்குகளை சீரழிக்கிறது என குற்றம்சாட்டப்பட்டது.
முடிவு
உண்மையில் அந்த நபர் கிளி ஜோசியராம். பழனி மலையடிவாரத்தில் ஜோசியம் சொல்லிக் கொண்டிருந்தவரை பூணூல் போட்டு புரோகிதர் சங்கத்தினர்தான் அக்னி தீர்த்த கடலுக்கு அழைத்து வந்தார்கள். அந்த நபருக்கும் கோயில் நிர்வ
ரேட்டிங்
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications