Fact Check:திருவாரூரில் சாலையை விரிவாக்க..இடிக்கப்படும் கோயில்! கருவறையில் மார்க்கிங்? பரவும் வதந்தி

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: திருவாரூர் வடக்கு வீதி முருகன் கோவிலுக்கு ஆபத்து என்றும், கோவிலை இடிக்க தமிழ்நாடு அரசின் மாநில நெடுஞ்சாலை துறை தீவிரம் காட்டி வருவதாகவும் இந்து முன்னணி குற்றம்சாட்டியிருக்கிறது. இந்நிலையில், அப்படியான எந்த திட்டமும் மாநில நெடுஞ்சாலைத்துறை வசம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு கிராமங்களின் வளர்ச்சிக்கும், நகரத்துடனான அதன் இணைப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த இணைப்புகளைத்தான் மாநில நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்கிறது. எப்படி இணைய வசதிகள் கிராமங்கள் தோறும் பரவியதோ, அதேபோல கிராமங்களின் தனித்துவமான படைப்புகளை நகரங்களுக்கு கொண்டுவரவும், நகரங்களுடனான தொடர்பை சீராக வைத்திருக்கவும் மாநில நெடுஞ்சாலைகள் உதவுகின்றன.

tiruvarur temple

சில நேரங்களில் நெடுஞ்சாலைகள் போடும் பணிகளின்போதும், அதை விரிவாக்கும் பணிகளின்போதும் மரங்கள், குடியிருப்புகளை அகற்ற வேண்டிய சூழல் உருவாகிவிடுகிறது. இருப்பினும் இதற்கான இழப்பீடுகளை மாநில அரசு வழங்கிய பின்னரே இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இப்படி இருக்கையில், திருவாரூரில் சாலை விரிவாக்க பணியின்போது குறுக்கே உள்ள கோயிலை அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுப்பதாக தகவல்கள் வெளியாகி விவாதங்களை கிளப்பியிருந்தது.

ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்திலிருந்து பிரிந்ததுதான் திருவாரூர் மாவட்டம். இதனை சுற்றியுள்ள தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருப்பதை போன்று திருவாரூரிலும் ஏராளமான புனித தலங்கள் இருக்கின்றன. மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருக்கும் சிறு சிறு கோயில்கள், மூலக்கோயிலான திருவாரூர் தியாகராஜர் கோயிலுடன் தொடர்பு கொண்டிருக்கின்றன. திருவாரூர் வடக்கு வீதி முருகன் கோயிலும் அப்படித்தான்.

100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு சொந்தமான, வேளக்குறிச்சி ஆதீனத்தின் அபிஷேக கட்டளையில் 'வடக்கு வீதி முருகன்' கோயில் வருகிறது. இந்த கோயில் மயிலாடுதுறை-திருத்துறைப்பூண்டி மாிநல நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது. இக்கோயில் அமைந்துள்ள பகுதியில் சாலை விரிவாக்க பணிகள் சமீபத்தில் நடந்தன.

இப்படி இருக்கையில், "திருவாரூரில் சாலை விரிவாக்கத்துக்காக நூற்றாண்டு பழமையான பழனியாண்டவர் கோயிலை இடிக்க கருவறையில் மாநில நெடுஞ்சாலைத்துறை குறியீடு வைத்துள்ளது" என இந்து முன்னணி குற்றம்சாட்டியிருந்தது. பேஸ்புக், x தளம் என சோஷியல் மீடியாவில் தகவல் வேகமாக பரவியது.

tiruvarur temple

ஆனால் இந்த தகவல் போலியானது என மாநில நெடுஞ்சாலைத்துறை விளக்கமளித்திருக்கிறது. இதுகுறித்து திருவாரூர் நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்டப் பொறியாளர் அளித்துள்ள விளக்கத்தில், "மயிலாடுதுறை திருத்துறைப்பூண்டி மாநில நெடுஞ்சாலையில் (SH 23) வடக்கு வீதி முருகன் கோயிலிருந்து நாலுகால் மண்டபம் வரை சாலையை அகலப்படுத்தும் பணி முடிவுற்றுவிட்டது.

இந்நிலையில், வடக்கு வீதி முருகன் கோயிலை இடிக்க நெடுஞ்சாலைத்துறை முயல்வதாக பரவும் செய்தி முற்றிலும் தவறானது. நெடுஞ்சாலைத்துறை முருகன் கோவிலை இடிக்க எவ்வித அளவீடோ, மார்க்கிங்கோ செய்யவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இந்து முன்னணி சோஷியல் மீடியாக்களில் பரப்பிய செய்தி வதந்தி என்பது தெரிய வந்திருக்கிறது.

Fact Check

வெளியான செய்தி

திருவாரூரில் சாலை விரிவாக்கத்துக்காக நூற்றாண்டு பழமையான பழனியாண்டவர் கோயிலை இடிக்க கருவறையில் மாநில நெடுஞ்சாலைத்துறை குறியீடு வைத்துள்ளது.

முடிவு

வடக்கு வீதி முருகன் கோயிலை இடிக்க நெடுஞ்சாலைத்துறை முயல்வதாக பரவும் செய்தி முற்றிலும் தவறானது என்றும், கோவிலை இடிக்க எவ்வித அளவீடோ, மார்க்கிங்கோ செய்யவில்லை எனவும் மாநில நெடுஞ்சாலைத்துறை திருவாரூர் உத

ரேட்டிங்

Mostly False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+