மணிப்பூரில் உடலில் ஒட்டுத்துணி இன்றி போலீசை தாக்கிய பெண்? பரவும் வீடியோ.. உண்மையா?
இம்பால்: மணிப்பூரில் தொடர்ந்து வன்முறை நடந்து வருகிறது. இந்நிலையில் தான் உடலில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் பெண் ஒருவர் போலீஸ்காரரை விரட்டி விரட்டி தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. இது மணிப்பூரில் நடந்ததாக கூறப்படும் நிலையில் அது உண்மையா? வாங்க பார்க்கலாம்.
மணிப்பூரில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். இந்நிலையில் தான் மணிப்பூரில் கடந்த மே மாதம் 3ம் தேதி வன்முறை வெடித்தது.

அதாவது அங்கு குக்கி இனக்குழுவினர் பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர். அதேபோல் தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மைத்தேயி இனக்குழுவினர் வலியுறுத்தினர். இதற்கு குக்கி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இவர்கள் 2 பேருக்கும் இடையே கடந்த மே மாதம் 3ம் தேதி பிரச்சனை ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இந்த வன்முறை 59 வது நாளாக தொடர்ந்து வருகிறது. இந்த வன்முறையில் மொத்தம் 120க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்னர். 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக மாநிலத்தை விட்டு வெளியேறி உள்ளனர்.
வன்முறையாளர்கள் அரசியல்வாதிகளின் வீடு, அலுவலகங்களில் தீவைத்தனர். வன்முறையை கட்டுப்படுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எடுத்த நடவடிக்கைகள் கைக்கொடுக்கவில்லை. இதனால் மத்திய அரசும் விழி பிதுங்கிபோய் உள்ளது. மேலும் சிஆர்பிஎப், அசாம் ரைபிள்ஸ், ராணுவம் என 50 ஆயிரம் பேர் பாதுகாப்பிற்காக மணிப்பூரில் குவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 24 மணிநேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே தான் தற்போது வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் பெண் ஒருவர் உடலில் ஒட்டுதுணி கூட இல்லாமல் நிர்வாணமாக போலீஸ்காரரை லத்தியால் அடிக்கிறார். இதில் வலி தாங்க முடியாமல் போலீஸ்காரர் ஓட அவரை விரட்டி விரட்டி அந்த பெண் லத்தியால் தாக்குகிறார். இந்த வீடியோவை பலரும் இணையதளங்களில் பரப்பி விடுகின்றனர்.

அதோடு, ‛‛மணிப்பூரின் நிலைமை இதுதான். இது பெரும் சோகமாகும். ஒரு பெண், நிர்வாணமாக சாலையில் போலீசை துரத்தி அடிக்கிறார். இந்தியாவில் என்ன நடக்கிறது?'' என கேள்வி கேட்டிருந்தார். மேலும் பலரும் இந்த வீடியோவுக்கு தங்களின் பதிவுகளை செய்திருந்தனர். சிலர் சந்தேகமும் கிளப்பினர். அதாவது இந்த வீடியோ மணிப்பூரில் எடுக்கப்படவில்லை. மாறாக வேறு இடத்தில் எடுக்கப்பட்டது என்றனர்.
இதுபற்றி ஆய்வு செய்யப்பட்டது. அப்போது தான் ஷாக் தகவல் வெளியானது. அதாவது நிர்வாணமாக பெண் ஒருவர் போலீசை தாக்கும் இந்த வீடியோ மணிப்பூரில் நடந்தது இல்லை என்பது தெரியவந்தது. இந்த வீடியோ என்பது உத்தரபிரதேசத்தில் நடந்தது. அதாவது 2023 மே மாதம் உத்தர பிரதேச மாநிலம் சந்தவுலியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அதாவது 2023 மே மாதம் சந்தவுலி மாவட்டத்தில் நடந்தது. திருநங்கை சோனு கின்னர் உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மால்தி தேவி 138 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மறு வாக்கு எண்ணிக்கை கோரப்ப்டது. இதில் சோனு கின்னார் 397 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த சமயத்தில் போலீசாருடன் மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து ஏற்பட்ட மோதலில் தான் திருநங்கைகள் நிர்வாணமாக போலீசார் மீது தாக்குதல் நடத்தியதும், ஒரு திருநங்கை லத்தியால் போலீசை விரட்டி சென்றதும் தெரியவந்தது. இதுதொடர்பாக மே மாதத்தில் உத்தர பிரதேச மாநில பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் பத்திரிகையாளர்களும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். இதனால் தற்போது இணையதளத்தில் பரவி வரும் இந்த வீடியோவுக்கும் மணிப்பூர் வன்முறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது குறிப்பிடக்கத்தக்கது.

Fact Check
வெளியான செய்தி
மணிப்பூர் வன்முறையில் உடலில் துணி இல்லாத பெண் ஒருவர் நிர்வாணமாக, போலீஸ்காரரை விரட்டி விரட்டி தாக்குகிறார்.
முடிவு
உண்மையில் இந்த சம்பவம் மணிப்பூரில் நடக்கவில்லை. இந்த சம்பவம் கடந்த மே மாதம் உத்தர பிரதேச மாநிலம் சந்தவுலியில் நடந்த உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும்போது நடந்தது.
ரேட்டிங்
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications