தங்கம் விலை வெறும் 3 மாதங்களில் ரூ.10 ஆயிரம் உயர்வு... டிரம்ப் முடிவால் இன்று பெரிய மாற்றம் வரும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை கடந்த ஓராண்டில் கிட்டத்தட்ட 18000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. தங்கம் விலை கடந்த ஆண்டு இதே ஏப்ரல் 2ம் தேதி அன்று ஒரு கிராம் 6,361 ரூபாய் ஆகவும், ஒரு பவுன் தங்கம் 50888 ரூபாய் ஆகவும் இருந்தது. ஆனால் ஏப்ரல் 1ம் தேதியான நேற்றைய நிலவரப்படி, ஒரு பவுன் தங்கம் ரூ.68,080 ஆக விற்பனையானது. கடந்த 3 மாதங்களில் மட்டும் பவுனுக்கு ரூ.10 ஆயிரத்து 880 அதிகரித்து உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த பரஸ்பரம் வரி இன்று முதல் அமலுக்கு வர உள்ளதால் தங்கம் விலை புதிய உச்சம் தொடலாம்.

2025ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி ரூ.57,200 ஆக 22 கேரட் தங்கம் விலை ஜனவரி 10-ந் தேதி - ரூ.58,280 ஆக உயர்ந்தது.அதன்பிறகு ஜனவரி 16-ந் தேதி - ரூ.59,120 ஆக உயர்ந்தது. அதன்பின்னர் ஜனவரி 22-ந் தேதி - ரூ.60,200 ஆக உயர்ந்தது. அதாவது ஜனவரி மாத இறுதியில் தான் 60 ஆயிரத்தை கடந்தது. ஜனவரி 31-ந் தேதி - ரூ.61,840 ஆக உயர்ந்தது.

Gold Gold rate Trump

பிப்ரவரி மாதத்தை பொறுத்தவரை பிப்ரவரி 4-ந் தேதி - ரூ.62,480 ஆக தங்கம் விலை உயர்ந்தது. அதன்பின்னர் பிப்ரவரி 5-ந் தேதி - ரூ.63,240 ஆக காணப்பட்டது. ஆனால் பிப்ரவரி 11-ந் தேதி - ரூ.64,480 என்கிற அளவில் 22 கேரட் தங்கம் விலை அதிகரித்தது. அந்த விலை ஏற்றத்திற்கு பின்னர் ஒரு மாதமாக சராசரியாக 65000க்குள் இருந்தது.

ஆனால் கடந்த மார்ச் 28-ந் தேதி - ரூ.66,400க்கு உயர்ந்தது. மார்ச் 31-ந் தேதி - ரூ.67,600 என்கிற அளவில் உயர்ந்தது. ஏப்ரல் 1ம் தேதியான நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.68,080க்கு விற்பனையானது. கடந்த 3 மாதங்களில் மட்டும் பவுனுக்கு ரூ.10 ஆயிரம் உயர்ந்திருக்கிறது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.85-ம், பவுனுக்கு ரூ.680-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 510-க்கும், ஒரு பவுன் ரூ.68 ஆயிரத்து 80-க்கும் விற்பனையானது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த பரஸ்பரம் வரி இன்று முதல் அமலுக்கு வர உள்ள நிலையில், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடடில் பணத்தை போட விரும்புகிறார்கள். இதன் காரணமாக பலரும் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கி உள்ளார்கள். இதன் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+