தங்கம் செக்.. ஏற்கனவே அடகு வைத்த தங்க நகைகளை எப்படி திருப்புவது? ஆர்பிஐ புதிய விதியால் சிக்கலா?
சென்னை: தங்க நகைகளை அடகு வைக்க, திருப்ப என்று பல புதிய விதிகளை ஆர்பிஐ வெளியிட்டு உள்ளது. இப்போது இருக்கும் பல விதிகளை மொத்தமாக மாற்றி ஆர்பிஐ வெளியிட்டு உள்ளது.
ஆர்பிஐ வெளியிட்டு இருக்கும் புதிய வரைவு விதியின்படி தங்க நகை மதிப்பில் 75% வரை தான் கடன் கொடுக்க வேண்டும். அதாவது பல நகை கடன் கடைகள் 80 சதவிகிதத்திற்கும் மேல் கடன் வழங்குகின்றனர். தெரிந்த முகங்கள், நண்பர்கள், பாரம்பரிய வாடிக்கையாளர்கள் என்ற காரணங்களுக்காக பல நகை கடன் கடைகள் 80 சதவிகிதத்திற்கும் மேல் கடன் வழங்குகின்றனர். ஆனால் இனி அப்படி வழங்க முடியாது.
உங்களின் நகை 1 லட்சம் ரூபாய் என்றால்.. அதில் 75 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே கடன் வழங்க முடியும். அதேபோல் தங்கம் விலை இன்று திடீரென உயருகிறது என்றால்.. உதாரணமாக இன்று 10000 ரூபாய் உயருகிறது என்றால்.. அதை வைத்து நீங்கள் நகையை அடகு வைக்க முடியாது. கடந்த ஒரு மாத தங்க விலையை சராசரியாக கணக்கிட்டு மதிப்பிட வேண்டும். அதாவது கடந்த 1 மாதத்தில் தங்கத்தின் விலை எவ்வளவு இருக்கிறது என்ற சராசரியாக பார்த்துவிட்டு மட்டுமே கடன் கொடுக்க வேண்டும்.
அதேபோல் நீங்கள் வெறுமனே போய் எல்லா இடத்திலும் நகை அடகு வைக்க முடியாது. நகையை அடகு வைக்க அதன் பில்லை காட்ட வேண்டும். அந்த பில்லில் கடன் கேட்பவரின் பெயர் அவரின் தந்தை பெயர் இருக்க வேண்டும். நகையின் விவரங்கள் அனைத்தும் அந்த கடன் பத்திரத்தில் இருக்க வேண்டும்.

தங்க நகை பற்றிய முழு விவரமும் கடன் ஆவணத்தில் இருக்க வேண்டும். அதேபோல் ஒரு நகை மீது புதிய கடன் வாங்க அதன் மீது முழு வட்டியும் செலுத்த வேண்டும். தங்க பார்களை அடகு வைக்க முடியாது என்ற வாங்க முடியாது என்று விதிகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
தங்க நகைகளை திருப்பி என்ன செய்ய வேண்டும்?
இந்த விதிகளின் தங்க நகைகளை எளிதாக திருப்ப முடியாது. மொத்தமாக 1 வருடத்திற்குள் மொத்தமாக வட்டி, முதல் எல்லாம் செலுத்தியே திருப்பி வேண்டும். அந்த வருடத்தின் முடிவில் மீண்டும் அடகு வைக்க வேண்டும் என்றாலும் மொத்தமாக திருப்பி அதன்பின்பே அடகு வைக்க முடியும்.
ஆனால் இதில் ஒரே ஒரு நல்ல செய்தி இருக்கிறது. தங்கத்தை அடகு வைத்தவர்.. அதை திருப்பி மீட்காத பட்சத்தில் ஏலம் விடும்போது முறையாக ஆர்பிஐ விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டு உள்ளார்.
வங்கிகள் ஏலம் விடும்போது தங்கத்தை முறையாக ஏலம் விட வேண்டும். வங்கிகள் பொதுவாக ஆர்பிஐ விதிகளை பின்பற்றியே தங்கத்தை ஏலம் விடும். ஆனால் சில அடகு கடைகள் அப்படி செய்வது இல்லை.
வங்கி அல்லாத அடகு நிறுவனங்கள் சில விதிகளை பின்பற்றுவது இல்லை. அவைகள் ரிசர்வ் வங்கி விதிமுறைகளை பின்பற்றாமல் தங்க நகைகளை ஏலம் விடுகின்றன. அடகு நிறுவனங்கள் இப்படி செய்வது தெரிந்தால் அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
அதேபோல் மேற்கண்ட விதிகள் அனைத்தும் ஆர்பிஐ கொண்டு வந்துள்ள வரைவு விதிகள் மட்டுமே. முழுமையான அமல்படுத்தப்பட்ட விதிகள் அல்ல. விதிகள் அமலுக்கு வரும் பட்சத்தில் நகைகளை திருப்புவது சிக்கலாகும்.












Click it and Unblock the Notifications