வேலூர் பனை மரத்தில் நடந்த அதிசயம்.. 50க்கும் மேற்பட்ட கிளைகள்.. முனிஸ்வரர் என மக்கள் வியப்பு

Subscribe to Oneindia Tamil

வேலூர் : வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் அருகே 60 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பனை மரத்தில் பல கிளைகளுடன் வளர்ந்து, நுங்கு காய்த்து அதிசயத்தை பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர். பல கிளைகளுடன் இருக்கும் பனை மரத்தை முனிஸ்வரர் என ஆன்மீக பக்தர்கள் சாமி தரிசனம் சிலர் அதிசயமாக பார்த்து ரசித்து வருகின்றனர்.

​
பொதுவாக கிளைகளே இல்லாமல் நேராக வான்நோக்கி வளரும் பனை மரங்களுக்கு மத்தியில், வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே பண மடங்கியிலிருந்து பரதராமி செல்லும் சாலையில் உள்ள குக்கல பள்ளி கிராமத்தில் பல கிளைகளுடன் வளர்ந்துள்ள பனை மரம் ஒன்று அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Miracle involving a palm tree in Vellore Worshipped as a deity due to having 50 branches

பனை மரம், வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய ஒன்றான தடி தாவர இனமாகும். அடிமரம் நேராக வளர்ந்து அதன் உச்சியில் மட்டுமே ஓலைகளும் நுங்கு குலைகளும் விடுவது இதன் இயல்பு. ஆனால், வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் அருகே உள்ள குக்கலபள்ளி கிராமத்தில் சாலை ஓரத்தில் 60 ஆண்டுகளுக்கு மேலாக பனை மரம், தரையிலிருந்து 3 அடி உயரம் வரை வளர்ந்து, ஆச்சரியப்படும் விதமாக 50க்கும் மேற்பட்ட கிளைகளாகப் பிரிந்து வளர்ந்துள்ளது.

ஒவ்வொரு கிளையிலும் தனித்தனியாக ஓலைகளும், நுங்கு காய்களும் காய்த்து செழிப்பாகக் காணப்படுகிறது. இந்த வினோத பனை மரம் குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து, சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும், பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் தினசரி இந்த அதிசய பனை மரத்தைக் காண வருகை தந்து ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

சிலர் இந்த மரத்திற்கு ஆன்மீக சக்தி என்று கூறி முனீஸ்வரர் கடவுளாக வழிபாடும் செய்து வருகின்றனர். அறிவியலோ, ஆன்மீகமோ, அதிசயமோ, எதுவாக இருந்தாலும், வறண்ட நிலப்பகுதியில் கம்பீரமாகப் பல கிளைகளுடன் காட்சியளிக்கும் இந்த பனை மரம், இப்பகுதிக்கு வரும் பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

உண்மையில் நிலவரம் என்ன

பனை மரம் என்பது ஒருவித்திலைத் தாவரக் குடும்பத்தைச் சார்ந்தவை ஆகும். தென்னை, பாக்கு, மூங்கில் போன்றவற்றைப் போலவே பனை மரத்திற்கும் ஒற்றைத் தண்டு மட்டுமே வளரும். எனவே தென்னை போலவே தண்டுக்கு நடுவே பக்கவாட்டுக் கிளைகள் பிரியும் திறன் பனை மரத்திற்கு இயற்கையிலேயே கிடையாது. அப்படி இருக்கையில் எப்படி வேலூரில் பனை மரம் வளர்ந்திருக்கும். பனை மரம் பொதுவாக ஆப்பிக்கல் பட்" என்று வகையில் வளருவதால், மரத்தை மேல்நோக்கி மட்டுமே வளர்க்கும்.

வேலூரில் குறிப்பிட்ட பனை மரம் 60 ஆண்டுகளுக்கு முன்பு இளஞ்செடியாக இருந்தபோது, ஏதேனும் மரபணு மாற்றம், மின்னல் தாக்குதல், பூச்சித் தாக்குதல் அல்லது மனிதர்களின் குறுக்கீட்டால் அதன் உச்சி மொட்டு சேதமடைந்திருக்கலாம் என்றும், இதனால் ஒரே ஒரு முதன்மை மொட்டு வளருவதற்கு பதில், பக்கவாட்டில் பல நூற்றுக்கணக்கான புதிய மொட்டுகள் ஒரே நேரத்தில் உருவாகி, அவை தனித்தனித் கிளைகளாகியிருக்கலாம் என்கிறார்கள். அதனால் தான் குள்ள நிலையிலும் பல கிளைகள் தள்ளி உள்ளது. தாவரவியலில் 'ஃபேசியேஷன்' என்ற அரிதான நிகழ்வாக இதனை வர்ணிக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+