தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் மகள்.. அதிமுகவினர் ஷாக்!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதனின் மகள், மருமகன் ஆகியோர் தவெகவில் இணைந்துள்ளது அதிமுகவினருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு கடந்த 2001, 2011, 2016 ஆகிய மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவர் எஸ்.பி.சண்முகநாதன். அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராகவும் இருந்தவர். தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளராக பொறுப்பு வகித்து வந்துள்ளார். இந்நிலையில், அவரது மகள் தவெகவில் இணைந்துள்ளார்.

SP Shanmuganathan s Daughter Join TVK Sending Shockwaves Through AIADMK Ranks

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், அதிமுகவில் கிளைச் செயலாளராக அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தவர். அதிமுக மாவட்டச் செயலாளராகவும் கைத்தறித்துறை, இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை, பால்வளத்துறை ஆகிய துறைகளில் முன்னாள் அமைச்சராகவும் பதவி வகித்தவர்.

2001ஆம் ஆண்டில் சட்டசபை தேர்தலின் போது ஸ்ரீவைகுண்டம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். பின்னர், அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தார் ஜெயலலிதா. ஒரு வருத்திற்குள்ளாகவே அவரது அமைச்சர் பதவி பறிபோனது.

மீண்டும் 2006ல் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் சீட் கிடைத்த போதிலும் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி டி. செல்வராஜிடம் தோல்வியை தழுவினார். 2011ஆம் ஆண்டில் மீண்டும் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.பி.சண்முகநாதனுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. அதிமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பதவியும் கிடைத்தது.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் எஸ்.பி சண்முகநாதன் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. வெற்றி பெற்ற உடன் பால்வளத்துறை அமைச்சராக பதவியேற்றார். 2021 ஆம் ஆண்டில் மீண்டும் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எஸ்பி சண்முகநாதன், காங்கிரஸ் கட்சியின் ஊர்வசி எஸ்.அமிரதராஜிடம் தோல்வியைத் தழுவினார். கடந்த 2026 சட்டசபை தேர்தலில் மீண்டும் அதிமுக சார்பில் போட்டியிட்ட சண்முகநாதன், 1,186 வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சரவணனிடம் தோல்வி அடைந்தார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக பதவி வகித்து வந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு த.வெ.கவில் இணைந்தார். இதனையடுத்து ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக சண்முகநாதன் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சண்முகநாதனின் மகள் மருத்துவர் பொன்னரசி மற்றும் அவரது கணவர் அசோக் ஆகியோர் தவெக மத்திய மாவட்டச் செயலாளரும், மீன்வளத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகள் பொன்னரசி தவெகவில் இணைந்துள்ளது அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+