திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் செவ்வாய்க்கிழமை உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, வரும் நவம்பர் 24 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு வரும் நவம்பர் 24ஆம் தேதி பௌர்ணமி கிரிவலம் மற்றும் திருக்கார்த்திகை தீப திருவிழா நடைபெற உள்ளது. திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் நிகழ்வை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tiruvannamalai

கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்வான நவம்பர் 24-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணியளவில் கோயில் கருவறையில் பரணி தீபம் ஏற்றப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, மாலை சரியாக 6 மணியளவில் அர்த்தநாரீஸ்வரர் தரிசனத்துடன் 2,668 அடி உயர அண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

வடகிழக்குப் பருவமழை மற்றும் மண் சரிவு அபாயம் காரணமாக, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மகா தீபத்தன்று பக்தர்கள் அண்ணாமலை மலை உச்சிக்கு ஏற மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை முழுமையாகத் தடை விதித்துள்ளது. மேலும், கோயிலுக்குள் பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசனத்திற்குக் கட்டண தரிசன முறை ரத்து செய்யப்பட்டு, இணையதளம் வழியாக விண்ணப்பித்த 3,000 பக்தர்களுக்கு மட்டும் இலவச அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது.

தீபத் திருவிழாவையொட்டி, வரும் நவம்பர் 24ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, வரும் டிசம்பர் 5 ஆம் தேதி (சனிக்கிழமை) திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருக் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக தொலைப்பேசி எண்களை வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க். 04175-233344, 04175-233345 மற்றும் 8072797683 எண்களை தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+