பிஎப்-இல் முழு தொகையும் எடுக்க வேண்டாம்! ஓய்வூதியதாரர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. விரைவில் சூப்பர் வசதி
டெல்லி: நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பிஎப் சந்தாதாரர்களுக்கு இனி ஓய்வு பெற்ற பிறகு பிஎப் கணக்கில் உள்ள தொகையை எடுப்பதில் கூடுதல் வசதிகள் கொண்டு வரப்பட இருக்கிறது. தங்களின் பிஎப் கணக்கில் உள்ள சேமிப்பு தொகையை ஒரே கட்டமாக எடுப்பதற்கு பதிலாக இனி தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் திட்டமிட்டு எடுத்துக்கொள்ளலாம். அதுவரை பிஎப்பில் உள்ள தொகைக்கு வட்டி வருமானமும் கிடைக்கும்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎப்ஒ, பிஎப் விதிகளில் முக்கிய மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதாவது, ஓய்வூதியதாரர்களுக்கு தங்கள் பணத்தை திட்டமிட்டு எடுப்பதற்காக வழி வகை செய்யும் புதிய விதிகளை கொண்டு வரும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிஎப் விதிகளில் மாற்றம்
இதன்படி, வருங்கால வைப்பு நிதியில் உள்ள முழுத் தொகையையும் ஓய்வு பெறும்போது ஒரே தவணையில் எடுக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. அதற்கு பதிலாக முறையாக திட்டமிட்டு எடுக்கக் கூடிய திட்டத்திற்கு (ystematic Withdrawal Plan) ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் தங்களது சேமிப்புத் தொகையை தவணை முறையில் ஓய்வூதியதாரர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில், இன்று நடைபெற்ற மத்திய டிரஸ்டி வாரியத்தின் (CBT) 240-வது கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஏற்பாடு மூலம், ஓய்வூதியதாரர்கள், தவணை முறையில் தங்கள் வருங்கால வைப்பு நிதி சேமிப்பில் இருந்து எடுத்துக்கொள்ளலாம். மீதமுள்ள தொகைக்கு தொடர்ந்து இபிஎப் விதிகளின் படி வட்டி கிடைக்கும். மத்திய அரசின் இந்த புதிய முடிவு 6.32 லட்சம் சந்தாதாரர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எப்படி பயனளிக்கும்?
பிஎப் கணக்கில் உள்ள தொகையை சந்தாதாரர்கள் ஓய்வுக்கு பிறகு ஒரே தவணையாக எடுத்துக்கொள்ளும் வசதி தற்போது உள்ளது. இதனால் ஓய்வு பெற்றவுடன் முழு தொகையும் பிஎப் கணக்கில் இருந்து பெறுவதால், அந்த பணத்தை பயனுள்ள வகையில் முதலீடு செய்வது மற்றும் பாதுகாப்பது என்பது சந்தாதாரர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. ஆனால் புதிய ஆப்ஷனை பொறுத்தவரை, ஒரேகட்டமாக எடுப்பதற்கு பதிலாக, தங்களின் பிஎப் கணக்கில் உள்ள பணத்தை பல்வேறு கட்டமாக எடுத்துக்கொள்ள முடியும்.
எடுக்கப்படாத தொகை பிஎப் கணக்கில் தொடர்ந்து வைத்து இருக்கலாம். இதற்கு வட்டியும் அளிக்கப்படும். இருந்த போதிலும் இந்தத் திட்டத்தின் கீழ் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம், கணக்கில் குறைந்தபட்சம் எவ்வளவு இருப்புத் தொகையை வைத்திருக்க வேண்டும். இந்த வசதியைப் பெறுவதற்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை. இது குறித்த வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று வாய்ப்புகள் வழங்கப்படும்?
முன்மொழியப்பட்டுள்ள திட்டத்தின்படி, பணத்தை திரும்ப பெறுவதற்கு மூன்று கட்டமாக வாய்ப்புகள் வழங்கப்படும் என்று தெரிகிறது. அதாவது, 1. தவணை முறையில் பணம் பெறுவது, 2.மொத்த தொகையில் பகுதியளவை எடுத்துக்கொண்டு மீதமுள்ள தொகையை குறிப்பிட்ட கால இடைவெளியில் எடுத்துக்கொள்வது, 3-வதாக பிஎப் முதலீட்டு தொகையை எடுக்காமல், அந்த தொகையில் இருந்து கிடைக்கும் வட்டியை மட்டும் அவ்வப்பொது எடுத்துக்கொள்வது என மூன்று வகையில் எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்படலாம் என்று பிஎப் வட்டாரங்கள் கூறுகின்றன.




Click it and Unblock the Notifications
