பிஎஃப் பேலன்ஸ் எவ்வளவு இருக்கு? இனி வாட்ஸ்அப்பிலேயே பார்க்கலாம்.. EPFO கொடுத்த சூப்பர் வசதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேலைக்கு செல்லும் பலருக்கும் ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு பிஎஃப் கணக்கில் செலுத்தப்படுகிறது. ஆனால் அந்த கணக்கில் இப்போது எவ்வளவு பணம் இருக்கிறது, நிறுவனம் செலுத்த வேண்டிய தொகையை முறையாக செலுத்தியுள்ளதா என்பதை தெரிந்துகொள்ள பலரும் சிரமப்படுகிறார்கள். ஆனால் இனிமேல் அலுவலகம் செல்ல வேண்டியதில்லை. வெப்சைட்டிலும் தேட வேண்டியதில்லை. உங்கள் செல்போன் ஆப் மூலமாகவே இந்த விவரங்களை தெரிந்துகொள்ளும் வசதியை EPFO அறிமுகப்படுத்தியுள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎப்ஓ, தனது சந்தாதாரர்களுக்கு புதிய வாட்ஸ்அப் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பிஎஃப் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை இனி வாட்ஸ்அப் மூலமாகவே தெரிந்துகொள்ளலாம்.

PF Balance

பிஎஃப் வசதி

அதுமட்டுமல்லாமல், கடைசியாக மேற்கொள்ளப்பட்ட 5 பணப்பரிவர்த்தனைகள், பாஸ்புக் விவரங்கள் போன்றவற்றையும் பார்க்க முடியும். பாஸ்புக்கை டவுன்லோடு செய்யும் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது.

இந்த புதிய வசதியை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நவம்பர் 1-ம் தேதி அதாவது நேற்றைய தினம் தொடங்கி வைத்தார்.

எப்படி பயன்படுத்துவது?

இதற்காக EPFO அறிமுகம் செய்துள்ள 87964 41800 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும். ஆனால், ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்கள் பிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் நம்பரிலிருந்து இந்த மெசேஜை அனுப்ப வேண்டும்.

முதலில் அந்த நம்பருக்கு Hi என்று மெசேஜ் அனுப்பி, அடுத்து வரும் தகவலில் உங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்யலாம். தமிழ் உள்ளிட்ட 10 மொழிகளில் இந்த வசதி கிடைக்கிறது. அதன்பிறகு பிஎஃப் இருப்புத் தொகை, கடைசி 5 பணப்பரிவர்த்தனைகள், பாஸ்புக் டவுன்லோடு என உங்களுக்கு தேவையான வசதியை தேர்வு செய்யலாம்.

பிஎஃப் பேலன்ஸை தெரிந்துகொள்ள உங்கள் மொபைலுக்கு ஒருமுறை பயன்படுத்தும் ஓடிபி அனுப்பப்படும். அந்த நம்பரை சரியாக பதிவு செய்ததும் உங்கள் பிஎஃப் கணக்கில் உள்ள பேலன்ஸை வாட்ஸ்அப்பிலேயே தெரிந்துகொள்ளலாம்... இதனால் ஒவ்வொரு முறையும் இபிஎப்ஓ வெப்சைட்டுக்கு சென்று உள்நுழைந்து விவரங்களை தேட வேண்டிய அவசியம் இருக்காது.

ரூ.1000 பணம் எடுக்க வசதி

இதனிடையே, நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் பிஎஃப் கணக்குகளில் உள்ள பணத்தை எடுப்பதற்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, இன்-ஆக்டிவேட் எனப்படும் செயல்பாட்டில் இல்லாத பிஎஃப் கணக்கில் ரூ.1000 வரை பணம் இருந்தால், அந்த தொகையை பெறுவதற்கு சந்தாதாரர்கள் தனியாக கோரிக்கை படிவத்தை நிரப்ப வேண்டியதில்லை.

சம்பந்தப்பட்ட நபரின் அடையாள விவரங்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, அந்த பணம் நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்... இந்த நடவடிக்கையின் மூலம் சுமார் 1 லட்சம் செயல்படாத பிஎஃப் கணக்குகளில் உள்ள பணத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கணக்குகளில் மட்டும் கிட்டத்தட்ட ரூ.5 கோடி உரிமை கோரப்படாத பணம் இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அதனால் நீண்ட நாட்களாக பிஎஃப் கணக்கில் இருக்கும் சிறிய தொகையை எடுப்பதற்காக இனி தேவையற்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய அவசியம் இருக்காது.

கஸ்டமர்களுக்கு நிம்மதி

பிஎஃப் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வது முதல், கடைசியாக பணம் எப்போது செலுத்தப்பட்டது என்பதை பார்ப்பது வரை ஏகப்பட்ட வசதிகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே பயன்படுத்த முடியும்.

முக்கியமாக, வெப்சைட்களை பயன்படுத்துவதில் சிரமம் உள்ளவர்களுக்கும், அலுவலகத்துக்கு சென்று விவரங்களை பெற நேரமில்லாதவர்களுக்கும் இந்த புதிய வசதி மிகவும் உதவியாக இருக்கும் என்றே நம்பப்படுகிறது...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+