உபியிலும் பாஜக வெற்றிக்கு பாடுபடும் காங்கிரஸ்! கூட்டணிக்கு வந்தாலும், தனித்து நின்றாலும் சிக்கல்தான்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உபி தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. காங்கிரஸ் அதிக தொகுதிகளை கேட்டு அழுத்தம் கொடுப்பதும், தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்படாவிட்டால் தனித்துப் போட்டியிடும் சூழலை உருவாக்குவதும் வாடிக்கையாக உள்ளது.. இதனால் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிந்து பாஜகவுக்கு சாதகமான நிலை உருவாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் 2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. கூட்டணிக்கு இரு தரப்புமே ஓகே என்றாலும் தொகுதி பங்கீட்டில் மிக பெரிய இழுபறி நிலவுகிறது.

Congress

காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி எப்போதும் கூட்டணி பேச்சுவார்த்தைகளின்போது அதிக தொகுதிகளை கேட்பதும், இருப்பினும் அதற்கேற்ப தேர்தலில் வெற்றிகளை பெற முடியாமல் போவதும் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. உத்தர பிரதேசத்திலும் இதே நிலைதான் தான் ஏற்படும் போல தெரிகிறது. 2027 தேர்தலுக்காக காங்கிரஸ் 181 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பட்டியல் அளித்துள்ளது. ஆனால், சமாஜ்வாதி கட்சியோ காங்கிரஸுக்கு சுமார் 24 தொகுதிகளை மட்டுமே வழங்குவது குறித்து ஆரம்ப கட்டமாக பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்து வந்த பாதை

கடந்த மூன்று உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸின் வெற்றி எண்ணிக்கையைப் பார்த்தாலே அக்கட்சியின் பலம் எந்த அளவில் இருக்கிறது என்பது நமக்கு தெளிவாக புரியும்.

2012 தேர்தல்: 355 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 28 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ராஷ்டிரிய லோக் தளத்துடன் கூட்டணி அமைத்து போதிலும் பெரியளவில் வெற்றி பெற முடியவில்லை. தனித்து போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி 224 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தது.

2017 தேர்தல்: சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ், 105 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 7 இடங்களில் மட்டுமே வென்றது. சமாஜ்வாதி 47 இடங்களை பெற்றது. அப்போது வீசிய மோடி அலையால் பாஜக 312 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. யோகி ஆதித்யநாத் முதல்முறையாக முதல்வரானார்.

2022 தேர்தல்: தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. சமாஜ்வாதி 111 இடங்களைப் பெற்ற நிலையில், பாஜக 255 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்தது.

காங்கிரஸ் பலம்

இதில் காங்கிரஸ் பலம் என்ன என்பது தெளிவாக தெரிகிறது. 2012ல் 28 இடங்கள், 2017ல் 7 இடங்கள், 2022ல் 2 இடங்கள் என காங்கிரஸின் வெற்றி எண்ணிக்கை தொடர்ந்து சரிந்துள்ளது. அப்படியிருக்கும் போது, 2027 தேர்தலில் 181 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாக காங்கிரஸ் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதே வேலையா போச்சு

உபி மட்டுமில்லை.. எல்லா இடங்களிலும் காங்கிரஸ் இதையே ஒரு வேளையாக வைத்திருக்கிறது என்றே சொல்லலாம். 2025 பீகார் தேர்தலில் கடைசி வரை தொகுதி பங்கீட்டில் உடன்பாடு செய்யாமல் காங்கிரஸ் இழுத்தடித்தது. ஆர்ஜேடியின் தேஜஸ்வியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க கூட தயக்கம் காட்டியது. இந்தாண்டு தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியிலும் இதேபோல தான் அதிக சீட்களை பெற தொடர்ந்து இழுபறி செய்தது. இதுபோல செய்வது கூட்டணிக்குள் தேவையில்லாத குழப்பத்தையே ஏற்படுத்தும்.

காங்கிரஸ் இப்படி அதிக தொகுதிகளை கேட்டு பெற்றுவிட்டு, தேர்தலில் குறைவான இடங்களில் மட்டுமே வெற்றி பெறுவது வாடிக்கையாக உள்ளது. இது அந்த கூட்டணியின் ஒட்டுமொத்த வெற்றி கணக்கையே பாதிக்கிறது. காங்கிரஸை கூட்டணியில் சேர்க்காவிட்டாலும் பிரச்சினை தான். கூட்டணி இல்லை என்றால் தனித்து போட்டி என இறங்கும் காங்கிரஸ், வெல்ல முடியவில்லை என்றாலும் வாக்குகளை பிரிக்கிறது. எதிர்க்கட்சிகளின் வாக்குகள் இதுபோல காங்கிரஸ் பிரிப்பதும் பாஜகவுக்கே சாதகமாக அமைகிறது.

லோக்சபா தேர்தல்

2024 லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் 6 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 37 இடங்களிலும் வெற்றி பெற்றன. இந்த வெற்றியை முன்னிறுத்தி காங்கிரஸ் அதிக தொகுதிகளை கேட்பதாக கூறப்படுகிறது. ஆனால், லோக்சபா தேர்தல் வேறு.. சட்டசபை தேர்தல் வேறு. எனவே, சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸின் கடந்தகால செயல்பாடுகளை வைத்தே தொகுதி பங்கீடு இருக்க வேண்டு என்று சமாஜ்வாதி கட்சி சொல்கிறது! இதனால் தொகுதி பங்கீட்டில் மிக பெரிய இழுபறி இருக்கும் என்றே தெரிகிறது.

பாஜகவுக்கு சாதகம்

ஒருபுறம் பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற பேச்சு இருக்கிறது. மறுபுறம், யாருக்கு எத்தனை தொகுதிகள் என்ற விவகாரத்தில் கூட்டணிக்குள்ளேயே இழுபறி நீடிக்கிறது. காங்கிரஸ் அதிக தொகுதிகளை கேட்டாலும் பாஜகவுக்கே லாபம், தனித்து போட்டியிட்டாலும் பாஜக சாதகம் என்ற சூழலே இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+