பெங்களூர் தெருவில் பேப்பர் சேகரிப்பவரின் கை, கால்களை கட்டிவைத்து உயிரோடு எரித்த கும்பல்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் சாலையில் கிடக்கும் பேப்பர், அட்டைகளை சேகரித்து விற்பனை செய்து வந்த 45 வயது நிரம்பிய ஒருவரை கட்டிவைத்து உடலில் பெட்ரோல் வைத்து தீவைத்து எரித்த சம்பவம் திடுக்கிட வைத்துள்ளது. இதில் தீக்காயமடைந்த அந்த நபர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

in-bengaluru-homeless-ragpicker-tied-up-and-set-ablaze

பெங்களூர் கிரிநகர் பகுதியில் இன்று காலையில் 45 வயது நிரம்பிய ஒருவர் தெருவில் பேப்பர் சேகரித்து கொண்டிருந்தார். அப்போது அவரிடம் சண்டையிட்ட ஒரு கும்பல் அவரை கட்டிவைத்து உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்தது.

இதில் அந்த நபர் துடிதுடித்துப்போனார். உடனடியாக அங்கிருந்தவர்கள் சென்று அவரை மீட்டனர். அந்த நபர் படுகாயமடைந்துள்ளார். அவர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுபற்றி பெங்களூர் தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் வம்சி கிருஷ்ணா கூறுகையில், ''இந்த சம்பவம் காலை 6 மணிக்கு நடந்துள்ளது. தீக்காயமடைந்த நபரின் பெயர் முகமது சையத். இவர் உடலில் பலத்த தீக்காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் போலீசாரின் 112 ஹெல்ப்லைன் எண்ணுக்கு போன் செய்தனர். போலீசார் விரைந்து சென்றனர். அவரை மீட்டனர். கை, கால் உள்ளிட்டவை கயிற்றால் கட்டி யாரோ அவர் மீது தீவைத்துள்ளனர். முகமது சையத்திடம் விசாரித்தோம். அப்போது சில நபர்கள் வந்து பெட்ரோல் ஊற்றி தீவைத்து சென்றதாக கூறினார்.

முகமது சையத்துக்கு சொந்தமாக வீடு கிடையாது. சாலையோரம் தங்கியிருந்தார். அவரிடம் செல்போன் உள்பட எந்த ஆவணங்களும் இல்லை. சையத்தை கட்டிப்போட்டு உடலில் தீவைக்க முயன்றது யார்? பின்னணி என்ன? என்பதுபற்றி விசாரித்து வருகிறோம்'' என்றார். இதுபற்றி கிரிநகர் போலீசார் வழககுப்பதிவு செய்து தீவைத்த நபரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+