மூக்குத்தி அம்மன் 2 படத்தின் 12 நாள் வசூல் இவ்வளவு தானா? நயன்தாராவுக்கு அடுத்தடுத்து ஏமாற்றம்
சென்னை: நயன்தாராவின் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான மூக்குத்தி அம்மன் 2 படம் தியேட்டரில் வெளியாகி 12 நாட்களை கடந்து இருக்கிறது. முதல் சில நாட்களில் வசூல் கொஞ்சம் அதிகரித்திருந்தாலும், அதற்கு பிறகு படத்தின் வசூல் தொடர்ந்து குறைந்து வருகிறது, இப்போது கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது. இதுவரை இந்தியாவில் மட்டும் 20. 97 கோடி நெட் வசூலும், 24.18 கோடி கிராஸ் வசூலும் கிடைத்துள்ளதாக வெளியிட்டு இருக்கிறது.
நயன்தாரா படங்கள் என்றாலே ஒரு காலத்தில் பெண்களை மையமாக வைத்து உருவாகும் படங்களாக இருக்கும் என்ற பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக மாயா, அறம், கோலமாவு கோகிலா போன்ற படங்களில் அவர் நடித்த விதம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் சமீப காலமாக அவர் நடிக்கும் படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வருகிறதா? என்று கேள்வி எழுந்திருக்கிறது.

மூக்குத்தி அம்மன் 2 வசூல்
நவம்பர் 6ஆம் தேதி வெளியான மூக்குத்தி அம்மன் 2 படத்துக்கு முதல் நாளில் இந்தியாவில் 1.88 கோடி நெட் வசூல் கிடைத்தது. 2வது நாளில் கொஞ்சம் அதிகரித்து 2.45 கோடியாகவும், ஞாயிற்றுக்கிழமை டபுள் மடங்காகி 4.60 கோடியாகவும் வசூல் அதிகரித்தது. அது மட்டுமல்லாமல் திங்கட்கிழமை 5.15 கோடி வசூல் கிடைத்ததாகவும் தகவல் வெளியானது. இதனால் முதல் சில நாட்களில் படத்தின் வசூல் கொஞ்சம் நம்பிக்கை கொடுத்தது. ஆனால் அதன் பிறகு வசூல் பெரிய அளவில் குறைய தொடங்கியது.
குறைந்த வசூல் நிலவரம்
5வது நாளில் 2.10 கோடி, 6வது நாளில் 1 கோடி, 7வது நாளில் 85 லட்சம் என படத்தின் வசூல் குறைந்து கொண்டே வந்துவிட்டது. 2வது வாரத்தில் தியேட்டர்களின் எண்ணிக்கையும் குறைய தொடங்கியது. நவம்பர் 17ஆம் தேதி 12 வது நாளில் இந்தியாவில் 29 லட்சம் நெட் வசூல் மட்டுமே கிடைத்ததாக சாக்நிக் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மொத்த இந்திய நெட் வசூல் 20.97 கோடியாக இருக்கிறது. அதுபோல மூக்குத்தி அம்மன் 2 படத்தின் தயாரிப்பு செலவு சுமார் 90 கோடி முதல் 100 கோடி வரை இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த படத்தின் அதிகாரப்பூர்வமான பட்ஜெட் அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்பெஷல் ஹெஸ்ட்
அதே நேரத்தில் படத்தின் வசூலை பார்த்தால் பெரிய பட்ஜெட்டில் உருவான படத்துக்கு கிடைத்த வரவேற்பு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டியது இருக்கிறது. மூக்குத்தி அம்மன் முதல் பாகத்தை ஆர் ஜே பாலாஜி நயன்தாராவை வைத்து இயக்கி இருந்தார். அதனால் 2வது பாகத்தையும் அவர்தான் இயக்குவார் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் திடீரென சுந்தர் சி இயக்குனர் என்று அறிவிக்கப்பட்டது. அப்போதே படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு வந்தது.
அது போல இந்த படத்தில் நடிகை குஷ்பூ, சினேகா உள்ளிட்டோரும் சிறப்புகள் தோற்றத்திலும் வந்திருக்கிறார்கள். அப்படி இருந்தும் படம் பெரியதாக வசூல் பெறவில்லை. சமீப காலமாகவே நயன்தாரா நடிக்கும் சில படங்கள் அவருக்கு வெற்றி கொடுக்காமல் இருக்கிறது. அந்த வரிசையில் இப்போது மூக்குத்தி அம்மன் 2 படமும் இணைந்து விட்டது. இதை வைத்து சிலர் விமர்சித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
