அரண்மனைக்கிளி பட செல்லம்மா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? வெளியான லேட்டஸ்ட் போட்டோஸ்
சென்னை: பொதுவாக சினிமாவில் சில படங்களில் நடித்த நடிகர்களை ஒரே படத்தின் மூலமாகவே ரசிகர்களின் மனதில் பதிய வைத்துவிடும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் ராஜ்கிரண் இயக்கி, நடித்து, தயாரித்த அரண்மனைக்கிளி படம். இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த காயத்ரியை இப்போதும் பல ரசிகர்கள் செல்லமா என்ற கேரக்டர் மூலமாகத்தான் நினைவில் வைத்திருக்கிறார்கள். அவர் சமீபத்தில் மேக்கப் போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
1993-ல் வெளியான அரண்மனைக்கிளி படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்தவர் காயத்ரி. கிராமத்து பின்னணியில் உருவான இந்த படத்தில் அவருடைய கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமாக அமைந்துவிட்டது. குறிப்பாக இளையராஜாவின் இசையில் உருவான பாடல்கள் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. அந்த படத்தில் காயத்ரி நடிப்பும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து இருத்தது. படத்தில் காயத்ரி நடித்த செல்லம்மா கேரக்டரை பார்த்தால் பெரிய வசனங்கள் இருக்காது, அவருடைய முகபாவனையே அதிகம் பேசும்.

அரண்மனை கிளி பாடல்கள்
காதல், வெட்கம், ஏக்கம் என ஒவ்வொரு உணர்வையும் கண்கள் வழியாக வெளிப்படுத்தி இருப்பார். அதனால் தான் படத்தை பார்த்தவர்கள் பலருக்கும் அவருடைய நடிப்பு தனியாக நினைவில் இருக்கிறது. குறிப்பாக "ராசாவே உன்னை விடமாட்டேன்" பாடலை இப்போது பார்த்தாலும் காயத்ரியின் அந்த வெட்கமான பார்வையும், சின்ன சின்ன முக பாவனைகளும் ரசிக்க வைக்கும். அதேபோல "அடி பூங்குயிலே... பூங்குயிலே.. கேளு, நான் பாட்டெடுத்த காரணத்த கூறு" என்ற பாடலில் அவருடைய ரியாக்ஷனும் ரசிகர்களுக்கு ஃபேவரிட்.
சீரியலில் நடிப்பு
அதனாலேயே இப்போதும் இளையராஜாவின் பாடல்களை விரும்பி கேட்பவர்களுக்கு இந்த பாடல்களும் பிடிக்கும். அரண்மனைக்கிளி படத்திற்கு பிறகு காயத்ரி சினிமாவில் தொடர்ந்து நடிக்கவில்லை. பின்னர் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். தொலைக்காட்சியிலும் அவர் நடித்திருக்கிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பான கோகுலத்தில் சீதை சீரியலில் நடித்த போது பழைய அரண்மனை கிளி படத்தின் காயத்ரியை நினைவுபடுத்தி ரசிகர்கள் பேச தொடங்கினர்.

அரண்மனைக்கிளி படத்தில் ராஜ்கிரண், காயத்ரி மற்றும் வடிவேலு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அந்த படத்தின் கதையும் இளையராஜாவின் பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் இந்த படத்தின் மூலம் அறிமுகமான காயத்திரி தொடர்ந்து பெரிய அளவில் சினிமாவை நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் முதல் படத்திற்கு பிறகு பெரிதாக படங்களில் கவனம் செலுத்தவில்லை.
இன்ஸ்டாகிராம் பதிவு
ரசிகர்களுக்கு அரண்மனை கிளி என்பது வெறும் பழைய படம் மட்டுமல்ல இளையராஜாவின் பாடல்கள், ராஜ்கிரனின் நடிப்பு, வடிவேலுவின் காமெடி என பல நினைவுகளை அந்த படம் தரும். தற்போது காயத்ரி மேக்கப் போடும் ஒரு வீடியோவை seldonartistry என்ற இன்ஸ்டாகிராம் ஐடியில், "OG அரண்மனைக்கிளி அம்மா" என காயத்ரி ஐடியை டேக் செய்து வெளியிட்டு இருக்கின்றனர். இந்த ஐடி கிடைத்ததும் நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா? உடனே அவருடைய ஐடியை செக் பண்ணி பார்த்தும். அவர் இதற்கு முன்பு துல்கர் சல்மான் மற்றும் இனிய இரு மலர்கள் சீரியல் நடிகருடன் எடுத்த போட்டோக்களை எல்லாம் ஷேர் செய்து வருகிறார்கள்.




Click it and Unblock the Notifications
