"50க்கு மேல் வாய்ப்பே இல்லை.." 181 சீட் கேட்கும் காங்கிரஸை லெப்ட் ஹேண்டில் டீல் செய்யும் அகிலேஷ்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பே சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. காங்கிரஸ் தரப்பில் 181 தொகுதிகள் கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அந்த கட்சிக்கு 50 இடங்களுக்கு மேல் ஒதுக்க கூடாது என்று சமாஜ்வாதி கட்சி எம்.பி. எஸ்.பி. சிங் படேல் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக உபியில் யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ள நிலையில், தனது முதல்வர் பதவியை தக்கவைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக இறங்குகிறது. இன்னொரு பக்கம் எப்படியாவது பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் அகிலேஷ் - காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையில் உள்ளது.

Uttar Pradesh Election 2027

காங்கிரஸ்

இருப்பினும், தொகுதி பங்கீட்டில் வழக்கம் போலவே காங்கிரஸ் அதிகபட்ச இடங்களில் போட்டியிட காய் நகர்த்த ஆரம்பித்துவிட்டது. 2022 தேர்தலில் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனாலும், 181 சீட் கொண்ட பட்டியலை அகிலேஷ் யாதவ் தரப்புக்கு கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடங்கும் முன்பே அங்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது போல தெரிகிறது.

அதிகபட்சம் 50 தான்

இது தொடர்பாக சமாஜ்வாதி கட்சி எம்.பி. எஸ்.பி. சிங் படேல், "காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணி பேச்சுவார்த்தையில் அழுத்தம் கொடுப்பதற்காகவே அதிக தொகுதிகளை கேட்கிறார்கள்.. உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் வென்ற 6 லோக்சபா தொகுதிகளிலும் சமாஜ்வாதி கட்சியின் வாக்கு வங்கியே முக்கிய காரணமாக இருந்தது. காங்கிரஸுக்கு என தனிப்பட்ட பலம் பெரியளவில் இல்லை. எனவே அவர்களுக்கு அதிகபட்சமே 50 சீட் தான் தர வேண்டும்" என்றார்.

உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி 111 இடங்களில் வெற்றி பெற்றதுடன், 223 தொகுதிகளில் இரண்டாவது இடத்தையும் பிடித்தது. எனவே, இந்த 334 தொகுதிகளிலும் தான் போட்டியிட வேண்டும் என கருதும் சமாஜ்வாதி, கூட்டணிக் கட்சிகளுக்கு 60 முதல் 62 இடங்கள் மட்டுமே ஒதுக்க முடியும் என நினைக்கிறது.

அகிலேஷ் யாதவ்

அதிலும் குறிப்பாக காங்கிரஸுக்கு 50 தொகுதிகளுக்கு மேல் வழங்க சமாஜ்வாதி விரும்பவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2017 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 104க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 2022ல் நிலைமை அதை விட மோசமானது. அப்படியிருக்கும்போது, அதிக தொகுதிகளை ஒதுக்குவது சரியாக இருக்காது என்றே அகிலேஷ் யாதவ் கருதுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

சமாஜ்வாதி கட்சிக்கும் காங்கிரஸுக்கும் இடையே ஒற்றுமை இல்லை எனவும் தொகுதிப் பங்கீட்டிலேயே இது தெரிகிறது எனவும் பாஜக செய்தித் தொடர்பாளர் அனிலா சிங் விமர்சித்துள்ளார். காங்கிரஸ் ஒரு தேசிய கட்சியாக இருந்தாலும் உத்தர பிரதேசத்தில் வலுவான அரசியல் அடித்தளம் இல்லை என்பதே உண்மை எனவும் அவர் தெரிவித்தார்.

விளக்கம்

இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், எம்.பி. எஸ்.பி. சிங் படேலின் கருத்து கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்து இல்லை என என்று சமாஜ்வாதி கட்சியின் செய்தி தொடர்பாளர் சர்வேஷ் திரிபாதி விளக்கம் அளித்துள்ளார். தொகுதிப் பங்கீடு தொடர்பாக அகிலேஷ் யாதவும், காங்கிரஸ் தலைமைப் பொறுப்பில் உள்ள ராகுல் காந்தி மட்டுமே இறுதி முடிவை எடுப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். யாருக்கு எங்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை பொறுத்தே முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

சமாஜ்வாதி கட்சியின் செய்தித்தொடர்பாளர் இப்படி சொன்னாலும் கூட காங்கிரஸுக்கு அவர்களுக்கு 50 இடங்களுக்கு மேல் ஒதுக்க ரெடியாக இல்லை என்பதே உண்மை. இதனால் வரும் நாட்களில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் மேலும் இழுபறி இருக்கும் என்றே தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+