விஎஸ் பாபு உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. கலங்கி நின்ற குடும்பத்தினருக்கு ஆறுதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பெரம்பூரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ விஎஸ் பாபு உடலுக்கு தமிழக முதல்வர் விஜய் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். விஎஸ் பாபு மறைவால் கலங்கி நின்ற அவரது குடும்பத்தினருக்கு விஜய் ஆறுதல் கூறினார்.

72 நாட்களாக தொடர் சிகிச்சையில் இருந்து தவெக எம்.எல்.ஏ விஎஸ் பாபு இன்று மதியம் மாரடைப்பால் காலமானார். தொடர்ந்து அவரது உடலானது சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டது. தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் விஎஸ் பாபுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்து வருகின்றனர்.

CM Vijay pays tribute to the mortal remains of Kolathur TVK MLA VS Babu

உடல்நலக்குறைவால் காலமான விஎஸ் பாபு உடலுக்கு முதல்வர் விஜய்யும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பெரம்பூரில் உள்ள விஎஸ் பாபு இல்லத்திற்கு சென்ற விஜய், அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது விஎஸ் பாபுவின் மனைவி மற்றும் மகன்களுக்கு தனது ஆறுதலை கூறினார்.

முன்னதாக விஎஸ் பாபு மறைவால் சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலத்தில் தவெக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. மேலும் தவெக சார்பில் ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்கு தவெக சார்பில் நடக்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+