நாளை வெளியாகும் ஓம்.. முதல் நாள் புக்கிங் மட்டும் இத்தனை கோடியா? தனுஷ்க்கு வரவேற்பு எப்படி இருக்கு?
சென்னை: தனுஷ், மம்முட்டி, சாய்பல்லவி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் ஓம் திரைப்படம் நாளை நவம்பர் 20ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆக இருக்கிறது. அமரன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அடுத்ததாக இயக்கியிருக்கும் படம் என்பதால் படத்தின் மீது ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதுவும் இந்த படமும் நிஜ கதையை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
இதனாலையே படம் பற்றிய எதிர்பார்ப்பும் தனுஷ் ரசிகர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. இந்த நிலையில் சாக்நிக் வெளியிட்டுள்ள முன்பதிவு நிலவரத்தின்படி, ஓம் படத்தின் முதல் நாள் புக்கிங் அளவில் 5. 70 கோடியை எட்டி இருக்கிறது. இதில் தியேட்டர்கள் பிளாக் செய்த டிக்கெட்டுகளை நீக்கினால் 5.2 கோடி வசூல் பதிவாகி உள்ளது. முதல் நாளுக்காக மட்டும் 3. 63 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. மொத்தம் 4128 காட்சிகள், 961 திரையரங்குகளில் திரையிடப்படுகின்றன.

ஓம் படத்தின் முன்பதிவு நிலவரம்
இது வெளியீட்டுக்கு முன்பாக நல்ல தொடக்கமாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் முன்பதிவு 2.92, கேரளாவில் 1.02 கோடியும், ஆந்திராவில் 70.26 லட்சம், தெலுங்கானாவில் 69.47 லட்சமும் முன்பதிவு வசூல் கிடைத்துள்ளதாக இந்த ட்ராக்கிங் தகவல் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் அதிகப்படியான காட்சிகள் ஒதுக்கப்பட்டு இருப்பதும் படத்தின் தொடக்கத்துக்கு உதவியாக இருக்கிறது. சென்னையை பொருத்தவரையில் முதல் நாள் புக்கிங் 1.21 கோடி வசூல் பதிவாகி இருக்கிறது.
75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 407 காட்சிகளில் 47 சதவீதம் ஆக்குபன்சி பதிவாகியுள்ளது. இதில் 15 காட்சிகள் ஹவுஸ்புல் ஆகி இருக்கின்றன. கோயம்புத்தூரிலும் 30.90 லட்சம் முன்பதிவு வசூல் கிடைத்திருக்கிறது. இப்படி முதல் நாள் புக்கிங் நல்ல அளவில் இருப்பதால் நாளை படம் வெளியாகும் போது ரசிகர்களின் நேரடி வரவேற்பு எப்படி இருக்கும்? மாலை மற்றும் இரவு காட்சிகளில் புக்கிங் இன்னும் அதிகரிக்குமா. என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.
வெற்றி கிடைக்குமா?
ஏற்கனவே சமீபகாலமாக தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பேச்சு ஓடிக்கொண்டிருக்கும் சமயத்தில் இந்த படம் வெளியாவதால் அவருடைய மதிப்பை கணக்கிடவும் இந்த படத்தின் வசூல் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. சமீபகாலமாக தனுஷ் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறாமல் இருப்பதால் தனுஷுக்கு இந்த படமாவது பெரிய வெற்றியை கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது.
அதுபோல ஓம் படத்தின் கதை என்னவென்றால் செம்மர கடத்தல் பின்னணியில் நடக்கும் ஒரு போலீஸ் ஆபரேஷனை மையமாக வைத்து படம் உருவாகி இருக்கிறது. தனுஷ் ஒரு போலீஸ் அதிகாரியாக, அதுவும் சீக்ரெட் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். இந்த ஆபரேஷனில் யார் உண்மையில் யாருடைய பக்கம் இருக்கிறார்கள்? எந்த நேரத்தில் என்ன திருப்பம் வருகிறது? என்பதுதான் கதையின் சுவாரஸ்யம். மம்முட்டி இதில் வில்லனாக நடித்திருக்கிறார். சாய்பல்லவி போலீஸ் அதிகாரியாக வருகிறார்.
நாளை தெரியும்
ட்ரெய்லரை பார்த்தவர்களுக்கு மம்முட்டி, தனுஷ் இருவருக்கும் இடையிலான மோதல் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதுபோல படத்தில் தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீ லீலா, இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நாளை படம் திரைக்கு வந்த பிறகு விமர்சனங்கள், ரசிகர்களின் கொண்டாட்டம், முதல் நாள் வசூல் என அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும். இப்போதைக்கு முன்பதிவில் கிடைத்திருக்கும் இந்த தொடக்கம் தனுஷ் ரசிகர்களுக்கு உற்சாகம் கொடுத்திருக்கிறது. ஆனால் படத்தின் உண்மையான வெற்றி ரசிகர்கள் தியேட்டரில் படம் பார்த்த பிறகு கொடுக்கும் வரவேற்பில்தான் இருக்கிறது.




Click it and Unblock the Notifications
