நாங்க ஒன்னும் தர்காவில் தீபம் ஏற்ற கேட்கல.. உச்சநீதிமன்றத்தில் ராம ரவிக்குமார் வைத்த வாதம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கல் தூணில், விளக்கு ஏற்றும் வகையில் குழிவான அமைப்பு இருப்பதாகவும், நாங்கள் ஒன்றும் தர்காவில் தீபம் ஏற்ற அனுமதி கோரவில்லை எனவும் வழக்கின் மூலமனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பில் இன்று வாதங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

திருப்பரங்குன்றம் மலை மீது, கார்த்திகை தீபத்தை எங்கு ஏற்றுவது? என்பது குறித்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. இந்த வழக்கில் நேற்று வரை அரசு தரப்பு மற்றும் தர்கா தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று மனுதாரர் தரப்பு வாதங்கள் கேட்கப்பட்டிருக்கின்றன.

Tiruparankundram

மனுதாரர் தரப்பில், ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி வள்ளியப்பன், இந்த தூணை சாதாரண நில அளவை கல் என்கிற வாதங்களை மறுத்தார். நில அளவை கல் எனில்.. அதன் உச்சியில் குழி இருக்காது என்றும், இந்த தூணில் உச்சியில் நெய் மற்றும் பஞ்சுத் திரிகள் கொண்ட இரும்பு கொப்பரையை வைப்பதற்கான பிரத்தேக குழி அமைப்பு உள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

ஆண்டுக்கு ஒருமுறை, கார்த்திகை தீபத்தன்று இரண்டு மணி நேரம் விளக்கு ஏற்றுவதற்காகவே இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க, தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் உள்ள இதே போன்ற பாரம்பரிய தீபத்தூண்களின் புகைப்படங்களை அவர் நீதிபதிகளிடம் சமர்ப்பித்தார்.

கடல் மட்டத்திலிருந்து 1,048 அடி உயரம் கொண்ட திருப்பரங்குன்றம் மலையில், தர்காவுக்கு என வரையறுக்கப்பட்ட குறிப்பிட்ட பகுதிகளை தவிர மீதமுள்ள.. 171 ஏக்கர் நிலமும் கோயிலுக்கு சொந்தமானது என்றும், அடிவாரத்தில் இருந்து 450 அடி உயரத்தில் உள்ள 33 சென்ட் பரப்பளவு கொண்ட நெல்லித்தோப்பு வரை செல்லும் படிக்கட்டுகள் கோயிலுக்கும், அதற்கு மேல் தர்கா நோக்கி செல்லும் படிக்கட்டுகள் இஸ்லாமியர்களுக்கும் சொந்தமானவை என புவியியல் அமைப்பை விளக்கினார்.

தீபம் ஏற்றுவதற்கு பக்தர்கள் தொடர்ந்து தடுக்கப்பட்டதாலும், நீண்ட காலமாக வழக்குகள் நிலுவையில் இருந்தாலும்.. அங்கே அதிகம் ஏற்றும் வழக்கமே இல்லை என்று வாதிடுவது ஏற்புடையதல்ல என்றும் அவர் கூறியிருந்தார். மேலும், தர்காவில் உள்ளே தீபம் ஏற்ற அனுமதி கேட்கவில்லை என்றும், மலையின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஆண்டுக்கு ஒரு முறை வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே தீபம் ஏற்றினால், தர்காவுக்கு எந்த இடையூறும் ஏற்படாது என்றும் அவர் வாதிட்டார். மேலும் கடந்த ஆண்டு உயர்நீதிமன்ற உத்தரவு இருந்த போதும்.. பக்தர்கள் தடுக்கப்பட்டதால் அதிகாரியின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

இப்படியாக, இன்று மூல மனுதாரர் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள எதிர்மனுதாரர்கள் மற்றும் இந்து அமைப்புகளின் வாதங்களை நாளை காலை 10:30 மணிக்கு நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு தொடர்ந்து விசாரிக்க உள்ளது.

வரும் 24ஆம் தேதி கார்த்திகை தீப திருவிழா நடைபெற உள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீதிமன்ற விடுமுறை நாட்கள் என்பதால், நாளை வாதங்கள் முடிந்து நீதிபதிகள் இடைக்கால உத்தரவை பிறப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+